நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்! பற்றி அறிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ பழங்கள் - பலன்கள் ]

Dates cure nervousness! Let's learn about - Notes in Tamil

நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்! பற்றி அறிந்து கொள்வோமா | Dates cure nervousness! Let's learn about

மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பழம் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் . ஆயுர்வேத , யுனானி , சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது . சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம் . இந்த பழத்தில் இரும்புச்சத்து , கால்சியம், வைட்டமின் ஏ , பி , பி 2 , பி 5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன . வைட்டமின் ‘ ஏ ‘ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதை குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலை கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும் . இதனால் பார்வைக் கோளாறுகள் நீங்கும் . பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும் , இரும்புச்சத்தும் தேவை . மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன . இதை நிவர்த்தி செய்யவும் , ஒழுங்கற்ற மாத விலக்கை சீராக்கவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது . மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலக்கட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை , கால் மூட்டுகளில் வலி உண்டாகும் . இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் . ஆண்மையை அதிகரிக்கவும் தேனுடன் கலந்த பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது . பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு , பாலையும் பருகி வந்தால் சளி , இருமல் குணமாகும் .

நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்! பற்றி அறிந்து கொள்வோமா?

 

மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பழம் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் .

 

ஆயுர்வேத , யுனானி , சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது . சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம் . இந்த பழத்தில் இரும்புச்சத்து , கால்சியம், வைட்டமின் ஏ , பி , பி 2 , பி 5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன .

 

வைட்டமின் ‘ ஏ ‘ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதை குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலை கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும் . இதனால் பார்வைக் கோளாறுகள் நீங்கும் .

 

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும் , இரும்புச்சத்தும் தேவை . மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன .

 

இதை நிவர்த்தி செய்யவும் , ஒழுங்கற்ற மாத விலக்கை சீராக்கவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது . மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலக்கட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.

 

அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை , கால் மூட்டுகளில் வலி உண்டாகும் . இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் . ஆண்மையை அதிகரிக்கவும் தேனுடன் கலந்த பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது .

 

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு , பாலையும் பருகி வந்தால் சளி , இருமல் குணமாகும் .

 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும் . இவர்களுக்கு கால்சியம் இரும்புச் சத்து தேவை . இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும் .

 

அதிக வேலைப்பளு , மன உளைச்சல் , நீண்ட பட்டினி இருப்பவர்கள் , அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள் .

 

இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி , ஞாபக சக்தி கூடும் . கை , கால் தளர்ச்சி குணமாகும் .

 

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் .


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பழங்கள் - பலன்கள் : நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்! பற்றி அறிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Fruits - Benefits : Dates cure nervousness! Let's learn about - Notes in Tamil [ ]