ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார்.
நிறம் மாறும் விநாயகர் ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார். நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தக்கலைக்கு அருகில் கேரளபுரம் என்ற இடத்தில் இந்த கோவில் இருக்கிறது. தட்சாயணம் என்பது சூரியன் தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலம். உத்தராயணம் என்பது சூரியன் வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலம். இதில் ஆடி அமாவாசை முதல் தை அமாவாசை வரை உள்ள 6 மாத காலத்தை தாட்சாயணம் என்றும், தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை உள்ள 6 மாத காலத்தை உத்தராயணம் என்றும் குறிப்பிடுவர். இந்த இரண்டு காலத்தில்தான் கேரளபுரம் விநாயகரின் நிறம் மாறுகிறது. இந்த அதிசய விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை வழபட்டால் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்றும், குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒருமுறை வெள்ளை நிறத்தில் பார்த்த இந்த விநாயகர், மறுமுறை கறுப்பு நிறமாக இருப்பதைப் பார்க்க பக்தர்கள் ஆவலுடன் இங்கு வருகின்றனர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : நிறம் மாறும் விநாயகர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Color changing Ganesha - Spiritual Notes in Tamil [ spirituality ]