ஆகாய முத்திரையில் பட்டற்ற நிலையை அடையலாமா?

செய்முறை, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Can we achieve celibacy in the air seal? - Recipe, Benefits in Tamil

ஆகாய முத்திரையில் பட்டற்ற நிலையை அடையலாமா? | Can we achieve celibacy in the air seal?

ஆகாயத்துக்கு பிரபஞ்ச சக்தி, அண்டவெளி, சப்தம் என்று பல பெயர்கள் உண்டு. நமது உடலில், தொண்டைக்குழியை ஆகாயத் தோடு தொடர்புபடுத்திச் சொல்வாரர்கள்.

ஆகாய முத்திரையில் பட்டற்ற நிலையை அடையலாமா?

ஆகாயத்துக்கு பிரபஞ்ச சக்தி, அண்டவெளி, சப்தம் என்று பல பெயர்கள் உண்டு. நமது உடலில், தொண்டைக்குழியை ஆகாயத் தோடு தொடர்புபடுத்திச் சொல்வாரர்கள். 

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் நிறம் கறுப்பு. அதிதேவதை, சதாசிவன். வாயு சப்தம், ஸ்பரிசம் என்ற குணங்களைக் கொண்ட ஆகாயம்தான், நாம் காதால் கேட்கும் ஓசைக்குக் காரணமாக இருக்கிறது.

ஆகாயத்தில் ஒன்றும் இல்லை. இது, சூன்யம் என்ற தத்துவத்தை விளக்குகிறது. தியானத்தின் முடிவில் மனம் வெற்றிடமாக, அதாவது சூன்யமான நிலையை அடையும். இந்த நிலையை அடைய ஆகாய முத்திரை உதவுகிறது.

செய்முறை

நடுவிரல் எனப்படும் பாம்பு விரலின் முன் பகுதியால், பெரு விரல் என்ற கட்டை விரலின் தலைப் பகுதியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இதைச் செய்ய வேண்டும்.

ஆகாயமான நடு விரலும், அக்னியான பெரு விரலும் இணையும்போது அகம்பாவம் அகன்று அடக்கம் உண்டாகும். ஞானம் பிறக்கும். இந்த இரண்டு விரல்களும் சேரும்போது, அவற்றில் உள்ள சக்தி தூண்டப்படுகிறது. சப்தத்தை உணரக்கூடிய காது தூண்டப்படுகிறது. அதனால், உள்ளே இருக்கும் ஆன்மாவின் சப்தத்தையும், வெளியில் இருக்கும் அண்டவெளி சப்தத்தையும் அறிய முடிகிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு எலும்புகளில் சிறிய துவாரங்கள் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படலாம். மற்றும் எலும்புகள் மெலிந்து உடையலாம். இந்த நோய் நீங்க இந்த முத்திரை உதவும்.

பலன்கள்

1. காதில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

2. கேட்கும் சக்தி அதிகரிக்கும்.

3. காதில் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

4. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

5. மன அமைதி உண்டாகும்.

6. மனத்தில் தெளிவு பிறக்கும்.

7. எலும்புகள் வலுப்பெறும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : ஆகாய முத்திரையில் பட்டற்ற நிலையை அடையலாமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Can we achieve celibacy in the air seal? - Recipe, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்