வட்டிக்குப் பணம் கொடுத்தல், நகை அடகு பிடித்தல் முதலான தொழில்களைச் செய்பவர்களை செட்டியார் என்று பொதுவாகச் சொல்வர். 'செட்டி' என்று ஒரு குலமும் உண்டு.
செல்லும் செல்லாது
செட்டியாருக்குத் தெரியும்
வட்டிக்குப் பணம் கொடுத்தல், நகை அடகு பிடித்தல் முதலான தொழில்களைச் செய்பவர்களை செட்டியார் என்று
பொதுவாகச் சொல்வர். 'செட்டி' என்று ஒரு
குலமும் உண்டு.
யாழ்ப்பாணத்தில் 'செட்டியார்
தெரு' என்று ஒரு தெரு உண்டு. கொழும்பில் 'செட்டித்தெரு' என்று ஒரு தெரு உண்டு. மட்டக்களப்பில்
'செட்டிப்பாளையம்' என்று ஒரு ஊர்
உண்டு.
ஒரு செட்டியார் கொஞ்சப் பணமும் நகைகளும் எடுத்துக் கொண்டு வேறொரு
ஊருக்குச் சென்றார்.
அவர் திட்டமிட்டபடி பகலில் ஒரு காட்டுப் பாதையைக் கடக்க
முடியவில்லை.
எங்காவது தங்கிச் செல்ல நினைத்தார்.
அது சாத்தியப்படவில்லை.
யாராவது வழித்துணைக்கு வந்தால் நல்லது என நினைத்தார். அப்போது
ஒருவன் அந்த வழியில் வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு ஆண்டி.
கையில் பணமில்லாதவனை ஆண்டி என்று கூறுவது வழக்கம்.
அவன், தான் அந்தக்
காட்டு வழியில் செல்ல இருப்பதாகக் கூறினான். செட்டியார் அவனோடு சென்றார்.
நன்றாக இருட்டி விட்டது.
செட்டியார் இரவிலே பிரயாணம் செய்ய விரும்பவில்லை. அதனால் “காட்டில்
தங்கிச் செல்வோம்" என்றார்.
ஆண்டியும் சம்மதித்தான்.
செட்டியார் பணத்தையும் நகைகளையும் வைத்திருந்ததனால் பாதுகாப்பாக, காட்டுக்குள் ஒரு மரத்தின் கீழ் இரவைக் கழிக்க
விரும்பினார்.
ஆண்டியோ தெரு ஓரமாகப் படுத்திருக்க விரும்பினான்.
"திருடர் பயம் இருப்பதால் காட்டுக்குள்
படுப்பதே நல்லது” என்றார் செட்டியார்.
தன்னிடம் பணம் இல்லாததால் தனக்குப் பயம் இல்லை என்று சொல்லி ஆண்டி
தெருவோரமாகப் படுத்து நித்திரையாகிவிட்டான்.
இரவில் திருடர்கள் வந்தனர்.
இருட்டு என்பதால் சரியாக வழி தெரியவில்லை.
ஆண்டியிலே கால்பட்டு விட்டது.
ஆண்டி விழித்து விட்டான்.
திருடர்களில் ஒருவன் ஆண்டியில் தான் தன் கால் இடறியது என்று
தெரியாமல்.
“மரக்கட்டை ஒன்று கிடக்கிறது" என்றான்.
ஆண்டிக்கு தன்னை மரக்கட்டை என்று திருடன் சொன்னது பிடிக்கவில்லை.
அவமானமாக இருந்தது.
உடனே ஆண்டி சொன்னான்.
“மரக்கட்டை என்றால் இடுப்பில் அரைப் பணத்தைக் கட்டி
வைத்திருக்குமா” என்று.
திருடர்கள் உசாரானார்கள். தீவட்டியைக் கொளுத்திப் பிடித்துப்
பார்த்தார்கள்.
மரக்கட்டையல்ல. மனிதன் தான்.
ஆண்டியின் இடுப்பிலே அரைஞாண் கயிற்றில் (அறுநாக்கொடி) கட்டியிருந்த
அரைப் பணத்தை எடுத்து வெளிச்சத்தில் பார்த்தார்கள். ஒரு திருடன் அப்பணத்தை நன்றாக
உற்றுப்பார்த்து விட்டு. “அது செல்லாக்காசு" என்றான்.
“ஆண்டிக்கு அது அவமானமாக இருந்தது."
"செல்லும் செல்லாது செட்டியாருக்குத்தான்
தெரியும்" என்றான். “இந்த நேரத்தில் செட்டியாருக்கு எங்கே போவது"
என்றான் ஒரு திருடன்.
“உள்ளுக்கு ஆலமரத்துக்குக் கீழ் கிடக்கிறார்
செட்டியார். வாருங்கள் போய்க் கேட்போம்” என்று சொல்லி செட்டியாரிடம் திருடர்களை
அழைத்துச் சென்றான் ஆண்டி.
திருடர்கள் செட்டியாரிடமிருந்த பணத்தையும் நகைகளையும் திருடிச்
சென்றார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சிந்தனை சிறு கதைகள் : செல்லும் செல்லாது செட்டியாருக்குத் தெரியும் - குறிப்புகள் [ ] | Thought short stories : Chettiar knows that it is not possible to go - Tips in Tamil [ ]