‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
நேர்மையுடன்
உடன் பொறுமை இருந்தால் பெருமை சேருமா?
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம்
கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக்
கூடும் என்பதில் ஐயமில்லை.
எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே
‘பொறுமை’
எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’ எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க
முடியும்.
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.
ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன்
உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது.
அப்போது எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன்
நடந்து கொண்ட சம்பவம்...
தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக
எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.அவரது
ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்குக் கொண்டு
வரச் சொன்னார்.
பல்பைக் கொண்டு வரும் போது, அது கை தவறி விழுந்து உடைந்து விட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு
மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது.
சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார்.
அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே
எடுத்து வரச் சொன்னார்.
பல்பைக் கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த
வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டு
விட்டனர்.
அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது.
ஆனால் அவரது மனதைக் காயப்படுத்தி விட்டால் அதை
என்னால் சரி செய்து கொடுத்து விட முடியுமா?
மீண்டும் அவனிடமே பணியைக் கொடுத்தால் அவன் தனது
பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன்
பணிபுரிவான். அதனால் தான் அப்படி செய்தேன்’ என்றார்.
எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த பொறுமை உணர்ச்சியின்
எல்லையை அப்போது தான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!
ஆம்.,தோழர்களே..,
ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக
உருமாற்றித் தருவது பொறுமையே !
பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு !
அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும்
துடுப்பாய்ப் பயன் தரும் !✍🏼🌹
.இன்று எங்குப் பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாத தன்மைப் பெருகி விட்டது..
அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து
ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம்
எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது.
இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள்
ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாகப்
பொய்களை உதிர்க்கிறார்கள் என்று கண்டு அறிந்தார்..
இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை
என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார்.
நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று
அவர் கருதினார்.
இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல்
மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.
இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க்
தருகிறார்.
உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்துக் கொள்வது,
இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல், நேர்மையாக இருப்பேன் என்று தனக்குத் தானே உறுதி மொழி எடுத்துக்
கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப் பட்டியல்.
அதே நேரம் நேர்மை பற்றி உலகப் பொதுமறையான திருக்குறளில்
அய்யன் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்.,
''கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி''.,
இதன் கருத்து என்னவென்றால்..,.,
பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன் என்பது.
இன்னொரு குறளில்..,.
''வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.''
மற்றவரை வருத்தப்படுத்தாத எந்தச் சொல்லும் வாய்மையாகக்
கருதப்படும்.
ஆம்.,நண்பர்களே..,
நாம் சொல்லும் சொல் , நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத்
தேடி வரும்...
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு
போராட்டம் தான்
உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண் போகாது |
நேர்மையை விதையுங்கள்..,
பதவியும் பணமும் உங்களை நாடித் தேடி வரும்.🌷🙏🏻💐
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : நேர்மையுடன் உடன் பொறுமை இருந்தால் பெருமை சேருமா? - நேர்மையை விதையுங்கள் [ ] | Encouragement : Can honesty and patience come with pride? - Sow honesty in Tamil [ ]