'பங்கஜம்' என்றால் சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலரைக் குறிக்கும். மகாலெட்சுமி வாசம் செய்யும் இடமாகத் தாமரை கூறப்படுகிறது.
பங்கஜ முத்திரை அறிவு மேம்படுமா?
'பங்கஜம்' என்றால் சேற்றில்
மலர்ந்த செந்தாமரை மலரைக் குறிக்கும். மகாலெட்சுமி வாசம் செய்யும் இடமாகத் தாமரை
கூறப்படுகிறது.
தாமரை சேற்றில்
மலர்ந்தாலும் சேறு அதில் ஒட்டிக்கொள்வதில்லை. அதன் இலையிலும் தண்ணீர்
ஒட்டுவதில்லை. தண்ணீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க, தாமரைத் தண்டும் வளர்ந்து
உயரும். தண்ணீரில் மூழ்காமல் இருக்கும். பற்றற்ற நிலைக்குத் தாமரை ஒரு எடுத்துக்
காட்டாகத் திகழ்கிறது.
பங்கஜ முத்திரை, இதயச் சக்கரத்தின்
சின்னமாகக் கூறப்படுகிறது. தூய்மைக்கு அடையாளமாகவும் உள்ளது. எந்தவிதமான சலனங்
களுக்கும் இடம்கொடாமல், நமது இதயத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பங்கஜ முத்திரை, சூரியனைப்போல் தெய்வீகத்
தன்மையுள்ள ஒரு முத்திரையாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வரும்போது, சுயநலம், தனிமையில் இருப்பதான
உணர்வு, தவறாகப் புரிந்து
கொள்ளும் தன்மை ஆகியவை தம்மை விட்டு நீங்கிவிட்டதாக உணரும் நிலை ஏற்படும்.
ஒருவனுடைய எல்லாப் பிரச்னைகளும், இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும் தெய்வீகத் தன்மையின்
காரணமாகத் தீர்ந்துவிடும்.
முதலில் நமது இரண்டு
விரல்களையும் குவித்தபடி வைக்க வேண்டும். அதன் பிறகு, இரண்டு கட்டை
விரல்களையும்,
சுண்டு விரல்களையும்
ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களையும்
குவித்தபடி வைக்க வேண்டும். ஒரு கை, மற்றொரு கையை நோக்கியபடி இருக்க வேண்டும்.
இதை பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் அமர்ந்தபடி செய்யலாம். ஆரம்பத்தில் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.
பின்னர், தினமும் நேரத்தை
அதிகரித்துக்கொண்டே வந்து 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பொதுவாக, நெருப்பை நீர்
அணைத்துவிடும். இரண்டு கட்டை விரல்களும் சேரும்போது, நெருப்பு என்ற பூதத்தால் உடலில்
உள்ள அழுக்குகள், மன அழுக்குகள் நீங்குகின்றன. இரண்டு கண்டு விரல்களும் இணைவதால், நீர் என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டு,
அழுக்குகளும், நச்சுப் பொருள்களும்
உடலை விட்டு நீங்குகின்றன. எனவே, நீரும் நெருப்பும், உடல் என்ற பாத்திரத்தில் இணைந்து செயல்படுகின்றன.
1. உடல் உறுப்புகளில்
வெப்பத்தின் தன்மை அதிகரிக்கிறது.
2. டென்ஷன் நீங்கும்.
3. உடலும், உள்ளமும் தூய்மை
அடையும்.
4. சுறுசுறுப்பு
உண்டாகும்.
5. உடல் அழகுடன்
திகழும்.
6. ரத்த ஓட்டம் சீராக
இருக்கும்.
7. கழிவுப் பொருள்கள்
வெளியேறும்.
8. தெய்வீகச் சிந்தனை
உருவாகி, சுயநலச் சிந்தனை
மறையும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : பங்கஜ முத்திரை அறிவு மேம்படுமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Can knowledge of pankaja mudra improve? - Recipe, Benefits in Tamil [ ]