எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும்
நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை :
எந்த
சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று
எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே
வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும்.
இது
நம்முள் தோன்றும் ஒருவித மனப்பாங்கு. தன்னம்பிக்கையானது வாழ்வில் துவண்டு போய்
சோர்ந்த ஒருவனைக் கூட வெறிகொண்டெழவைக்கும்.
ஒருவன்
தன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பின் எந்தத் தடைகளும் அவனுக்குத்
தெரியாது.
வாழ்வில்
ஜெயிக்க வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம். மனித வாழ்வானது இன்பம்⸴ துன்பம் இரண்டும் இரண்டறக் கலந்தது.
தோல்விகள்
பல அடையக்கூடும்⸴ அவமானங்களைச்
சந்திக்க நேரிடலாம்⸴ கஷ்ட
துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்⸴ இவற்றையெல்லாம்
எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள தன்னம்பிக்கை அவசியமாகும்.
வாழ்வில்
முன்னேற்றம் காண வேண்டுமெனில் தன்னம்பிக்கை முக்கியமாகும். தன்னம்பிக்கையின்றிச்
சாதனைகள் செய்திட முடியாது.
நம்பிக்கை
தரும் தன்னம்பிக்கையின் நன்மைகள்:
நாம்
நம்பிக்கையோடும் தன்னம்பிக்கை கொண்டும் ஒரு செயலைச் செய்கின்ற போது வெற்றியை
நமதாக்கிக் கொள்ள முடியும்.
தன்னம்பிக்கை
நமக்கு இருக்கும்போது மற்றவர்களின் தயவின்றி வாழ்வில் முன்னுக்கு வரமுடியும்.
வாழ்வின்
தடைகளைத் தகர்த்தெறிய முடியும். பிரச்சினைகளை எதிர்கொண்டு அதனை தீர்த்துக்கொள்ள
தன்னம்பிக்கை உதவுகின்றது.
நம்பிக்கை
தரும் தன்னம்பிக்கையால் எமக்குள் ஒளிந்திருக்கும் பலத்தை வெளிக்கொண்டுவர முடியும்.
தன்னம்பிக்கையை
வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள்:
நம்மீது
நாமே நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையை எப்போதும் கைவிடக்கூடாது. என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சோர்ந்து போகும் நேரங்களில்
கடந்தகால வெற்றிகளை நினைவிற் கொள்ள வேண்டும்.
தாழ்வு
மனப்பான்மையை எப்போதும் மனதில் எழவிடாமல் நேர் நிலைகருத்துக்களை மனதிற் கொள்ள
வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.
பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நாளடைவில் அதை எதிர்கொள்ள முடியும்.
மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
வெற்றி
எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை அதை எப்போதும்
வளர்த்துக் கொள்
கஷ்டங்கள்
மட்டும் இல்லையெனில் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
தடம்
பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் தான் மாமனிதன்.
வாழ்க்கையில்
முன்னேற குன்றாத உழைப்பு⸴ குறையாத
முயற்சி⸴ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இம்மூன்றும் இருந்தால்
போதும்.
நல்லதே
நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களைச் சுற்றி இருப்பவர்களையும்
மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்.
வாழ்வில்
முன்னேற தன்னம்பிக்கை அவசியம். அத்தகைய தன்னம்பிக்கையைத் தருவது நம்பிக்கையாகும்.
உலகின் சாதனையாளர்கள் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தான் வாழ்வில் முன்னேறியுள்ளனர்.
தோல்விகளைக்
கண்டு சோர்வடையாத தன்னம்பிக்கை கொண்டு மீண்டெழுந்தவர் தான் டாக்டர் அப்துல் கலாம்
ஐயா அவர்கள்.
எனவே
தன்னம்பிக்கையின் சின்னமாகத் தனியொருவனாக உழைத்து வாழ்வில் முன்னேறுவோம்.
நம்மைப்
பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம்
எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்..
அப்போது
தான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம்.
அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.
அது
நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை
வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்.
இந்த
எண்ணம் தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்! உயர உயரப் பறந்து செல்லும் பறவையைப்
போல, நாமும்
வாழ்க்கை என்ற வான் வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்..
