1. வீட்டில் தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக இருப்பதில்லையே? ஏன்? பால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள் சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத் துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.
சமையல் டிப்ஸ்
1. வீட்டில்
தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக
இருப்பதில்லையே? ஏன்?
பால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு
துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள்
சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு
மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத்
துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.
2. சேமியா உப்புமா செய்யும்போது சேமியா ஒன்றுடன்
ஒன்று ஒட்டிக் கொள்கிறதே? இதைத் தடுப்பது எப்படி?
சேமியா வாங்கியவுடன், அதை
வெறும் வாணலியில் சிறிது வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் எடுத்துவைத்து சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால்
ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
3. கேக் செய்யும் போது அதன் மேற்பகுதி வெடித்து
காணப்படுகிறதே?
சேர்க்க வேண்டிய அளவை விட அதிகமாக பேக்கிங் பவுடரைச் சேர்த்தால், கேக்கின் மேற்பகுதி வெடித்து விரிந்து விடும்.
எனவே, கேக் தயாரிக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில்
மட்டுமே பேக்கிங் பவுடரைச் சேர்க்க வேண்டும்.
4. குழிப்பணியாரம், ஆப்பம்
போன்றவற்றை சோடா உப்பு சேர்க்காமல் எவ்வாறு மிருதுவாகத் தயாரிக்கலாம்?
குழிப்பணியாரத்துக்கு வெந்தயம், உளுந்து, அரிசி மற்றும்
சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்துக் கொள்ளவும்.
இதன் பிறகு குழிப்பணியாரம், ஆப்பம் செய்தால், சோடா உப்பு போட்டது போல் மிருதுவாக இருக்கும்.
5. ஃப்ரிட்ஜை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும்,
ஏதாவது ஒரு வாசனை வருகிறதே அது ஏன்?
ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி, ஃப்ரிட்ஜில் வைத்தால், எந்த
வித வாசனையும் வராமல் தவிர்க்கலாம்.
6. ஃப்ரிட்ஜில் ஃப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்கும்
காய்கறிகள் தண்ணீர் விட்டு அழுகி விடுகிறதே ஏன்?
காய்கறிகளை துணிப்பையிலோ அல்லது வலை போன்ற பைகளிலோ போட்டு வைத்தால், காய்கறிகள் அழுகாமல் பாதுகாக்கலாம்.
7. மோர்க்குழம்பு செய்யும்போது தயிர் திரிந்து
விடாமல் எப்படி செய்வது?
மோரோ அல்லது தயிரோ சேர்ப்பது என்றால், அதனுடன் அரை டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை கடலை
மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல், கரைத்து ஊற்றிக் கொதிக்க
விடவும். மோர்க்குழம்பு திரிந்து போகாமல் வரும்.
8. அரிசியை எவ்வளவு கொஞ்சமாக வாங்கினாலும் சிறிது
நாட்களிலேயே வண்டு வந்து விடுகிறதே ஏன்?
அரிசியுடன் சிறிது கல் உப்பு அல்லது வேப்ப இலையை துணியில் கட்டி
போட்டு வைத்தால் வண்டு வராது.
9. மாவை எவ்வளவு நேரம் பிசைந்தாலும் சப்பாத்தி
மிருதுவாக வருவதில்லையே... ஏன்?
சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக
வரும்.
10. ஆப்பிள் நறுக்கியவுடன் கறுத்து விடுகிறதே அதை
எப்படி தவிர்ப்பது?
ஆப்பிள் நறுக்கியவுடன் சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், நீண்ட நேரமானாலும் கறுக்காது.
11. தக்காளித் தோலை சுலபமாக எப்படி நீக்கலாம்?
தக்காளியை ஒரு கத்தியில் குத்திக்கொண்டு நெருப்பில் காட்டினால், தோல் உரிந்து விடும். பிறகு அதன் தோலை சுலபமாக
உரித்து விடலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : சமையல் டிப்ஸ் - குறிப்புகள் [ ] | cooking recipes : Cooking Tips - Tips in Tamil [ ]