ஆழ்ந்த தியானத்தில் இறைவனை காணமுடியுமா?.

இறைவன் சர்வசக்திவான்

[ ஞானம் ]

Can God be found in deep meditation? - God is omnipotent in Tamil

ஆழ்ந்த தியானத்தில் இறைவனை காணமுடியுமா?. | Can God be found in deep meditation?

இறைவன் சர்வசக்திவான். அதாவது சகல சக்திகளும் அவரிடத்தில் உள்ளன. இதனால் அவர் எதையும் சாதிக்க வல்லவர்; அவர் ஒரு மந்திரவாதி; சூன்யத்திலிருந்து இந்த உலகைப் படைத்தவர் ஒவ்வொரு வருடைய எண்ணத்தையும் மாற்றி அமைக்கவல்லவர் என மனிதர்கள் இதுவரை தவறாக பல்வேறு வகைகளில் கருதி வந்தனர். இன்னும் சிலர் இந்த முழு பிரபஞ்சமே இறைவனின் மனம்தான் என்கிற அளவுக்கும் எண்ணி வருகின்றனர். இது பற்றி பலர் வீண் விவாதங்கள் செய்யவும் முற்படுகின்றனர்.

ஆழ்ந்த தியானத்தில் இறைவனை காணமுடியுமா?.

இறைவன் சர்வசக்திவான்

இறைவன் சர்வசக்திவான். அதாவது சகல சக்திகளும் அவரிடத்தில் உள்ளன. இதனால் அவர் எதையும் சாதிக்க வல்லவர்; அவர் ஒரு மந்திரவாதி; சூன்யத்திலிருந்து இந்த உலகைப் படைத்தவர் ஒவ்வொரு வருடைய எண்ணத்தையும் மாற்றி அமைக்கவல்லவர் என மனிதர்கள் இதுவரை தவறாக பல்வேறு வகைகளில் கருதி வந்தனர். இன்னும் சிலர் இந்த முழு பிரபஞ்சமே இறைவனின் மனம்தான் என்கிற அளவுக்கும் எண்ணி வருகின்றனர். இது பற்றி பலர் வீண் விவாதங்கள் செய்யவும் முற்படுகின்றனர்.

 

முதலில் இப்பிரபஞ்சத்தில் மூன்று பிரிவுகள் செயல்படு கின்றன.

1. இறைவன்.

2. மனித ஆத்மாக்கள்.

3. பஞ்ச தத்துவங்கள்.

இரண்டாவது; இரு விதமான சக்திகள் இயங்கி வருகின்றன.

 

1. ஸ்தூல உலகம்.

2. சூட்சும சக்தி.

இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றி ஒரு மகத்தான உலக நாடகத்தை உருவாக்குகின்றன. இதில் இறைவன் ஒரு மிக உயர்ந்த பாகத்தை நடித்துவருகின்றார். இதில் நாமும் நடிகர்கள்தாம். ஸ்தூல நிலையில், மனிதனுக்கும் தத்துவங்களுக்கும் இடையில் நடை பெறும் செயல்கள். சூட்சுமத்தில், ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் உரையாடல் நிகழ்கிறது. அவரை மறத்தல் மற்றும் நினைவு செய்தல் என்கிற விளையாட்டு நடைபெற்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து அதுவே சரித்திரம் என நாம் கணிக்கிறோம்.

 

