பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை.
புரட்டாசி சனிக்கிழமை!
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில்
வரும் சனிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இந்த மாதத்தில்தான் திருப்பதியில் பிரம்மோற்சவம்
நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இம்மாதத்தில்தான் வருகிறது. புரட்டாசி சனிக்கிழமையின்
மகிமைகளை இனிக் காண்போமா?
திருப்பதி ஏழுமலையானைக் குலதெய்வமாகக்
கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் மாவிளக்கு ஏற்றி இம்மாதம் முழுவதுமே வழிபாடு செய்கிறார்கள்.
காலையில் ஏற்றப்படும் இந்தத் தீபம் மாலை வரை தொடர்ந்து எரியும்!/
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி
சென்று ஏழுமலையானைத் தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள்
தங்களது வீட்டிலேயே ஸ்ரீவெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டு வரலாம். அப்போது
வெங்கடேச அஷ்டகம்' சொல்லி
பூஜை செய்வதும், துளசி தலங்களால் அர்ச்சிப்பதும், சுத்தமான நெய் கொண்டு மாவிளக்கு ஏற்றுவதும்
சிறப்பு. இந்த வழிபாடு வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும்
பொருட்களில் சர்க்கரைப் பொங்கல், வடை
இடம் பெறுவது உண்டு சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும்
படைப்பது உண்டு.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு
உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று! புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மகாவிஷ்ணு.ஆகவே
விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாகப் புரட்டாசி திகழ்கின்றது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், இந்த மாதத்தில் காக்கும் கடவுளான ஸ்ரீ
விஷ்ணுவை வணங்குவது நல்லது.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில்
விரதம் மேற்கொள்வது நல்லது. அவ்வாறு விரதம் மேற்கொள்ள முடியா தவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப
வழக்கப் படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப்
பூஜை செய்து வழிபட்டு, முடிந்த
அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருளால் சகல நலன்களும் கிடைக்கும் என்பது
ஆன்மீகப் பெரியவர்களின் கருத்து.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : புரட்டாசி சனிக்கிழமை! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Crazy Saturday! - Perumal in Tamil [ Perumal ]