மாவீரன்
நெப்போலியனுக்கு, அவனுடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக்
கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கு
ஒருவர் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இது
முடிந்ததும் நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க
வேண்டும். இந்த ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்து இருந்தார்கள். நெப்போலியனுக்கு
இந்த விபரம் தெரியாது. அனைவரும்
வாழ்த்துக்களைப் பரிமாறிய பின்பு, குண்டு வெடித்தது
தளபதிகளின் கைகளில் இருந்தப் பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே
விழுந்து நொறுங்கி விட்டன. ஆனால் நெப்போலியன் கை மட்டும்
சிறிதும் நடுங்கவில்லை. அவன் கையில் இருந்த கிண்ணத்தில் பழரசம் கூடத்
ததும்பவில்லை. இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்.
“பிரபுவே!
இது நாங்கள் செய்த ஏற்பாடு தான்! இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக்
கிண்ணங்களைத் தவற விட்டு விட்டோம். ஆனால் உங்களுடைய கை கொஞ்சம் கூட நடுங்கவில்லை.
எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று பாராட்டினார்கள். உடனே
நெப்போலியன் சொன்னான். “அதனால் தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள்
தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றான்.
உண்மை
தான்! நெப்போலியன் தன் மீது மிகுந்த நம்பிக்கையும், மன
உறுதியும் கொண்டு இருந்தார்.. அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத
விழிப்புணர்வு அதிகமாக இருந்தது.
நெப்போலியனின்
மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள் தான் காரணம்! ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை
மிகவும் நம்பினான்.
தன்னம்பிக்கை
என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடல்
என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகள் எல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது,
தன்னம்பிக்கை
இருந்தால் தான் அவைகள் எல்லாம் கைகூடும்.எனவே எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தன்னை நம்புவது ஆகும்.. நம்புங்கள் நம்மால்
முடியும்!
நம்மிடம்
எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்..
நம்மை
தவிர எதுவும்
இல்லை என்று நினைப்பது ஆணவம்..!
பொய்
பேசியதால் உருவான பகைகள் குறைவு..
உண்மை பேசியதால்
உருவான எதிரிகள்
அதிகம்..!
உனக்காக
வாழ்கிறேன் என்று
பிறர்
சொல்வதை விட..
உன்னால்
வாழ்கிறேன்
என்று ஒருவரைச்
சொல்ல
வை..!
வேகம்
எதிர்பார்க்காத முடிவினை
தரும்..
விவேகம்
எதிர்பார்ப்பினை
முடிவாய் தரும்..!
நடிக்க
தெரிந்தவனுக்கோ உலகம்
ஓர்
அழகான நாடக மேடை..
ஆனால்
நடிக்க தெரியாதவனுக்கோ
உலகம்
ஒரு ஆபத்தான
நரகத்தின்
மேடை..!
எதிரில்
நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை.. தோளில் கை
போட்டவனெல்லாம்
தோழனும் இல்லை.. இதை உணர்ந்தவனுக்கு எப்போதும்
கவலையும் இல்லை..
சின்ன
சின்ன செலவுகளை
குறையுங்கள்
காரணம்..
எவ்வளவு
பெரிய
கப்பலையும் சிறிய
ஓட்டை
மூழ்கடித்து விடும்..!
பல
வருடம் வாழும் மனிதன்
அழுது
கொண்டே பிறக்கிறான்..
ஒரு
நாள் மட்டுமே வாழும் பூக்கள்
சிரித்துக்
கொண்டே பூக்கிறது..!
குதிரை
எவ்வளவு சிறப்பாக
வண்டியை
இழுத்தாலும் அதற்கு
சாட்டை
அடி உண்டு..
அதே
போல்
எத்தனை
சிறந்த மனிதனாக
நீ
இருந்தாலும் உனக்கும்
விமர்சனம்
உண்டு..!
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
தடுக்கிவிட
பல கால்கள்
இருந்தாலும்
ஊன்றி எழ
ஒரு
கை போதும்
அது
தான் நம்பிக்கை...
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
ஆயிரம்
கஷ்டங்கள் இருந்தாலும்..
மனதில்
ஒளித்து வைக்க காலம் கற்றுக்கொடுத்த வார்த்தை.. ஒன்றுமில்லை..
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
வார்த்தை
என்பது ஏணி போல..
பயன்படுத்துவதை
பொறுத்து
ஏற்றியும்
விடும்..
இறக்கியும்
விடும்..
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
இங்கு
யாரை
நம்புவது..??
என்ற
கேள்விக்கு
அனுபவமே
விடையாக
அமைகின்றது....
அன்புடன்....
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை - அவசியம், நன்மைகள், வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள், பொன்மொழிகள் [ ஊக்கம் ] | Encouragement : Confident confidence - Necessity, benefits, methods of cultivation, mottos in Tamil [ Encouragement ]