மகர முத்திரை கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் போக்குமா?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Capricorn under eye dark circles go away? - Recipe, time scale, benefits in Tamil

மகர முத்திரை கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் போக்குமா? | Capricorn under eye dark circles go away?

மகர முத்திரை என்றால் முதலை முத்திரை என்று பெயர். 'மகர என்ற வடமொழிச் சொல்லுக்கு முதலை என்று பெயர்.

மகர முத்திரை கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் போக்குமா?

மகர முத்திரை என்றால் முதலை முத்திரை என்று பெயர். 'மகர என்ற வடமொழிச் சொல்லுக்கு முதலை என்று பெயர். முதலைக்குத் தண்ணீரில் பலம் அதிகம். அது நீண்ட ஓய்வை எடுத்துக்கொள்வதன் மூலம், தனது பலத்தை அதிகரித்துக்கொள்கிறது. அதேபோல், இந்த முத்திரையும் நமக்கு பலத்தை அளிக்கவல்லது.

இந்த முத்திரை, சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது. மனத் திருப்தி, மகிழ்ச்சி ஆகியவற்றையும் அளிக்கிறது. மேலும், கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்களையும் அகற்றுகிறது.

செய்முறை

ஒரு கையை இன்னொரு கையின் உட்புறம் வைக்க வேண்டும். அதாவது, ஒரு கை மேற்புறமும், மற்றொரு கை கீழ்ப்புறமும் இருக்க வேண்டும். கீழ்ப்புறம் இருக்கும் கையின் கட்டை விரலை, மேற்புறம் இருக்கும் கையின் சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் வழியாக உள்ளங்கையின் நடுவில் பொருத்தி இருக்குமாறு வைக்க வேண்டும். இதேபோல், மேல்புறம் இருக்கும் கையின் கட்டை விரல், கீழ்ப்புறம் இருக்கும் கையின் மோதிர விரலுக்கும் கீழே இருக்குமாறு வைக்க வேண்டும்.

நேர அளவு

தினமும் மூன்று வேளையும், பத்து நிமிடங்கள் வரை செய்து வர வேண்டும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இருந்து இதைச் செய்யலாம். மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும். மகர முத்திரை செய்யும் காலத்தில் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். நல்ல புல்வெளியில் அமர்ந்து இந்த முத்திரையைச் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

பலன்கள்

1. சிறுநீரகப் பையில் ஏற்படும் கோளாறுகள் அகலும்.

2. மன இறுக்கம் நீங்கும்.

3. தன்னம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

4. சிறுநீரகம் நன்கு செயல்படும்.

5. உடலில் சக்தி அதிகரிக்கும்.

6. மனத் திருப்தி உண்டாகி, மகிழ்ச்சி ஏற்படும்.

7. கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் அகலும்.

8. சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : மகர முத்திரை கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் போக்குமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Capricorn under eye dark circles go away? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்