நோய் தீர்க்கும் பிரசாதங்கள்!

புற்றுமண், பன்னீர் இலை விபூதி, சாந்துருண்டை

[ ஆன்மீக குறிப்புகள் ]

Curative offerings! - Turumaan, panneer leaf vibhuti, Sandalwood in Tamil

நோய் தீர்க்கும் பிரசாதங்கள்! | Curative offerings!

திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது சங்கரன்கோவில். சங்கன், பதுமன் எனும் இரு நாகங்களுக்காக ஈசன் சங்கர நாராயணராகக் காட்சியளிக்கும் திருத்தலம் அது!

நோய் தீர்க்கும் பிரசாதங்கள்!

 

புற்றுமண்

திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது சங்கரன்கோவில். சங்கன், பதுமன் எனும் இரு நாகங்களுக்காக ஈசன் சங்கர நாராயணராகக் காட்சியளிக்கும் திருத்தலம் அது!

 

ஒரு சமயம் சிராத்தம் எனும் திதி கொடுப்பதற்காக வைத்திருந்த பழத்தை உண்டதால் அடியவர் ஒருவருக்கு நோய் பற்றிற்று. ஈசன் இத்தலத்துப் புற்றுமண்ணை மருந்தாக அளித்து அவருடைய நோயைத் தீர்த்தார். அது முதல் இத்தலத்தில் புற்றுமண்ணையே முக்கியப் பிரசாதமாகத் தருகிறார்கள். அந்தப் புற்று மண்ணால் பிணி நீங்கப் பெற்றவர்கள் அநேகம்!!

 

முஸ்தாபி சூரணம்

விருத்தாச்சலத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் வராகமூர்த்தி அருள்கிறார். இவருக்கு தினமும் அபிஷேகம் நடை பெற்றபின் முஸ்தாபி சூரணம் எனும் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. பசுநெய், கோரைக் கிழங்கு மாவு, பச்சைக் கற்பூரம், சர்க்கரை, ஏலக்காய் பொடி போன்று பல்வேறு விதமான பொருட்களால் தயாரிக்கப்படும் இந்தப் பிரசாதமும் நோய் தீர்க்கும் அருமருந்து என்கிறார்கள் பக்தர்கள்.

 

பன்னீர் இலை விபூதி

ஆதிசங்கரரின் மேல் துர்மந்திரம் ஏவப்பட்டதால் அவருக்குக் காசநோய் பற்றியது. திருச்செந்தூர் வந்து செந்திலாண்டவனின் சந்நிதியை அடைந்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று கருவறையில் மெல்ல ஊர்ந்து சென்று மறைந்ததைக் கண்டார். உடனே அவர் சுப்ரமண்ய புஜங்கம் எனும் அதியற்புதமான முருகன் துதியை இயற்றினார். புஜங்கம் என்றால் பாம்பு என்று பொருள். அவருக்கு முருகப் பெருமான் திருக்கரத்தால் பன்னீர் இலையில் மடித்த விபூதி பிரசாதம் கிடைத்தது. உடனே அவரது காசநோய் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது. இன்றும்கூட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்செந்தூரின் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தைப் பெற்று நோய் நீங்கப் பெறுகின்றனர்.

 

தவக்கோல விபூதி

ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரி மலை சந்நிதானத்தை மூடும் முன் ஸ்ரீஐயப்பனின் திருமேனி மீது விபூதியைக் கொட்டி, அவர் கையில் ஜபம் செய்வதற்காக ஒரு ருத்ராட்ச மாலையையும் வைத்து விடுவர். அடுத்த மாதம் நடை திறக்கும் வரை ஐயப்ப சுவாமி தவம் புரிவதாக ஐதீகம்! ஐயப்பனின் திருமேனியில் ஒரு மாதம் இருந்த அந்த விபூதி ‘தவக்கோல விபூதி' - என்று அழைக்கப்படுகின்றது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து சிறிதளவு உட்கொண்டால் நோய்கள் தீர்ந்து விடுவதாக நம்பப் படுகின்றது!

 

சாந்துருண்டை

சீர்காழிக்கு அருகில் உள்ளது வைத்தீஸ்வரன் திருக்கோயில். இங்கே ஈசன் நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் எனும் பெயரோடு அருள்பாலிக்கின்றார்.

இறைவி தையல்நாயகி, தன் ஒரு கையில் தைலப் பாத்திரமும், மறு கையில் வில்வமரத்தடி மண்ணையும் அமிர்த சஞ்சீவியையும் ஏந்தியபடி தரிசனம் அளிக்கின்றாள்.

இங்கே முருகப் பெருமான் செல்வமுத்துக் குமார சுவாமி எனும் திருப்பெயரோடு திகழ்கின்றார்! இந்த வைத்தீஸ்வரன் சந்நிதியில் தரப்படும் திருச்சாந்துருண்டை எனும் பிரசாதமும், முருகப் பெருமான் சந்நிதியில் தரப்படும் நேத்ரப் பிடி சந்தனப் பிரசாதமும் பக்தர்களின் தீராத பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கின்றன.

வடநாட்டிலிருந்தும் தாய்லாந்து, மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் கூட ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து இங்கே தரப்படும் நோய் தீர்க்கும் பிரசாதத்தைப் பெற்றுப் பயனடைகிறார்கள்!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : நோய் தீர்க்கும் பிரசாதங்கள்! - புற்றுமண், பன்னீர் இலை விபூதி, சாந்துருண்டை [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Curative offerings! - Turumaan, panneer leaf vibhuti, Sandalwood in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்