1. துளசி இலை கஷாயத்துடன் தேன் சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை குடிக்க வேண்டும் (60 மி.லி.)
பொதுவான நோய்களும், அவற்றின் கைமுறை மருந்துகளும்
சளி, இருமல்
:
1. துளசி இலை கஷாயத்துடன் தேன் சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை குடிக்க வேண்டும் (60 மி.லி.)
2. கற்பூரவல்லி இலைச்சாறு (15 மி.லி.), தேன் (15 மி.லி.) சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை
குடிக்க வேண்டும்.
3. ஆடாதோடை இலைச்சாறுடன் தண்ணீர் சேர்த்து காலை, மாலை, இருவேளையும் 60 மி.லி. குடிக்க
வேண்டும்.
மலச்சிக்கல் :
1. உலர்ந்த திராட்சையை (20), வெந்நீரில்
ஊற வைத்து இரவு படுக்கும் முன் சாப்பிடவேண்டும்.
2. திரிபலா இலைச்சாறு, காலை
மாலை குடிக்கவும் அல்லது உணவுக்குப் பிறகு, நிலவாகை மாத்திரை
(காலை -2, மாலை -2) சாப்பிடவும். வெந்நீர் குடிக்கவும்.
மூத்திர கடுப்பு:
1. நெருஞ்சில் செடி கஷாயம் (60 மி.லி.) காலை மாலை, 5 நாள்களுக்குக் குடிக்க வேண்டும்.
2. முருங்கை ஈர்க்குச் சாறு (60 மி.லி.) காலை, மாலை குடிக்கவும் அல்லது குங்கிலிய பஸ்பம் (250 மி.கி.),
உணவுக்குப் பிறகு காலையும் மாலையும் சாப்பிடவும். வெந்நீர் குடிக்கவும்.
வயிற்றுப்போக்கு :
1. கசகசாவை வெந்நீரில் ஊறவைத்து அரைத்து, வயிற்றுப் போக்கு நிற்கும் வரை 4-5 முறை கொடுக்கலாம்.
2. மாதுளைத் தோல் ஊற வைத்த தண்ணீ ரை (60 மி.லி.) காலை, மாலை குடிக்கவும் அல்லது தயிர்சுண்டி சூரணம் (2-5 கிராம்),
மூன்று வேளை உணவுக்குப் பிறகு சாப்பிடவும். மோர் குடிக்கவும்.
ஒவ்வாமை :
1. மிளகு ஊற வைத்த தண்ணீரைத் தினமும் காலை, மாலை (60 மி.லி.) குடிக்கவும்.
2. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து காய்ச்சிப்
பூசவும்.
உடல் சோர்வு : ஒற்றைச் செம்பருத்தி இதழ் ஊறவைத்த தண்ணீரை (60 மி.லி.) காலை, மாலை குடிக்கவும் அல்லது அமுக்கரா மாத்திரை, வேளைக்கு 2 வீதம் உணவுக்குப் பிறகு சாப்பிடவும். பால் குடிக்கவும்.
வாந்தி : மாதுளைச்சாறு (60 மி.லி.) காலை, மாலை
குடிக்கவும். தண்ணீர் நிறைய குடிக்கவும்.
ரத்தசோகை : தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை காலை (1), மாலை (1) சாப்பிடவும்.
வயிற்றுப்புழு : வேப்பங்கொழுந்து (5 கிராம்), வெறும்
வயிற்றில் மூன்று நாள்களுக்குக் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும்.
அஜீரணம் : சுக்கு, ஓமம் (தலா 5 கிராம்),
ஏலக்காயுடன் (5) பனைவெல்லம் சேர்த்து கஷாயமாக்கிக் குடிக்க வேண்டும்.
மூட்டுவலி : காலையும் மாலையும், முடக்கத்தான் இலைச்சாறு
(60 மி.லி.) குடிக்கவும் அல்லது அமுக்கரா மாத்திரையை, வேளைக்கு
2 வீதம் உணவுக்குப் பிறகு சாப்பிடவும். பால் குடிக்கவும்.
