மனச் சோர்வை நீக்கும் சி முத்திரை

செய்முறை,பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

C seal for mental fatigue - Recipe, benefits in Tamil

மனச் சோர்வை நீக்கும் சி முத்திரை | C seal for mental fatigue

சி முத்திரை மனச் சோர்வை நீக்கவல்ல ஒரு சிறந்த முத்திரையாகும். இந்த முத்திரைப் பயிற்சி, மூன்றுவித ரகசியங்களை உள்ளடக்கியது.

மனச் சோர்வை நீக்கும் சி முத்திரை

சி முத்திரை மனச் சோர்வை நீக்கவல்ல ஒரு சிறந்த முத்திரையாகும். இந்த முத்திரைப் பயிற்சி, மூன்றுவித ரகசியங்களை உள்ளடக்கியது.

1 இந்த முத்திரையை முறையாகப் பயிற்சி செய்தால் கவலை, பயம், மகிழ்ச்சியின்மை ஆகியவை அகலும்.

2 நமது கெட்ட நேரம், அதிர்ஷ்டமின்மையை மாற்றக்கூடியது.

3 இந்த முத்திரை உடலுக்கு காந்த சக்தியை அளிப்பதுடன், நமது உள்ளுணர்வைத் தூண்டி, மனச் சோர்வை நீக்கி சக்தியை அளிக்கிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் ஏற்படும் குறைபாடுகளை இந்த முத்திரை நீக்குகிறது. இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவந்தால் அற்புதங்கள் நிகழ்வது உறுதி.

செய்முறை

நமது இரண்டு கைகளையும், இரண்டு தொடைகளின் மீது வைக்க வேண்டும். கட்டை விரலை, சுண்டு விரலின் அடிப் பகுதியில் வைக்க வேண்டும். கட்டை விரலைச் சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூட வேண்டும். இப்போது மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். இப்போது 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஏழு முறை சொல்ல வேண்டும். அந்த ஒலி, வலது காதில் ஒலிக்கும்போது தலைப் பகுதியை அடையும்.

பத்மாசனத்தில் அமர்ந்தபடி இதனைச் செய்யலாம். இப்போது உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடும்போது, கைகளை விரிக்க வேண்டும். நம்முடைய கவலை, பயம், மகிழ்ச்சியின்மை ஆகியவை நீங்கிவிட்டதாக நினைக்க வேண்டும். மீண்டும் இந்த முத்திரையை குறைந்த அளவு ஏழு முறையும், அதிக அளவாக 48 முறையும் செய்யலாம்.

பலன்கள்

1. கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

2. பயம் நீங்கும்.

3. துரதிருஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.

4. மனச் சோர்வு நீங்கும்.

5. உடலின் ஆதாரப் பொருளான நீர்ச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

6. உடலுக்கு காந்த சக்தியை அளிக்கும்.

7. அதிசய நிகழ்வுகள் ஏற்படும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : மனச் சோர்வை நீக்கும் சி முத்திரை - செய்முறை,பலன்கள் [ ] | Yoga Mudras : C seal for mental fatigue - Recipe, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்