இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைத் தேடுகிறோமோ அது நம்மை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.
*பிரபஞ்ச
ஆற்றல்*
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைத் தேடுகிறோமோ அது நம்மை நோக்கி
பயணிக்கத் தொடங்குகிறது. ஆனாலும் அது நம்மை விரைவில் வந்து அடைவது நாம் அதன் மீது
கொள்ளும் நம்பிக்கையிலும்... அதற்காக நாம் எடுக்கும் விடாமுயற்சியிலும் தான்
உள்ளது.
அதிகமாக நம்புங்கள்.
நமக்கு வேண்டியது, நாம் நினைத்தது கண்டிப்பாய் ஒரு நாள்,
நிச்சயமாக அந்த நாளில் கிடைக்கத் தான் செய்யும் என்பதில் உறுதியாக மனதை வைத்து
அதையே முழுமனதாக நம்புங்கள்.
அந்த உறுதி உங்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அந்த
ஈர்ப்பு சக்தி தான் உங்களுக்கு, நீங்கள் விரும்பியதை, உலகில் எந்த மூலையில்
இருந்தாலும் நிச்சயம் உங்களைத் தேடி வந்தே தீரும். அந்த நம்பிக்கை தான் உங்களுக்கான
மொத்தத்தையும், அனைத்தையும் அள்ளி கொண்டு வரும் உங்கள் உள்ளங்கைகளில். இதுவே
வெற்றிக்கான ரகசிய அற்புதமான மந்திரம் ஆகும்.
இறைவனை நம்புங்கள்...
உங்களை நம்புங்கள்.
உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு வழி தான்
பிரார்த்தனைகள்.
தொடர்ச்சியான நம்பிக்கையான பிரார்த்தனைகள் மிகவும்
வலிமையானவை...
இறைவனையும் மனமிரங்க வைப்பவை.
உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் உங்களிடம் கொண்டு வந்து
சேர்க்கும் வல்லமை படைத்தவை.
நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளையும் நம்பிக்கை மற்றும் நேர்மறையான
சிந்தனைகளுடன் கூடிய வலிமையான பிரார்த்தனைகளுடன் தொடங்குங்கள்.
ஒவ்வொரு நாளும் மிகச் சிறப்பான நாளாக இருக்கும்.
அற்புதங்கள் நிகழும்.
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
இறைவன் அருளால் நிச்சயமாக உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று
சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
*உங்களது வாழ்க்கையில்
உங்களுக்கென்று ஒரு இலக்கை நீங்கள் முடிவு பண்ணி விட்டீர்கள் என்றால் அந்த இலக்கை
அடைவதற்கு அண்டமெல்லாம் அனுதினமும் பாடுபடும். ஆனால் இலக்கு எதுவுமின்றி ஏதோ
பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம் என்று இருப்பவர்களுக்கு இடுப்புல இருக்கிற அருனாக்கவுரு
கூட உதவி செய்யாது.
*மற்றவர்களை உங்களைப்
பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நீங்கள் உங்களைப் பற்றி உங்களது திறமையைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது தான் முக்கியம் சிந்திப்போம் செயல்படுவோம் வெற்றி
பெறுவோம்.
*ஒவ்வொரு நாளையும்
நம்பிக்கையோடு துவக்குங்கள் அந்த positive எண்ண அலைகள் Magic செய்யும்👍*
*பிரபஞ்சத்துடன் ஒரு
தொடர்பு, ஒரு
உன்னதமான ஒரு உறவு*
*எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இன்றி பிரபஞ்சம் உங்களுக்கு தந்து உதவும்*
*உங்கள் உள்ளுணர்வு
அற்புதமாக செயல்படுவதற்கு சிறப்பாக உதவும்*
*உங்களுக்குத் தேவையான
ஒரு அற்புதமான ஒரு சூழ்நிலையை, சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரும், அதை நாம நன்கு உணர்ந்து, நம்பிக்கையுடன், விடாம முயற்சியுடன்,
மனம் தளராமல் சிந்தித்து, செயல்பட்டால், வெற்றி வெற்றி வெற்றி*
துவக்கம் கடினமானதாகவே இருக்கும்....செயல் புரிய
ஆரம்பித்தது விட்டால் வெற்றியை நோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது...
