151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொறை உடைமை
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்னைத்
தோண்டுகின்றவர்களைத் தாங்கும் நிலத்தைப் போல் தன்னை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பாகும்.
152. பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பிறர் செய்யும்
தீங்கினைப் பொறுத்துக் கொள்ளுதல் நல்லது. அதைவிட நல்லது அத்தீமையை
அப்பொழுதே மறந்து விடுவது.
153. இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விருந்தினரை விலக்குவது வறுமையுள் வறுமை அதுபோல வலிமையுள் வலிமையாவது. மற்றவர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வதாகும்.
154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
பெருமையோடு
நீங்காதிருக்க வேண்டுமானால் பொறுமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்.
155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
தீங்கு செய்தவரைத் தண்டித்தவரை அறிஞர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார்.
ஆனால் அத்தீமையைப் பொறுத்தவரைப் பொன்மனச் செம்மல் என்று புகழ்வர்.
156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
தீமை செய்தவனைத் தண்டிப்பது ஒருநாள் இன்பம். ஆனால் அத்தீமையைப் பொறுத்தவனுக்கு சாகும் வரை புகழ் உண்டாகும்.
157. திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.
கொடுஞ் செயலை ஒருவன்
நமக்குச் செய்தாலும் அதனால் வருந்தி அறமற்ற செயலைச் செய்யாதிருப்பது நல்லது.
158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்றுவிடல்.
செருக்கால் தீயன
செய்தவர்களையும், தங்கள் பொறுமையில் வென்று விட வேண்டும்.
159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
நன்னெறியறியாதவர் கூறும்
தீயசொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவிகளை விட
தூய்மையானவராவார்.
160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உண்ணாமல் நோன்பிருப்பவர் பெரியவர்கள் என்றாலும் பிறர் சொல்லும் தீயசொற்களைப் பொறுப்பவர்களுக்குப் பிற்பட்டவரேயாவார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : பொறை உடைமை - அதிகாரம் : 16 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Collateral possession - Authority : 16 in Tamil [ Tirukkural ]