நகைச்சுவை துணுக்குகள்

குறிப்புகள்

[ நகைச்சுவை ]

Comedy clips - Tips in Tamil

நகைச்சுவை துணுக்குகள் | Comedy clips

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர? தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

நகைச்சுவை துணுக்குகள்:


நகைச்சுவை 1:

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?

தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.😁

 

நகைச்சுவை 2:

கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க..

'கடன்' வாங்கலாமே...😁

 

நகைச்சுவை 3:

சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”

இல்லைங்க”

வெளில போயிருக்காரா?”

இல்லைங்க”

அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”

இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”

 

வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”

 

இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”

 

வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”

 

வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே”

 

ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”

 

இல்லை”

 

பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”

 

நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”

 

இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”

 

நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே”😜😁😜😁

 

நகைச்சுவை 4:

 

லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

 

பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.😁 😄

 

நகைச்சுவை 5:

அவா் ஒரு பிரபலமான கதாசிரியர். ஏராளமான நாவல்கள் உட்பட பற்பல திபை்படங்களுக்கும் கதைகள் எழுதியே அதிகமான சொத்துக்களை சம்பாதித்திருந்தார் .

 

 பல காலங்கள் சென்று வயது முதிா்ந்து மரனிக்கும் தறுவாயில் தன் மூன்று பிள்ளைகளையும் அருகில் அழைத்து பிள்ளைகளே.! எனது காலம் முடிந்துவிட்டது.

 

ஆனாலும் நான் இது நாள் வரையிலும் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களையும் உங்கள் மூவருக்கும் சமமாக பிரித்த உயில் எழுதி அதை பதிவு செய்வதற்கும் எனது வக்கீல் முலமாக அனுப்பிவிட்டேன்.

 

 நீங்கள் இன்றிருப்பது போல் எப்போதும் ஒற்றுமையாகவும் அன்புடனும் வாழ வேன்டும் என அவர்களை ஆசிா்வதித்து இறந்து போனார்.

 

தங்களுடைய  தகப்பனாரின் இறுதிக் கிரியைகள் அனைத்தும் நிறைவடைந்தபின் பிள்ளைகள் அனைவரும் சொத்து விபரங்களை அறிய தங்கள் குடும்ப வக்கீலின் வரவை எதிா்பார்த்து காத்திருந்தார்கள்..

 

வக்கீலும் வந்தார் மிகவும் சோகமாக. .

 

பதறியடித்துக்கொன்டு ஓடிய பிள்ளைகள்..ஏன் ஐயா சோகமாக வருகிறீா்கள் என கேட்டனர்.

 

நான் என்னவென்று கூறுவது பிள்ளைகளே...! உங்கள் தந்தையார் எழுதிய உயில் செல்லாது என பதிவாளர் அலுவலகம் அதை திருப்பி அனுப்பி விட்டார்கள் என்றாா்.

 

அதிர்சியடைந்த பிள்ளைகள் ஏன் சொத்துக்களை வேறு எவருக்கும் மாற்றி எழுதிவிட்டாரா என்றனர் சந்தேகத்துடன்..

 

அப்படி ஏதும் இல்லை பிள்ளைகளே...! என்றவா் நீங்களே இந்த கன்றாவியை படித்துப் பாருங்கள் என சலிப்புடன் அந்த உயிலை அவர்களிடம் துாக்கிப் போட்டார்.

 

உயிலை படித்த மூன்று பிள்ளைகளும் அப்படியே தலையை பிடித்துக் கொன்டு உட்கார்ந்து விட்டனா்..

 

அப்படி என்னதான் அதில் எழுதியிருந்தது என்கிறீர்களா...?

 

அவர் கதாசிரியர்  அல்லவா..! உயில் எழுதி முடித்தபின்..

 இவை யாவும்  கற்பனையே..!

யாரையும் குறிப்பிடுவன அல்ல என எழுதி அதன் கீழ் கையொப்பமிட்டு தொலைத்திருந்தார்....

😁 😁 😁 😁 😁 😁 😁 😁 😁 😁


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

நகைச்சுவை : நகைச்சுவை துணுக்குகள் - குறிப்புகள் [ ] | Comedy : Comedy clips - Tips in Tamil [ ]