தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெறும் முருகன் கோயில்களில் ஒன்று, சென்னையில் உள்ள கந்தக்கோட்டம் எனப்படும் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
சென்னை கந்தகோட்டம்!
தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெறும்
முருகன் கோயில்களில் ஒன்று, சென்னையில்
உள்ள கந்தக்கோட்டம் எனப்படும் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும்
பாரிமுனைக்கும் இடையே நடுநாயகமாகப் பூங்காநகர் பகுதியில் இந்த கந்தக்கோட்டம் அமைந்திருக்கிறது.
சென்னையின் அனைத்துப் பகுதியில் இருந்தும் போக்குவரத்து வசதி இருக்கிறது.
மனிதனின் எந்தவொரு பிரச்சனையையும் போக்கும்
கண் கண்ட தெய்வமாக விளங்கும் கந்தக்கோட்ட முருகனைத் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள்
இங்கே வந்து செல்கிறார்கள்.
இங்கே தேவியரோடு ஸ்ரீமுத்துக்குமார
சுவாமி அருளாட்சி புரிகின்றார். இங்கே பள்ளியறை பூஜையின்போது, பாலையும் வெள்ளைப் பணியாரத்தையும் படைத்து, அதைப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
ஆலயம் வடக்கு நோக்கி எழிலான ராஜகோபுரத்துடன்
அமைந் துள்ளது. பைரவர், வீரபத்திரர், கணபதி, வீரபாகு, நவக்கிரக சன்னிதி களும் இருக்கின்றன.
சித்திரை மாதத்தில் 108 சங்காபிஷேகம்
இங்கே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
காலை ஆறு மணி முதல் பிற்பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : சென்னை கந்தகோட்டம்! - முருகன் [ முருகன் ] | Murugan : Chennai Kantakottam! - Murugan in Tamil [ Murugan ]