விஷ்ணு கோவில்களில் உட்காரலாமா

குறிப்புகள்

[ பெருமாள் ]

Can Vishnu sit in temples - Notes in Tamil

விஷ்ணு கோவில்களில் உட்காரலாமா | Can Vishnu sit in temples

ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். கோவில்களில் அதுவும் பழமையான கோவில்களில் ரசவாதம் போல் சில அறிவியல்களும். அதற்கு புலப்படாத பல அதிசய., அமானுஷ்யங்களும் உண்டு. கோவிலில் உள்ள இறைவனின் தெய்வீக அதிர்வலைகளை முழுமையாக வாங்கி அதை நமக்கு கொடுப்பதே கோவில்களில் உள்ள கொடிமரம். அதனால் தான் கொடிமரத்தின் முன் நாம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்கிறோம். மேலும் நமஸ்காரம் செய்த பின். கொடிமரத்தின் முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யும் பொழுது. வீட்டினில் நாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு அடங்காத மனம் கோவில்களில். அதுவும் புராதன கோவில்களில் அடங்கும். நீங்கள் உங்களது நியாயமான ஆசையை ஆழ்மனதில் நினைத்தவாறே கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல் இருக்கிறதே. அதை விட சிறந்த பரிகாரம் வேறு எதுவும் இல்லை. செலவே இல்லா பரிகாரம். அவ்வாறு தொடர்ந்து நீங்கள் கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து உங்களது ஆழ் மனதில் உள்ள ஆசையை நினைத்தவாறே , அந்த கோவிலில் இருக்கும் மூல மூர்த்தியை பிராத்தித்தவாறே தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களின் நியாயமான ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும். இவ்வாறு கொடிமரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல். சிவன் கோவில்களிலும் செய்யலாம். விஷ்ணு கோவில்களிலும் செய்யலாம். சிவன் கோவில்களில் உட்கார்ந்து வர வேண்டும். ஆனால் விஷ்ணு கோவில்களில் உட்கார கூடாது என்று யார்? சொன்னது.

விஷ்ணு கோவில்களில் உட்காரலாமா?

 

ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். கோவில்களில் அதுவும் பழமையான கோவில்களில் ரசவாதம் போல் சில அறிவியல்களும். அதற்கு புலப்படாத பல அதிசய., அமானுஷ்யங்களும் உண்டு.  கோவிலில் உள்ள இறைவனின் தெய்வீக அதிர்வலைகளை முழுமையாக வாங்கி அதை நமக்கு கொடுப்பதே கோவில்களில் உள்ள கொடிமரம். அதனால் தான் கொடிமரத்தின் முன் நாம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்கிறோம்.

 

மேலும் நமஸ்காரம் செய்த பின். கொடிமரத்தின் முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம்  செய்யும் பொழுது. வீட்டினில் நாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு அடங்காத மனம் கோவில்களில். அதுவும் புராதன  கோவில்களில் அடங்கும். நீங்கள் உங்களது நியாயமான ஆசையை ஆழ்மனதில் நினைத்தவாறே கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல் இருக்கிறதே. அதை விட சிறந்த பரிகாரம் வேறு எதுவும் இல்லை. செலவே இல்லா பரிகாரம். அவ்வாறு தொடர்ந்து நீங்கள் கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து உங்களது ஆழ் மனதில் உள்ள ஆசையை நினைத்தவாறே , அந்த கோவிலில் இருக்கும் மூல மூர்த்தியை பிராத்தித்தவாறே  தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களின் நியாயமான  ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும்.

 

இவ்வாறு கொடிமரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல். சிவன் கோவில்களிலும்  செய்யலாம். விஷ்ணு கோவில்களிலும்  செய்யலாம்.

 

சிவன் கோவில்களில் உட்கார்ந்து வர வேண்டும்.  ஆனால்  விஷ்ணு கோவில்களில் உட்கார கூடாது என்று யார்? சொன்னது.

 

அவ்வாறு ஏதேனும் வைஷ்ணவ புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதா? மதுரகவி ஆழ்வாரை தவிர்த்து பெருமாள் மீது பாசுரம் பாடிய 11 ஆழ்வார்கள். ஏதாவது ஒரு இடத்தில் அவ்வாறு சொல்லியுள்ளார்களா? இல்லை ஸ்ரீமத் ராமானுஜர், நிகமாந்த தேசிகர் போன்ற ஆச்சாரியர்கள் அவ்வாறு சொல்லியுள்ளார்களாபிள்ளை பெருமாள் ஐயங்கார், பிரதிவாதி பயங்கரம்  போன்ற வைஷ்ணவ பெரியோர்கள் அவ்வாறு  சொல்லியுள்ளார்களா?

 

பெருமாளை நாம் சேவித்து விட்டு அங்கே சில நிமிடங்கள் கண்ணை மூடி பெருமாளின் திவ்ய மங்கள சொரூபத்தை மனதினில் தியானித்தால் நிச்சியம் நல்லதே நடக்கும்...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

பெருமாள் : விஷ்ணு கோவில்களில் உட்காரலாமா - குறிப்புகள் [ ] | Perumal : Can Vishnu sit in temples - Notes in Tamil [ ]