இறைவனின் அருளைப் பெற பல வழிகள் உள்ளன. அதில், குண்டலி யோகமும் ஒன்று. தனக்குள் இருக்கும் இறைவனை, அந்தப் பரம்பொருளை அடைய உதவுவது குண்டலி யோகமாகும்.
குண்டலினி முத்திரை தாம்பத்திய
வாழ்க்கையை சிறப்பாக்குமா?
இறைவனின் அருளைப் பெற பல வழிகள் உள்ளன. அதில், குண்டலி யோகமும் ஒன்று. தனக்குள் இருக்கும் இறைவனை,
அந்தப் பரம்பொருளை அடைய உதவுவது குண்டலி யோகமாகும்.
குண்டலினி என்பது உடலில் உறங்கிக் கிடக்கும் சக்தி' என்பது சித்தர்களின் வாக்காகும். இந்தக் குண்டலினி
யேகத்தில், குண்டலினி சக்தியானது மூலாதாரத்தில் ஒரு பாம்பு
போன்று முச்சுருளாகச் சுருண்டு படுத்துறங்கும் நிலையில் இருக்கிறது. உறக்க
நிலையில் இருப்பதை எழுப்ப இந்தக் குண்டலினி சக்தி கை கொடுக்கும். இந்தக் கலைக்கு 'குண்டலினி யோகம் என்று பெயர்.
தந்திர யோகத்தில், குண்டலினி
யோகத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதன்படி, பாலுணர்ச்சி
தூண்டப்படுவது குண்டலினி சக்தியினால் என்ற கருத்து உள்ளது. குண்டலினி முத்திரை,
ஆண்பாலுக்குரிய தன்மையையும், பெண்பாலுக்குரிய
தன்மை யையும் ஒருங்கிணைக்கிறது. இதற்கும் மேலாக, நற்பண்புகளுக்கு
எடுத்துக் காட்டாகத் திகழ, நம்மிடம் உள்ள சக்தியையும்,
அண்டவெளி சக்தியையும் ஒன்று சேர்க்கிறது.
குண்டலினி முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால், குண்டலினி சக்தி தூண்டப்பட்டு பாலியல் உணர்வு
அதிகரிக்கும்.
இரண்டு கை விரல்களையும் தளர்வாக வைக்க வேண்டும். பிறகு, இடது கையை முஷ்டியாக மடக்கி கீழ்ப்புறமாக வைத்து,
அதன்மேல் வலது கையை முஷ்டியாக மடக்கி வைக்க வேண்டும். இடது கை
ஆள்காட்டி விரலை நீட்டி, வலது கை விரல்களுக்குள் விட
வேண்டும். வலது கை விரல்கள் இடது ஆள்காட்டி விரலை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
வலது கை பெரு விரலை, இடது கை ஆள்காட்டி விரலோடு பதியச் செய்ய
வேண்டும்.
இதை பத்மாசனத்தில் இருந்து செய்ய வேண்டும். கழுத்து, முதுகு ஆகியவை நேராக இருக்க வேண்டும். சுவாசத்தை
சீராக இழுத்து விட வேண்டும்.
இந்த முத்திரையைத் தினமும் மூன்று வேளை 15 நிமிடங்கள் செய்து வர வேண்டும். பிறகு, செய்யும் நேரத்தைப் படிப்படியாக அதிகரித்து, 45
நிமிடங்கள்வரை செய்யலாம். இந்த முத்திரையை தேவையான அளவுக்கு மட்டும் செய்தால்
போதும். ஆண்மை உணர்வுகள் அதிகரிக்கத் தொடங்கும்போது நிறுத்திவிட வேண்டும்.
யோகாவில் பயிற்சி பெற்றவரின் வழிகாட்டுதல்களின்படி செய்வது நல்லது.
1. பாலியல் தொடர்பான உணர்வுகள் அதிகரிக்கும்.
2. பாலியல் உறுப்புகளுக்கு அளப்பறிய ஆற்றலை அளித்து
புத்துயிரூட்டுகிறது.
3. தீய சிந்தனைகள் மாறும்.
4. உயிர்ச் சக்தி பலமடையும்.
5. ஆன்மிகச் சிந்தனை வளரும்.
6. தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : குண்டலினி முத்திரை தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக்குமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Can the Kundalini seal make married life better? - Recipe, time scale, benefits in Tamil [ ]