கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்?

குறிப்புகள்

[ கர்மா ]

Can it be done by karma? How? Why? - Tips in Tamil

கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்? | Can it be done by karma? How? Why?

(1) மாயாவுக்கு வசப்பட்டு தலைகீழான கர்மம் செய்யக்கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.


கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்?


(1) மாயாவுக்கு வசப்பட்டு தலைகீழான கர்மம் செய்யக்கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

 

(2) கர்மா என்பது மிக ஆழமானது.

அனைத்துக்கும் ஆதாரம் கர்மா தான்.

 

(3) இருக்கின்ற எல்லா தத்துவங்களையும் விட சிறந்த தத்துவம்

"கர்ம தத்துவம் ஆகும்".

 

(4) கர்ம தத்துவத்தில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது

 

 (5) ஒரு தவறு செய்தால் மீண்டும் அதை செய்யாதீர்கள் .

இது டிராமா

 

👩‍🦰ஒரு போதும் நாம் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது .

 

👩‍🦰அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும் .

 

(6) நாம் எதை விதைக்கிறோமோ,

அதை தான் அறுபடை பண்ண வேண்டும்.

 

👩‍🦰 நல்ல செயல்கள் செய்தால் நல்லவைகள் நம்மை தேடி வரும்.

 

👩‍🦰 தீயதை செய்யும் போது,தீயவையே வரும்.

 

(7) தீயவை செய்யும் போது நம்

மனட்சாட்சியே

நம்மை வறுத்து எடுத்து விடும்.

👩‍🦰 தர்மராஜ் தண்டையில் இருந்து யாரும் தப்பவே முடியாது.

 

(8) ஹிட்லர் எத்தனை பேரை கொன்றார்.

👩‍🦰 ஆனால் கடைசியில் எதிரிகள் அவரை சூழ்ந்து கொண்ட போது,

அவரே தன்னை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

 

(9) ஞானத்திற்கு வந்த பிறகு,

கர்மத்தின் ரகசியங்களை தெரிந்து கொண்டபிறகு,

தவறு செய்தால்

 

1க்கு 100 மடங்கு தண்டனை கிடைக்கும் .

(10) நாம் அனுபவிக்கும் சுகம்,துக்கம் அனைத்துக்கும் நாம் தான் காரணம்.

நாம் படைத்தது தான் நமக்கு வருது .

👩‍🦰 யார் மீதும் பழியை போடக்கூடாது.

யாரையும் கை காட்டக்கூடாது.

 

(11) பணிவுத் தன்மையோட இருக்க வேண்டும்.

எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருக்க வேண்டும்.

 

(12) ஒருவருடைய வாழ்க்கையில் எப்போது வளர்ச்சி ஏற்படுகிறது?

👩‍🦰வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டத்தை,கடக்கும் போது அவர்களது வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுகிறது.

 

(13) எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,

"எந்த அளவு வலியை அனுபவிக்கிறீர்களோ,

அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.

 

(14) யாராவது பாராட்டிக் கொண்டே இருந்தால் நமக்குள் வளர்ச்சி ஏற்படாது.

👩‍🦰 யாராவது குறை சொல்லும் போது தான்,

நமக்குள் போய் மாற்றத்தை கொண்டு வந்து, வளர்ச்சி அடைவோம்.

 

(15) பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

👩‍🦰நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நாமே தான் பொறுப்பு .

(16) சில சமயம் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும் போது ,உங்களுக்குள் சென்று பாருங்கள் ,

உள்ளே இருக்கும் குழப்பம் போய்விடும்.

 

(17) உள்ளே இருக்கும் குழப்பம் போய்விட்டால், வெளியே இருக்கும் குழப்பமும் போய்விடும் .

 

(18) தனிப்பட்ட மனம்,

பொதுவான மனம்,

இந்த இரண்டு மனமும், இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது.

👩‍🦰இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது .

 

(19) இந்த பிரபஞ்சமே அதிர்வலைகளுடன் கூடிய கடலாக இருக்கிறது.

👩‍🦰 யார் என்ன பேசுகிறார்களோ,

அது ஆகாயத்தில் பதிவாகி விடுகிறது.

👩‍🦰இதை ஒரு போதும் அழிக்கவே முடியாது.

 

(20) அப்ப நம்ம கோவத்தில் பேசுவதை நினைத்துப்பாருங்கள் .

அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

(21) எதைக்கொடுக்கிறோமோ அதுவே திரும்ப வரும்.

👩‍🦰 ஒரு நபருக்கு வெறுப்பை கொடுத்தால்

அதுவே நமக்கு வந்து சேரும் .

👩‍🦰 எனவே என்ன கொடுக்கிறோம் என்பதில் கவனம் வையுங்கள்.

 

(22) எந்த விஷயத்தில் மனம் ஒருமுகப்படுகிறதோ ,

அதே மாதிரியே ஆகிவிடுவோம்.

👩‍🦰 ஒருவரை நினைத்துக் கொண்டே இருந்தால்,அவரை மாதிரியே ஆகிவிடுவோம்.

👩‍🦰 அப்ப கடவுளிடம் உங்கள் மனதை போக்கஸ் பண்ணுங்கள் ,

அவரை மாதிரியே ஆகி விடுவோம்.

 

(23) ஒரு தவறு செய்து விட்டால்,

அதையே திரும்ப திரும்ப செய்யக்கூடாது.

நீங்கள் மாறினால் தான் உலகம் மாறும்.

 

(24) எந்த ஒரு நல்லது செய்தாலும் அதன் பலன் நிச்சயமாக நமக்கு வரும்.

ஆனால் அது வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும்.

 

(25) சின்ன சின்ன காரியங்களை செய்து கொண்டே இருங்கள் ,

அதுவே முழுமையாகி விடும்

 

வாழ்க வளமுடன்!

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

கர்மா : கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்? - குறிப்புகள் [ கர்மா ] | karma : Can it be done by karma? How? Why? - Tips in Tamil [ karma ]