
இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் படித்த பல பட்டதாரிகளும், அவர்களது பெற்றோர்களும் படும் மனவேதனையையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுபவர்களும் வழிபடக்கூடிய ஆலயமே அக்னீஸ்வரர் ஆலயம்.
திருதலம்:  திருகொள்ளிக்காடு அக்னீஸ்வரர்  ஆலயம் 
வேலை கிடைக்கவில்லையா? இத்தலத்திற்கு செல்லுங்கள்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்.
இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் படித்த பல
பட்டதாரிகளும், அவர்களது பெற்றோர்களும் படும்
மனவேதனையையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள்
இல்லை.
படித்த படிப்பிற்கேற்ற வேலை
கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களும், ஏதாவது
ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுபவர்களும் வழிபடக்கூடிய ஆலயமே  அக்னீஸ்வரர் ஆலயம். 
ஆலயத்தைப் பற்றி சிறு
குறிப்பு :
🌺 1000 - 2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலமாக
திகழ்கிறது.
🌺 இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார். 
🌺 பொதுவாக அனைத்து கோவில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல்
அமர்ந்திருக்கும். ஆனால்,
இத்தலத்தில் 'ப" வடிவில் அமைந்திருப்பது
சிறப்பு.
🌺உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில்
இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியிருப்பது கூடுதல் சிறப்பு.
🌺 இந்த ஆலயத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்ரமணியராக காட்சி
தருகிறார்.
🌺வேலை கிடைக்கவில்லை என்று
நினைப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு செல்வது சிறப்பு.
🌺திருவாரூர் திருக்கொள்ளிக்காடு
அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.
🌺சுவாமிக்கு அபிஷேகம் செய்து
புதுவஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.
🌺 திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள
கோவிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
🌺 ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன்
கோவிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள்.
🌺 வேலை கிடைத்ததும், வாங்கும்
வருவாயில் கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள்.
🌺அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர்
சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள்
தகுதிக்கேற்றபடி வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஓம் சிவாய நம 
சர்வம் சிவமயமே 
எங்கும் சிவநாமம்
ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : வேலை கிடைக்கவில்லையா? இத்தலத்திற்கு செல்லுங்கள் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர். - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Can't find a job? Go to this place Tirupakikadu Agneeswarar. - Tips in Tamil [ ]