மூச்சிரைப்பு : தூதுவளை இலைச்சாறு (60 மி.லி.), காலையும்
மாலையும் குடிக்கவும் அல்லது காலை மாலை உணவுக்குப் பிறகு திப்பிலி ரசாயனம் (5கிராம்)
சாப்பிடவும். பால் குடிக்கவும்.
வயிற்றுப்புண் : காலையும் மாலையும் சீரகத் தண்ணீ ர் (60 மி.லி.) குடிக்கவும் அல்லது உணவுக்குப்
பிறகு, ஏலாதி மாத்திரையை வேளைக்கு 2 வீதம் சாப்பிடவும். பால்
குடிக்கவும்.
வெள்ளைப்படுதல் : அரசம் பட்டை ஊறவைத்த தண்ணீரைக் காலை, மாலை குடிக்கவும் அல்லது சிலாசத்து பஸ்பம் (250 மி.கி.), இருவேளை உணவுக்குப் பிறகு சாப்பிடவும். வெந்நீர் குடிக்கவும்.
1. வயிற்றுப்புண்
அ. சீரகம் : வயிற்றின் மந்த நிலையைப் போக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மை உடையது
சீரகம். இதைப் பொடித்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிடலாம். சீரகத் தண்ணீரில் பனை வெல்லம்
சேர்த்துக் குடிக்கலாம். சீரகத்தை இஞ்சிச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து உலர்த்தி, பின் முசுமுசுக்கை இலைச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து உலர்த்தி
அதனுடன் சுக்கு, ஏலம் சேர்த்து தூளாக்கி, காலையிலும் மாலையிலும் தேனில் 2 கிராம் அளவுக்கு கலந்து சாப்பிட்டு வந்தால்
வயிற்றுப்புண் ஆறும்.
ஆ. ஓமம் : ஓமத்தைத் தூளாக்கி தேனில் கலந்து, காலையிலும் மாலையிலும் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்,
ஜீரணக் கோளாறு போன்றவை குணமாகும்.
இ. அதிமதுரம் : அதிமதுரத்தைத் தூளாக்கித் தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்
குணமாகும்.
ஈ. திப்பிலி : திப்பிலி சூரணத்தை தேனில் கலந்து அரை தேக்கரண்டி அளவுக்குக் காலை, மாலை சாப்பிட்டால் வயிற்றுப் புண், இருமல், சளி போன்றவை குணமாகும்.
2. உடல் தேற்றி
அ. அமுக்கரா : அமுக்கரா சூரணத்தை, ஒரு தேக்கரண்டி
அளவுக்கு காலையிலும் மாலையிலும் பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
ஆ. வேர்க்கடலை : வேர்க்கடலையை வறுத்து பனை வெல்லத் துடன் சேர்த்துச் சாப்பிடவும்.
இ. உளுந்து : உளுந்தினால் செய்த பண்டங்களைச் சாப்பிட, உடல் தேறுவதுடன், கருப்பை நோய்களும்
தீரும். உளுந்து, வேர்க்கடலை, பச்சைப்பயறு,
கேழ்வரகு, கோதுமை இவற்றை முளைகட்டி பின் உலர்த்திப்
பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டவும்.
ஈ. ஆவாரை : ஆவாரம் பூவைப் பொடித்து, அரை
தேக்கரண்டி அளவுக்கு காலையும் மாலையும் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் தேறும்.
3. உயிரணு குறைவு
அ. ஓரிதழ் தாமரை : ஓரிதழ் தாமரைச் சூரணத்தை, காலை
மாலை ஒரு கிராம் வீதம் நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும்.
ஆ. தண்ணீர்விட்டான் கிழங்கு : இதன் சூரணத்தை, ஒரு கிராம் அளவுக்கு
காலையிலும் மாலையிலும் பாலில் கலந்து நாற்பது நாள்கள் சாப்பிடவேண்டும்.
இ. எள்ளு : இதைத் தூளாக்கி பனை வெல்லத்தைச் சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட்டு
வர, விந்து உற்பத்தி அதிகமாகும்.
