தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்!

குறிப்புகள்

[ வாழ்க்கை பயணம் ]

Confidence...the capital of life! - Notes in Tamil

தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்! | Confidence...the capital of life!

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான வழிகளை யோசித்தபோது, அதற்கான பல விஷயங்கள் அவருக்கு முன் வந்தன. சற்றே திகைத்தவர், சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கும்கூட வழிகள் இருக்குமே என நினைத்தார். தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும். பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம். அதுவரை பொறுமை காப்பது அவசியம். எதிலும் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கவே கூடாது. வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாறு உண்டு.

தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்!

 

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே.

 

தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே  வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

 

தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான வழிகளை யோசித்தபோது, அதற்கான பல விஷயங்கள் அவருக்கு முன் வந்தன.

 

சற்றே  திகைத்தவர், சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கும்கூட வழிகள் இருக்குமே என நினைத்தார்.

 

தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை.

 

எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும்.

 

பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம். அதுவரை பொறுமை காப்பது அவசியம்.

 

எதிலும் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கவே கூடாது. வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாறு உண்டு. 

 

நம் வாழ்வு எப்போதும் பிறருக்குப் பயன் தருவதாக அமைய வேண்டும்.

 

கல்லூரி ஒன்றில் வாய்ப்புகள் பற்றிய உரையாற்ற வந்த ஒருவரின் பேச்சை சரிவரக் கேட்காமல் செல்லிடப்பேசியில் பலர் மூழ்கியிருந்தனர்.

 

திடீரென்று  பேச வந்த நபர், தான் உரையாற்றிய பகுதியில் இருந்து கேள்வி ஒன்றைக் கேட்டார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும்  சரியான பதில் கூற அவனுக்கு அவர் நிறுவனத்தில் வேலை வழங்குவதாகக் கூறினாராம்.

 

இதுதான் வாய்ப்பு என்பது.  பெட்டிக் கடை வைத்தவர்கள் வணிக வளாகம் வைக்கும் அளவுக்கு உயர்வதற்கு காரணம் , கிடைத்த வாய்ப்பை ஈடுபாட்டுடன் செய்வ தால் மட்டுமே. புதுப்பித்துக் கொள்பவர்கள்,

 

நவீனமாகச் சிந்திப்பவர்களால் மட்டுமே போட்டிகள் நிறைந்த இந்த உலகில் சாதிக்க முடியும்.

 

மாற்றங்களே நம் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய சூழலாக இருந்தாலும் அதைச் சவாலுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

உலகத்துக்கேற்ப  நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே உலகை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவர்கள்.

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

 

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

வாழ்க்கை பயணம் : தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்! - குறிப்புகள் [ ] | Life journey : Confidence...the capital of life! - Notes in Tamil [ ]