*மகிழ்ச்சியாக
இருந்தால் தான் பணத்தை கோடிக்கணக்கில் ஈர்க்க முடியும்*
முற்றிலும் இலவசம் என்பது பிரபஞ்சத்திடம் அறவே கிடைக்காது
பிரபஞ்ச எனர்ஜியை புரிந்து கொண்டாலே முழுவதும் உங்களுக்கு பிரபஞ்சத்தின் அருளாலே
எல்லாம் நடைபெறும் இந்த டிக் டாக் இல் உள்ளது போல் இலவசத்திற்கு அதிக நேரம்
காத்திருக்க வேண்டும் கூடுமான வரைக்கும் இது நடைபெறாது.
எண்ணுகின்ற எண்ணத்திற்கு 20% உழைப்பு செய்தாலே 80% வெற்றி பிரபஞ்சம் தானாக வழங்கி விடும் உங்களுக்கு 🔥👍🔥
*அனைத்து இடங்களிலும்
துரதிருஷ்டம் உங்களை துரத்துகிறது. என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்,
அது முற்றிலும் தவறான எண்ணம் நண்பர்களே....*
*இயற்கை உங்களுக்கு ஏதோ
கற்பிக்கின்றது என்று பொருள்...,*
*கவலை வேண்டாம்,
அனைத்தும் நன்மையில் தான் முடியும். நம்பிக்கையோடு,
நிதானத்துடனும், பொறுமையுடனும், தன்னம்பிக்கையுடனும், அமைதியுடன் சிந்தித்து செயல்படுங்கள்....*
*எப்போது என்ன நடக்குமோ
என்கிற பதட்டம், பயம்
உங்களை சூழ்ந்து இருக்கும் வரை உங்களால் சிந்தித்து செயல்பட இயலாது,
எதுவும் சாதிக்க இயலாது நண்பர்களே.....*
*முதலில் மனதை ஒரு நிலை
படுத்துங்கள்., சூனியம்
ஆக்குங்கள்., மனதில்
அமைதி இல்லாமல் நீங்கள் எதைச் செய்தாலும் அது சிறப்படையாது நண்பர்களே புரிந்து
கொள்வீர்....*
*மனஅமைதிக்கும்,
மனவலிமைக்கும், மனத்தெளிவுக்கும் "தியான சாதனை" துணையாக
அமைந்துவிடும்....*
*உங்களின் "தியான
சாதனை" மட்டும் தான் உங்களில் தன்னம்பிக்கையும் மனஉறுதியையும் வலுவடைய
வைக்கும் நண்பர்களே தெளிவடையுங்கள்.....*
*உங்கள் சேவை,
திறமை புரியாதவர்களுக்காக அல்ல என்பதே புரிந்து
கொள்ளுங்கள்..., நீங்கள் வருத்தபடுவதால்,
உங்களின் மதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை.,
புரிவதும் இல்லை., உங்கள் சக்தி தான் விரையம் ஆகும் நண்பர்களே..,
புரிந்து கொள்வீர்....*
*மற்றவர்களை பற்றிய
சிந்தனை என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்., உங்கள் லட்சிய சாதனையை நீங்கள் அடைய இயலாது நண்பர்களே
புரிந்து கொள்வீர்....*
*அப்படிப்பட்டவர்களிடம்
இருந்து சற்று விலகி இருப்பதே உங்களுக்கு நன்மை தரும் நண்பர்களே...*
*அவர்களே உங்கள் தேவையை
உணர்ந்து, அறிந்து
தேடி வரும் பட்சத்தில் உதவி புரிவதில் தவறில்லை....*
*நீங்கள் எதிர்பார்த்த
நிம்மதியான, மகிழ்ச்சியான
வாழ்க்கையை "தியான சாதனையுடன்" சுலபமாக அடைவீர்கள்,
தைரியமாக மனஉறுதியுடன் மனத்தெளிவுடன் பகுத்தறிவுடன்
அமைதியாக வாழுங்கள்....*
*இதுதான் ஒவ்வொரு
மனிதரும் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியம்.....*
*இப்பூமியில் வாழும்
அனைவரும் "தியான சாதனையை" மேற்கொண்டு “நிதானத்தையும்,
அமைதியையும், பகுத்தறிவையும், ஞானத்தையும்" பெற்று ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்வை
வாழ்வீர்., வலிமையான
சமுதாயத்தை உருவாக்குவீர்....*
*ஒருவரின் அன்பு*
*எங்கு மதிப்பாக* *கிடைக்கிறதோ*
*அங்கு தான் அன்பு*
*நிலைத்து நிற்க்கும்*
*கடைசி வரை.*..💖💖💖
*உற்றுக் கவனித்தால்
நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்குமுண்டான தீர்வையும் எல்லாவிதமான கேள்விகளுக்குமான
பதிலையும் இந்த பிரபஞ்சம் எப்போதுமே தயாராகவே வைத்திருப்பது தெரியும்.*
*தியானம் என்றால் சுவாசத்தின் மீது கவனம்*
*கவனிப்பது நம் கையில்தான் இருக்கிறது.*
*எல்லா இடங்களிலும்
எனக்கான வெற்றி வாய்ப்புகளே நிறைந்திருக்கின்றன. செயல்படுதல் மூலம் வாய்ப்புகளை
பயன்படுத்தி செல்வந்தனாக மாறலாம்.
