40 ஏக்கர் பரப்பளவில், திசைக்கு ஒரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம்
சிதம்பர ஆலயம்!
40 ஏக்கர் பரப்பளவில், திசைக்கு ஒரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம்.
இந்த ஆலயத்தில் உள்ள கிழக்கு ராஜ கோபுரத்தில் 108 பரத நாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களைக் காண முடிகிறது.
இங்கு மூலவர் சிலை இருக்கும் இடமே, 'கனக சபை' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு
கனகசபை என்ற பெயர் பெற்றது!
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும்
ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்
கலைக்கும், கட்டடக் கலைக்கும் சிறப்புப் பெற்றது!
ரத்தினத்தால் செய்யப்பட்ட நடராஜரின்
விக்கிரகமும், ஆதி சங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும்
இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சிதம்பர ஆலயம்! - கனக சபை [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Chidambara Temple! - Kanaka Sabha in Tamil [ spirituality ]