எண்ணங்களின் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்த இயலுமா?

தியானப் பயிற்சி

[ ஞானம் ]

Can the flow of thoughts be stopped? - meditation practice in Tamil

எண்ணங்களின் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்த இயலுமா? | Can the flow of thoughts be stopped?

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பாக, மனதின் சிந்திக்கும் சக்தியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தினோம் என்பதைப் பார்க்கவேண்டும்.

எண்ணங்களின் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்த இயலுமா?

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பாக, மனதின் சிந்திக்கும் சக்தியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தினோம் என்பதைப் பார்க்கவேண்டும். சங்கல்ப சக்தி, மற்றும் ஆத்ம உணர்வு பற்றி இப்போது எனக்குக் கிடைத்துள்ள ஓரளவு அறிவின் மூலமாக, என் மனதில் இருந்துவருகின்ற எண்ணங்களாகிய சூறாவளிப் புயலை அகற்றி, ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய இயலும். இந்த ஞானத்தின் மூலமாக, நான் எனது பல்வேறு மனோநிலைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எனக்கும், மற்றவர்களுக்கும், மிகுந்த நன்மையை ஏற்படுத்த முடியும்.

 

இதுவரை நாம் அமைதி மற்றும் சுகத்தை வெளி உலகில் தேடி வந்தோம். இதனால், வெளி உலகின் நடப்புகளின் பிடியில் நாம் இருந்தோம். வெளி உலகத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும். அது என்னை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால், இராஜயோகத்தின் மூலமாக நான் உயர்ந்த எண்ணங்களை என்னிடத்தில் உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் சக்தியினால், எனது ஆத்மா பலசாலியாகிறது. எதையும் தாங்கிக் கொள்ள முடிகிறது. மனதில் திருப்தி ஏற்படுகிறது. அமைதி அனுபவம் ஆகிறது. இதனால். உலகில் எத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் நான் அமைதியை இழப்பதில்லை; மாறாக நான் அமைதிக் கடலாக மாறி, உலகில் அமைதியை ஏற்படுத்தி, அதனைப் பரப்பு வதற்கான கருவியாகவும் ஆகின்றேன்.

 

இதற்காக நான் யோக ஆசனங்கள், பிராணாயாமம், போன்றவைகளைச் செய்யவேண்டியதில்லை. நான் எங்கிருந்த போதிலும் இராஜயோகத்தின் மூலமாக என் எண்ணங்களை உயர்ந்தவையாக இருப்பதில் கவனம் செலுத்தினால் போதும். இந்த இராஜ யோகத்தை பயிற்சி செய்யத் துவங்கியவுடனே ஏற்படும் உயர்ந்த அனுபவங்களினால், இந்த யோகத்தை அதிக நேரம் செய்து வருவதற்கு ஆத்மாவில் ஊக்கம் பிறக்கிறது. ஆத்மாவை சரிவ உணருவதே இந்த ஆன்மீக அனுபவத்திற்கு அஸ்திவாரம் ஆகும். உலகில் பிற தியான முறைகளில், ஒரு விளக்கு, மலர், சுவற்றில் ஒரு புள்ளி, ஒரு சன்னியாசியின் சித்திரம், மந்திரம் ஆக ஏதாவது ஒன்றின்மீது தீவிர கவனம் செலுத்துமாறு கூறப்படுகிறது. இவற்றின் மூலமாக மனம் ஓரளவு வீண் எண்ணங்களின் பிடியிலிருந்து தப்பியிருந்தாலும். அது ஆக்கபூர்வமான எண்ணங்களை உருவாக்குவதில்லை. ஆதலால் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மையும் தாற்காலிகமானதாகவே இருக்கும். ஆனால் இந்த இராஜயோகத்தில் நாம் எண்ணற்ற உயர்ந்த நன்மை அளிக்கவல்ல எண்ணங்களை உருவாக்கி அவற்றின் சொரூபமாகவே நம்மை உணர்ந்துவருவதால், இதனால் கிடைக்கும் பலன் நெடுங்காலத்திற்கு நன்மை அளிக்கிறது. ஆத்மாவாகிய நான் என் எண்ணங்கள் என்கிற சிறகுகளின் மூலமாக என்னுடைய வீடான ஆத்ம உலகைச் சென்றடைந்து எனது அனாதியான குணங்களை அனுபவம் செய்கின்றேன். நான் இந்த இராஜயோகத்தைப் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது, முதலில் என் மனதை என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டு, எனது உடலின் ஈர்ப்பிலிருந்தும் விடுவித்துக்கொண்டு, எனது மனதை எனது தந்தையான பரமாத்மா இருக்கும் ஆத்ம உலகின்பால் செலுத்துகிறேன். அங்கு நிலவிவரும் ஆழ்ந்த அமைதியை நான் என் எண்ணங்கள் மூலமாக அனுபவம் செய்யும்போது நான் அந்த அமைதி சொரூபமாக மாறுகின்றேன். இவ்வாறு என் எண்ணங்களை மிகுந்த கவனத்துடன் ஒரே திசையில் திருப்புவதன் மூலமாக என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த இயலுகிறது. இந்த அமைதியின் அனுபவம் நான் இதுவரை உணர்ந்திராத, ஆனந்தம் மற்றும் சுகத்தை அளிப்பதால், நான் இந்த உயர்ந்த அனுபவத் திலேயே திளைத்திருக்க விரும்புகின்றேன். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் மீண்டும் இந்த அனுபவத்தை உணர விரும்புவதால், எனது யோகப்பயிற்சியும் தீவிரமடைகிறது. இதனால் நான் அடையும் நற்பலன்களும் அதிகரிக்கின்றன.

