நல்ல மணம் நிறைந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள். அப்படி தான் உருவத்தில் சிறிய மற்றும் நல்ல மணம் கொண்ட ஏலக்காயிலும் லட்சுமி தேவி குடியிருக்கிறாள். ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதைத் தவிர, நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
ஏலக்காய் பரிகாரம்...
நல்ல மணம் நிறைந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று
சொல்வார்கள். அப்படி தான் உருவத்தில் சிறிய மற்றும் நல்ல மணம் கொண்ட ஏலக்காயிலும் லட்சுமி
தேவி குடியிருக்கிறாள். ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதைத் தவிர, நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
ஜோதிடத்தின் படி, ஏலக்காய்
பரிகாரம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறைக்க உதவகிறது. குறிப்பாக
ஏலக்காய்க்கு ஒருவரை பணக்காரக்கும் சக்தி உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.
நீங்கள் பணப்
பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் பணப்பையில் 5 ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இது நிதி பிரச்சனைகளை நீக்கி, வருமானத்தை அதிகரிக்க
உதவும். இதன் பலனானது ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் தெரியும் வேண்டுமானால்
முயற்சித்துப் பாருங்கள்.
குடும்பத்தில்
சண்டைகள் அதிகம் ஏற்படுகிறதா? அப்படியானால் தினமும் உங்கள் சட்டைப் பையில் 3 ஏலக்காயை வைத்திருங்கள். இது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க
உதவகிறது. முக்கியமாக இந்த பரிகாரம் கணவன் மனைவிக்குள் உள்ள சண்டைகளை நீக்க
உதவுகிறது.
ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஏலக்காய் கொடுப்பது நல்லது. இதனால்
தம்பதிகளுக்கு இடையே உள்ள காதல் அதிகரிக்கும்.
தினமும் காலையில்
குளிக்கும் போது 2 சிறிய ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு குளிக்க
வேண்டும். முக்கியமாக அப்படி குளிக்கும் போது உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில்
சொல்லிக் கொண்டே குளிக்க வேண்டும். இப்படி செய்வதனால், மனதில்
நல்லெண்ணம் மேம்பட்டு, நிதி பிரச்சனைகளும் தீரும்.
உங்களுக்கு அலுவலகத்தில்
பதவி உயர்வு வேண்டுமா? அப்படியானால் ஒரு பச்சை துணியை எடுத்து, அதில் 4-5 ஏலக்காயை வைத்துக் கட்டி, அதை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
மறுநாள் அந்த ஏலக்காய் மூட்டையை யாரிடமானது கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம்
வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உங்கள் ஜாதகத்தில்
சுக்கிரன் பலவீனமாக இருந்தால், 2 ஏலக்காயை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைக்க
வேண்டும். தண்ணீர் பாதியானதும், அதை குளிக்கும் நீரில் அதை
ஊற்றி, அந்நீரால் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும்
போது 'ஓம் ஜெயந்தி மங்கள காளி பத்ரகாளி' என்று சொல்ல வேண்டும். இப்படி செய்வதால் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகும்.
உங்கள் வாழ்க்கையில்
ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், லட்சுமி தேவியை வணங்கும் போது, 3 ஏலக்காயை எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி, பிரச்சனைகள்
நீங்க வேண்டுமென்று மனதில் தேவியை வேண்டி,
ஏலக்காயை வையுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஏலக்காய் பரிகாரம்... - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Cardamom Remedy... - Tips in Tamil [ ]