ஒப்புரவு அறிதல்

அதிகாரம் : 22

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Cognition - Authority : 22 in Tamil



எழுது: சாமி | தேதி : 16-07-2023 08:33 pm
ஒப்புரவு அறிதல் | Cognition

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு எனஆற்றும் கொல்லோ உலகு.

ஒப்புரவு அறிதல்

அதிகாரம் : 22

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

எனஆற்றும் கொல்லோ உலகு.

உலக மக்களிடம் கைமாறு பெறாமல் மழை பெய்கிறது. அதுபோலத் தன் கடமையாகிய உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.

212. தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

ஒருவன் முயன்று ஈட்டிய செல்வம் எல்லாம் தகுந்தவர்களுக்கு உதவுதற்கே ஆகும்.

213. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

விண்ணுலத்திலும் மண்ணுலகத்திலும் பிறருக்குக் கொடுத்து உதவுவதை விட மேலான செயல் இல்லை.

214. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

உலக நெறியை அறிந்து பிறருக்கு உதவுபவன் உயிர் வாழ்பவன். உதவாதவன் செத்தாருள் வைக்கப்படுவான்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

உலக நெறிக்கேற்ப உதவும் கொடை குணம் உள்ளவனது செல்வமானது, ஊர்மக்கள் அருந்தும் குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்றதாகும்.

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்.

பயன் தரும் பழமரம் ஊர் நடுவில் பழுத்ததைப் போன்றதும், உதவும் பண்புடையான் செல்வமாகும்.

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

ஒப்புரவாளனிடம் உள்ள செல்வமானது மருந்து மரத்தின் எல்லா பகுதிகளும் மக்களுக்குப் பயன்படுவதை போன்றதாகும்.

218. இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடன்அறி காட்சி யவர்.

உபகாரம் செய்யும் கடமை உணர்வுடையவன் தன்னிடம் செல்வமற்ற காலத்திலும் உதவி செய்யத் தவறமாட்டான்.

210. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

உதவும் பண்புடையான் அடையும் வறுமையானது, அவன் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமையாகும்.

220. ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து.

தருமம் செய்வதனால் வறுமையடைவதாய் இருந்தாலும், ஒன்றை வீற்றாயினும் தருமம் செய்வது நன்மையாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : ஒப்புரவு அறிதல் - அதிகாரம் : 22 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Cognition - Authority : 22 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-16-2023 08:33 pm