 

தியானப் பயிற்சி.

கீழ்க்காணும் வாக்கியங்களைப் படித்து அவற்றை அனுபவம் செய்யுங்கள்.

உங்களை ஆத்மா என்று உணருங்கள். நான் யார்?

நான் ஒரு ஆத்மா...

ஒரு ஒளி வடிவான சக்தி...

எனது மிகச்சிறிய உருவத்தை அளக்க முடியாது....

இந்த கர்மேந்திரியங்களை இயக்குபவன் நான் தான்...

நான் எனது நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் இருந்து வருகிறேன்...

நான் எளிதாக என்னைச் சுற்றிலும் உள்ள உலகிலிருந்து விலகிக் கொள்கிறேன்.....

இன்றைய பிரச்சனையிலிருந்து விடுபடுகிறேன்...

எனது உண்மையான சுய தர்மம் ஆன சாந்தியை அனுபவம் செய்கிறேன்....

நான் ஒரு அன்புடைய ஆத்மா....

இந்த உலகில் உள்ள அனைவரும் என்னைப் போன்ற ஆத்மாக்கள்தாம்.

அவர்கள் அனைவரும் பிரகாசித்துக் கொண்டிருக் கின்ற ஆத்மாக்கள்தாம்.

அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள்.

நான் இப்போது முழு அமைதியை அனுபவம் செய்து வருகின்றேன்.

 

ஆத்மாவின் வீடான ஆத்ம உலகத்தை நினைவு செய்தல்.

நான் ஒரு ஆத்மா. எனது கவனம் முழுவதும் இதில்தான் குவிந்துள்ளது....

இந்த ஸ்தூல உலகம் என்னை ஒருபோதும் வசீகரிப்ப தில்லை.

எனது மனத்திரையில் நான் சென்றடைய வேண்டிய இடத்தைக் காண்கின்றேன்....

அது ஒரு ஒளிமயமான உலகம்....

அது இந்த சூரிய சந்திரன் மற்றும் நட்சத்திர மண்டலத்திற்கு அப்பால் இருக்கிறது...

பொன்மயமான ஒளியுடன் அது விளங்குகிறது....

எனது எண்ணங்கள் என்கிற சிறகுகள் மூலமாக அங்கு ஆத்மாவாகிய நான் இந்த ஸ்தூல உலகத்தை விட்டு பறந்து செல்கின்றேன்...

என்னை ஒரு பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளி உருவான ஆத்மாவாக உணர்கின்றேன்....

நான் எனது இயற்கையான அனாதியான திவ்ய குணங்களான அமைதி, சாந்தி, அன்பு, சக்தி, ஆனந்தம் ஆகியவற்றை அனுபவம் செய்கின்றேன்....

இந்த ஆத்ம உலகத்தை, எனது இனிமையான வீட்டை உணருகின்றேன்.....

இந்த வீட்டை நினைவு கூர்கின்றேன். ஸ்தால உலகம் என் நினைவில் இருந்து மறைந்து விட்டது.. பொன்நிற ஒளி சூழ்ந்துள்ள இந்த எனது வீட்டில். நான் சாந்தியை நாற்புறங் களிலும் பரப்பி வருகின்ற பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மா நான்......

நெடுங்காலமாக எனது வீட்டைத் தேடிவந்தேன். இப்போதுதான் அங்கு வந்தடைந்து விட்டேன், இங்கு எங்கும் அன்பு நிறைந்துள்ளது..... நிறைந்துள்ளது.... எங்கும் திருப்தி.... அமைதி

 

ஆத்மாவின் சுய ஸ்திதியை நினைவு கூர்வது:

நான் ஸ்தூல உலகிலுள்ள உடல்களிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து, தத்துவத்தின் பிடியிலிருந்து விலகியிருக்கிறேன்....

எனது இனிய வீட்டில் ஒரு பிரகாசித்துக்கொண்டிருக்கும் ஆத்மாவாக நான் விளங்குகின்றேன்....

தூய்மையை, சாந்தியை ஆனந்தத்தை முழுமை யான சுதந்திரத்தை அனுபவம் செய்கிறேன்.....

பளு ஏதும் இன்றி லேசாக நான் இருக்கின்றேன்.....

முன்பு நான் இங்கு இருந்துவந்தேன்...

இப்போது வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் நான் இங்கு வந்து விட்டேன்....

இங்கு முழு அமைதி நிலவுகிறது....

நான் எனது உண்மையான குணங்களை அனுபவம் செய்கிறேன்.....

ஓம் சாந்தி!


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : எண்ணங்களின் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்த இயலுமா? - தியானப் பயிற்சி [ ஞானம் ] | Wisdom : Can the flow of thoughts be stopped? - meditation practice in Tamil [ Wisdom ]