*எங்கெல்லாம் முடியாது என்று சொல்கிறார்களோ அங்கே சென்று அவர்கள் நினைப்பதை
எல்லாம் அவர்கள் முன்னே முடித்துக் காட்டுவதுதான், ஒரு நல்ல
தலைமைப் பண்பிற்கு உண்டான அடையாளம் ஆகும்*.
*நம்ம தேவை என்னனு மைண்ட்ல பிக்ஸ் பண்ணிக்கிட்டாலே போதும்...........*
*அது தேவையற்றவைகளை சிந்திக்க விடாம நம்மை காப்பாற்றும்............!!*
*பிரபஞ்சம் எனக்கு
சொல்லி தந்த பாடம் அனைவரிடமும் அன்பாய் பேசு. மகிழ்வாய் வாழ்த்து. நீ எதை
செய்கின்றாயோ அதுவே உன்னை வந்து சேரும். உனது மனம் மகிழ்ச்சியில் நிறைந்தால் உன்னை
சார்ந்தோர்களுக்கும் பிரபஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தே தீரும். என்பதே.
அந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி* நன்றி! நன்றி சொல்ல
மறவாதீர்கள்.!
ஒவ்வொரு நொடியும் என்னைச் சுற்றி இருக்கும் அனைத்து
உயிருள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் அனைத்து உயிருள்ள பொருட்களுக்கும் எனது
மனப்பூர்வமான நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..*🙏💐
*நன்றி சொல்ல வாய்ப்பு
வழங்கிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகளை மிகுந்த
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..*🙏🌹
பிரபஞ்சம் என்பது நம்மை சுற்றியிறுந்தும் நமக்குள்
இருந்தும் தகவல் தருபவை. நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி யோசிக்கும் பொழுது பக்கத்தில்
ஒருவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பார் அதில் நமக்கு தேவையான தகவல் மட்டும்
நம் காதுக்கு தெளிவாக கேட்கும்.
ஆகையால் திருமணம் பூஜை போன்ற நேரங்களில் தேவையற்ற
மற்றவர்களின் வார்த்தைகள் காதில் விழக்கூடாது என்று மேளம் மற்றும் கோயில் மணி
அடிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்திற்கு நன்றி!
எந்த நேரத்தில் என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்று
எவராலும் யூகிக்க முடியாத உலகின் மிகப் பெரிய மர்ம நாவல் *மனிதனின் மனம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒரு போதும்
மாற்றிக்கொள்ளாதீர்கள்..
அதுவே
உங்களை அறிமுகம் செய்யும்..
*நீங்கள் யார் என்பதை
மற்றவர்களுக்கு! 👍*
*திட்டமிட்டு
வாழுங்கள்.
கடனும் கரையானும் ஒன்றே. அனுமதித்தால்,
தேக்குமரத்தையே கரையான் அரித்து விடுகிறதல்லவா. ஆகவே கடன்
என்ற வார்த்தையை கனவிலும் நினைக்காதீர்கள். களிப்போடு வாழ்வீர்கள்.*
*கடன் இல்லா வாழ்வே
கவுரமானது.*
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : பிரபஞ்ச ஆற்றல் - ஊக்கம் [ motivation ] | Encouragement : Cosmic Energy - Encouragement in Tamil [ முயற்சி ]