மூன்றாவது; அளாதியானது (Eternal) என்கிற சொல்லை ஆராய்வோம். இறைவன், ஆத்மாக்கள், மற்றும் பஞ்ச தத்துவங்கள் ஆகிய எதுவுமே புதியதாகப் படைக்கப்படுவதில்லை! ஆகவே இவையாவும் அனாதியானவை! அதாவது சாசுவதமானவை. ஆரம்பம், முடிவு இல்லாதவை. (இது பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்) ஆகவே உண்மையில் இறைவன் ஆத்மாக்களையும் பஞ்ச தத்துவங்களையும் படைப்பவர் அல்ல, இன்னும் பார்க்கப்போளால், இறைவனுக்கு இயற்கையுடன் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. அவர் மின்னல், இடி, புயல், வெள்ளம், பூகம்பம் வானவில் போன்றவற்றை உருவாக்குவ தில்லை. பிறப்பு இறப்பு, விபத்துக்கள் ஆகியவற்றிற்கும் அவர் காரணகர்த்தா அல்ல. இவையாவும் மனிதனின் மனோநிலை மற்றும் ஊழ்வினை காரணமாகவே ஏற்படுகின்றன. இந்த இயற்கையின் விதிமுறைகள் இறைவனின் சட்டத்திற்கு உட் பட்டவை அல்ல. இதை உணராமல், ஏதாவது துக்கம் ஏற்படும் போது இது இறைவனின் சித்தம் என்று கூறி இறைவன் மீது பழி போடுகின்றனர்! இறைவன் சுகக்கடல்; ஆகவே அவர் அனைவருக்கும் சுகத்தையே வழங்குகின்றார்; ஒருபோதும் எவருக்கும் துக்கத்தை அளிப்பவர் அல்ல. இறைவனை அறிந்தவர் எவரும் இல்லை எனக் கூறிவரும்போதே எல்லாம் அவருடைய சித்தம் என்றும் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

 

எரிமலை வெடித்துச் சிதறுவதை அந்த மலையினுள் இருக்கும் கடவுளின் கோபக்கனல் என ஒரு சாரார் எண்ணுவதை மற்றொரு சாரார் கேலியாக சிரிக்கின்றனர்.

 

இறைவன் அன்புக்கடல் என்றால், அவருடைய சித்தமும் அன்பையே பிரதிபலிக்கவேண்டும் அல்லவா? மனிதர்களுக்கு மரணம் விளைவிப்பதோ, அல்லது இறந்தவரை உயிர்ப்பிப்பதோ அவருடைய சித்தம் அல்ல. ஒரு செடியை வளரச்செய்வதோ, அல்லது காற்றை வீசச்செய்வதோ, அவருடைய தொழில் அல்ல. அவர் சர்வ சக்திவான் எதையும் செய்யவல்லவர் என்று நாம்தான் அவரைத் தவறாக கருதி இந்துக்களின் கோவில்களிலும், கிறித்தவ தேவாலயங்களிலும் (சர்ச்) கடவுளே! என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இதை அளியுங்கள், அதைத் தாருங்கள் எனப் பலவாறு நாம் வேண்டிவருவது அறியாமையாகும். எவருக்காவது ஒரு துன்பம் ஏற்பட்டாலோ, அல்லது எவராவது உற்றத்தார் உயிர் நீத்தாலோ, எல்லாம் அவன் செயல் என்று பொதுவாக அனைவருமே கூறுகின்றோம்.

 

ஆத்மா, பரமாத்மா, மற்றும் இயற்கை ஆகியவையும் ஒரு சட்டதிட்டத்திற்கு உட்பட்டே நடக்கின்றன. பகவானும் இந்த சட்டங்களை மீறுவதில்லை. அவர் ஒருவருக்கு ஒன்றை வழங்கி, மற்ற ஒருவருக்கு மறுக்க முடியாது. எந்த ஒருவரின் பாவத்தையும் செய்தவர் முயற்சித்தால் ஒழிய, அவர் தாமே அழிப்பதில்லை. மாறாக அவற்றை அழிக்கும் வழியைத்தான் அவர் கூறுகின்றார். ஆகவே ஒவ்வொருவரும் தாமே முயற்சித்துதான் அந்த பாவச் சுமையை அழிக்கவேண்டும்.

 

பரமாத்மா தமது சக்தியை, உலக நன்மைக்காகவே உபயோகிக்கின்றார். அவரது சக்தியும் செயலும் முற்றிலும் ஆன்மிகமானது. உலகம் மிகவும் தாழ்ந்த நிலைக்கு வரும்போது, தன் சக்தியால் அதை மாற்றுகின்றார்.

 

மனித ஆத்மாக்கள் இந்த பூமிக்கு வந்தபிறகு தொடர்ந்து பல மறுபிறவிகளை எடுக்கின்றன, இதனால் முதலில் இருந்த சக்தி படிப்படியாகக் குறைந்துவருகிறது. இதனால். இயற்கையும் பலவீனமான ஆத்மாவை ஆட்டிப் படைக்கத் துவங்குகிறது. பலவீனமான ஆத்மா தேக உணர்வினால், விகாரத்தின் பிடியில் சிக்குண்டுவிடுகிறது. இதனால் வாயுமண்டலமும் பாதிக்கப்பட்டு பண்புகள் அழிந்து, எங்கும் இருள் சூழ்ந்து கொள்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இறைவன் ஒருவரே சீர்திருத்தம் செய்ய இயலும்.

