காணிக்கைகள் மூலம் உலகில் அதிக வருமானம் வரும் கோயில் திருப்பதி. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாது ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.
காணிக்கை வசூல்!
காணிக்கைகள் மூலம் உலகில் அதிக வருமானம்
வரும் கோயில் திருப்பதி. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாது ஏழுமலையானுக்கு காணிக்கை
செலுத்துகிறார்கள்.
தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன்
வாங்கிய இக்கோயில் பெருமாள், "யாரெல்லாம்
பாவம் செய்தார்களோ, அவர்களின்
பாவக் கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்துவிடுவேன்"
என அவரிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக ஐதீகம். அதன்படி பெருமாள் நம்மிடம் இருந்து வசூலை
நடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
இதற்காக இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள
உண்டியல்கள் வித்தியாசமான தோற்றம் கொண்டவை. 'காவாளம் எனப்படும் மிகப் பெரிய பித்தளை அண்டாவில் துணி சுற்றப்பட்டு, அது நமது பார்வைக்குத் தெரியாத ஒரு
வண்டியில் வைக்கப்பட்டு இருக்கும். உண்டியல் நிறைந்ததும் வண்டி மூலம் உண்டியல் நகர்த்தி
எடுத்துச் செல்லப்படும்.
புதிதாக மறுபடியும் ஒரு உண்டியல் வைக்கப்படும்.
அதுவும் நிறைந்தவுடன் இன்னொரு உண்டியல் கொண்டு வரப்படும்!
இப்படி வசூல் ஆகும் காணிக்கைகள் நிரம்பிய
பானை உண்டியல்கள் அனைத்தும் பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
அங்குதான் காணிக்கைகள் பிரித்து எண்ணப்படுகின்றது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : காணிக்கை வசூல்! - திருப்பதி பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Collection of tribute! - Tirupati Perumal in Tamil [ Perumal ]