ஈ. பூனைக்காலி : இதன் சூரணத்தைப் பாலில் ஒரு கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.
4. மலச்சிக்கல்
அ. பப்பாளி : பப்பாளிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடவும்.
ஆ. துத்தி : துத்தி இலைச் சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து இரவு
உணவு சாப்பிட்ட பின் சாப்பிடவும்.
இ. கொய்யா : கொய்யாப் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
ஈ. திரிபலா : கடுக்காய், நெல்லிக்காய்,
தான்றிக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி
அளவை வெந்நீரில் கலந்து இரவில் சாப்பிடவும்.
5. மாதவிலக்குக் கோளாறு
அ. அசோகு : அசோகு மரப்பட்டை சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவுக்கு காலை மாலை ஒரு மாதம்
சாப்பிடவேண்டும். (அசோகு என்பது பூங்காக்களில் வளர்க்கப்படும் நெட்டி லிங்கம் (POLYALTHIA LONGIFOLIA) அல்ல. SARACA INDICA என்று அழைக்கப்படும் அசோக மரமாகும்.)
ஆ. சந்தனம் : சந்தனத் தூளை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டி, காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால், மாதவிலக்குக் கோளாறுகள், சிறுநீரக எரிச்சல் போன்றவை குணமாகும்.
இ. ஆற்றுத் தும்மட்டி : ஆற்றுத் தும்மட்டிக்காய் சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று நாள்கள்
சாப்பிட்டு வந்தால், மாத விலக்கின்போது ஏற்படும்
வயிற்று வலி நீங்கும்.
ஈ. மலைவேம்பு : மலைவேம்பு இலைச்சாற்றை, நல்லெண்ணெய்யில்
போட்டுக் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று நாள்கள் காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாத விலக்குத் தடை நீங்கும்.
உ அத்தி : அத்திப்பழத்தைக் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தப் போக்கு கட்டுப்படும்.
ஊ. நாவல் : நாவல் மரப்பட்டை ஊற வைத்த தண்ணீரை 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு வேளை
குடித்து வந்தால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
எ. இம்பூரல் : இம்பூரல் சூரணத்தை ஒரு தேக்கரண்டி காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கும் மூலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கும்
கட்டுப்படும்.
ஏ. அரசு : அரச மரத்தின் துளிர் இலைகளை அரைத்து மோரில் கலந்து சாப்பிட, அதிக ரத்தபோக்கு கட்டுப்படும்.
6. நீரிழிவு
அ. சிறு குறிஞ்சான் : இச்செடியின் இலைகளைப் பொடித்து காலை, மாலை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
ஆ. வெந்தயம் : வெந்தயத்தைப் பொடித்து வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
இ. ஆவாரை : ஆவாரை இலை, பூ இவற்றைத் தூளாக்கி
சுடுநீரில் கலந்து சாப்பிடலாம்.
ஈ. நாவல் : நாவல் கொட்டைச் சூரணத்தை ஒரு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து இரண்டு வேளை
சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்படும்.
7. சிறுநீரகக் கல்
அ. சிறுபீளை : சிறுபீளை அல்லது சிறுகண் பீளை சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு
வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
ஆ. நீர்முள்ளி : நீர்முள்ளிச் செடியை வேக வைத்த நீரைக் காலையிலும், மாலையிலும் குடிக்கவும்.
இ. நெருஞ்சில் : நெருஞ்சில் செடியை வேக வைத்த நீரைக் காலை, மாலை 60 மி.லி. வீதம் குடிக்கவும்.
ஈ. முருங்கை : முருங்கை மரப்பட்டை போட்டு கொதிக்க வைத்த நீரை தினமும் 60மி.லி. வீதம்
காலை, மாலை குடிக்கவும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை இதன் தொடர்ச்சி தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : பொதுவான நோய்களும், அவற்றின் கைமுறை மருந்துகளும் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Common diseases and their manual remedies - Siddha medicine in Tamil [ Health ]