 

இறைவன் சர்வவியாபி அல்ல.

உண்மையில் பரமாத்மா உலகெங்கிலும் வியாபித்திருக்க முடியுமா? கடவுள் யார் என்று பண்டைய சன்னியாசிகளைக் கேட்டபோது, "யாம் அறியோம்” என்றே கூறிவந்தனர். ஆனால் இப்போதுள்ள சன்னியாசிகள், இறைவன் தூணிலும் இருப்பால் துரும்பிலும் இருப்பான் என்கின்றனர். இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பார் என்றும் கூறுகின்றனர். இறைவா! நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் நீ என்னுடன் இருக்கிறாய் என்று கூறுவதை தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர். இது ஒரு உணர்வுதான். சூரியன் ஒரே இடத்தில் இருந்தாலும், அதன் பிரபாவம், மற்றும் சக்தி பிரபஞ்சத்தில் பல இடங்களுக்குப் பரவுவதால், சூரியனை எவ்வாறு சர்வவியாபி என்று கூறமுடியும்? இந்த வாதம் இறைவனுக்கும் பொருந்தும் ஆகவே இறைவனும் தன் சக்தியை எங்குவேண்டுமானாலும் செலுத்தமுடியும். இதற்காக அவர் சர்வவியாபி ஆகவேண்டியதில்லை.

இறைவன் சர்வவியாபி என்றால், அவருடைய குணங்களான அன்பு, அமைதி, தூய்மை ஆகியவை எல்லா மனிதர்களிடத்திலும், வஸ்துக்களிலும் இருக்கவேண்டும் அல்லவா?

 

அவர் ஞானக்கடல் அவர் என்னுள் நிரம்பி இருந்தால் அறியாமை என்னிடம் எப்படி வரக்கூடும்?

 

பசுவான் சர்வவியாபி என்றால், என்னுடைய எண்ணங்களை எவர்பால் திருப்புவது?

 

இறைவன் சர்வவியாபி என்றால் கோவில்கள் ஆகியவற்றிற்குச் சென்று மனிதர்கள் ஏன் கடவுளை அங்கு நாட வேண்டும்? சாது சன்னியாசிகளிடத்தில் கடவுளைக் காண ஏன் விழைய வேண்டும்?

 

ஒரு ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உலகெங்கிலும் ஒலியைப் பரப்புகிறது; அதை ஒரு ரேடியோ ரிசீவர் சரியான அலை வரிசையில் டியூன் செய்யப்பட்டிருந்தால், அதை அடைய முடிகிறது. அவ்வாறே, மனதும், இறைவனின் அலைவரிசையில் டியூன் செய்யப்படாமல், ஸ்தூல உலகிய, உடல் உணர்வு என்கிற அலைவரிசையில் ஈடுபட்டிருந்தால், இறைவனுடன் தொடர்பு கொள்ள இயலாது. ஆகவே அவருடைய குணங்கள் மற்றும் சக்திகளை அடங்கிய ஒலிபரப்பை நான் அடையவேண்டுமானால், ஆத்ம உணர்வு என்கிற ஈஸ்வரிய அலைவரிசையில் எனது மனம் என்கிற ரேடியோவை டியூன் செய்யவேண்டும். ஆகவே தன் சக்திகளை உலகில் செலுத்த இறைவன் சர்வவியாபியாக இருக்க வேண்டியதில்லை.

 

இறைவன் சர்வவியாபி என்றால், ஞானக்கடலான அமைதிக்கடலான இறைவன் எங்கும் பரவி இருக்கும்போது, அமைதி மற்றும் ஞானத்திற்கு அவசியமே இல்லை.

ஆழ்ந்த தியானத்தில் இறைவனை காணமுடியும்.


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : ஆழ்ந்த தியானத்தில் இறைவனை காணமுடியுமா?. - இறைவன் சர்வசக்திவான் [ ஞானம் ] | Wisdom : Can God be found in deep meditation? - God is omnipotent in Tamil [ Wisdom ]