உங்கள் திருமணத்தின் தொடக்கத்தில் அவள் உடல் எவ்வளவு அழகாகவும், மென்மையாகவும், செதுக்கப்பட்டதாகவும் இருந்தது என்பதை நினைவில் வையுங்கள்.
அன்புள்ள ஆண்களே,
உங்கள்
திருமணத்தின் தொடக்கத்தில் அவள் உடல் எவ்வளவு அழகாகவும்,
மென்மையாகவும், செதுக்கப்பட்டதாகவும் இருந்தது
என்பதை நினைவில் வையுங்கள்.
நீங்கள்
எப்போதும் நேசித்த அதே மனப்பான்மையுடன் அவள் இன்னும் அதே அழகான பெண்.
வித்தியாசம்
என்னவென்றால், அவள் உங்கள் குழந்தைகளுக்கு உயிர்
கொடுத்தாள். அதற்கான விலை ஒரு காலத்தில் அவள் பெற்ற உடலை இழந்தது.
உங்கள்
மனைவி மீது குறை சொல்லாதீர்கள், ஏனென்றால்
அவளுடைய கொழுப்பு அதிகரித்தது, அவள் அதை விரும்புகிறாள்
என்று நினைக்காதே!
ஒரு
தாயின் பாசம் அவளை அதற்கெல்லாம் கண்மூடித்தனமாக மாற்றுகிறது,
அவளுடைய ஒரே கவலை அவளுடைய குழந்தைகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சி.
இந்த
வயிறு ஒரு காலத்தில் உங்கள் குழந்தைகளை 9 மாதங்கள் அவர்களின் வலி,
சோர்வு மற்றும் எடையுடன் கட்டிப்பிடித்து, பிரசவம்
வரை அவர்களை மூடும் சூடான வீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து
தாய்மார்களுக்கும் ஆயிரம் இதயங்கள் ❤
ஓடும்
உலகில், ஓடும் மனிதா! நில்!_
ஓயாது
ஓடி அடைய நினைக்கும்
உன்
தேவைகள் தான் என்ன?
பட்டியல்
நீளுகிறதோ?
அதை,
அவசியம்,
அத்யாவசியம், அனாவசியம்,
என்று வகை பிரி!
அந்தஸ்துக்காக,
ஆசைக்காக,
ஆடம்பரத்துக்காக
பகட்டுக்காக,
படோடாபத்துக்காக,
ஜம்பத்துக்காக,
ஜபர்தஸ்துக்காக,
பேருக்காக,
புகழுக்காக,
வயிற்றுப்
பசிக்காக,
நாவின்
ருசிக்காக,
குடும்ப
நலனுக்காக,
சுய
மரியாதைக்காக,
என
மேலும் வகை பிரி!
ஆரோக்கியமான
உடல்,
அமைதியான
மனம்,
தெளிவான
தோற்றம்,
அன்பான
உறவு,
ஆனந்தமான
வாழ்வு..
இவைகள்
தானே உன் தேவைகள்?
இவைகளை
கொடுக்கின்றதா,
நீ
வாழும் வாழ்க்கை முறை?
தேவை
என்ற பெயரில்,
வீட்டில்,
சொல்ப உபயோகப் பட்டு,
அடைந்து
கிடக்கும்
பொருட்களை
பார்!
நிரம்பி
வழியும் அலமாரியை பார்!
துணி
மணிகளைப் பார்!
இவையெல்லாம்
மோகத்தால்
உந்தப்பட்ட,
போகத்திற்கு
ஆட்பட்ட,
விரயங்கள்
என்று காண்பாய்!
பகட்டிற்கும்,
ஆடம்பரத்திற்கும் அடிமைபட்டு,
மாத
தவணையில் வாங்கிய
பொருட்களைப்
பார்!
இவையெல்லாம்
ஆபத்திற்கோ, அவசரத்திற்கோ,
சமய
சந்தர்ப்பத்திற்கோ,
உதவாது
என காண்பாய்!
வீண்
ஜம்பத்துக்கும், ஜபர்தஸ்துக்கும் ஆளாகி,
அவனைப்
போல், இவனைப் போல் வாழ
செலவழித்த
கணக்கைப் பார்!
உன்னைப்
போல் நீ வாழவில்லை,
உனக்காகவும்
நீ செலவழிக்கவில்லை,
எல்லாம்
இன்பத்தை போல் தெரிந்த
கானல்
நீரெனக் காண்பாய்!
நீ
சம்பாதிப்பது,
உன்
அவசிய, அத்யாவசிய, தேவைகளுக்கு
போதும் என்று காண்பாய்!
இந்த
அலைச்சலும், மன உளைச்சலும், வீண்
பகட்டிற்காகவும், அந்தஸ்திற்காகவும், போலி
கௌரவத்திற்காகவுமே, என உணர்வாய்!
ஆரோக்கியத்தை
பணயம் வைத்தா,
நாவின்
சுவை தேடுவது?
கடன்
வாங்கியா காற்று வாங்குவது?
தூக்கத்தை
விற்று பஞ்சு மெத்தை
வாங்கி
என்ன பயன்?
ஏ
மனிதா!
இதனை
எண்ணி,
உன்னை
சீர் செய்து கொள்!
உன்
மன அமைதிக்கு பங்கம் வராத
வாழ்வை
வகுத்துக் கொள்!
உன்
வாழ்க்கை உன் பிடியில் இருக்கட்டும்!
3 ஜென்
கதைகள் :
💥 மிக
அருமையான
3 ஜென்
கதைகள்
முதலிலும்
அவை என்ன உணர்த்தின என பின்பும் பார்க்கலாம்..
ஜென்
கதை - 1
ஜென்
குருவை பார்க்க ஒருவர் வந்தார்..
குரு,
"நாம முன்பே பார்த்திருக்கோமா..???' என்றார்...
"ஆம்"
என்றார் வந்தவர்.. "
அப்படியா..???
அப்படின்னா
வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு
அடுத்து
இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு "நாம முன்பே பார்த்திருக்கோமா...???'
என்றார்
"இல்லை"
என்றார்
இப்போது
வந்தவர்..
"அப்படியா...???
அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு
ஜென்
கதை -2
ஒரு
டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்
ஒரு
முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது
அப்போது
மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்
அவர்கள்
இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்;
இல்லா விடில் அது பெரும் அவமானம். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரைக்காக ஒரு ஜென்
துறவியை நாடினான். அவனது கதை முழுதும் கேட்ட அவர் "சண்டைக்கு இன்னும் எத்தனை
நாட்கள் உள்ளன" என்று கேட்டார். "30 நாட்கள்" என்றான் அவன் "இப்போது
நீ என்ன செய்கிறாய்...???" என்று பின்பு கேட்டார்
"டீ
ஆற்றுகிறேன்" என்றான் அவன்"
அதையே
தொடர்ந்து செய்" என்றார் அவர்.
ஒரு
வாரம் கழித்து வந்தான் டீ கடைக்காரன்.
"இன்னும்
ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று"
என்றார் ஜென் துறவி.
இரண்டு
வாரம் ஆனது அப்போதும் அதே அறிவுரை.
போட்டி
நாள் அருகில் வந்து விட்டது....
டீ
கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம் "நான் என்ன செய்ய வேண்டும்...???"
என்று கேட்டான்
"போட்டிக்கு
முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.
மல்யுத்த
வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான் "வா.. முதலில் டீ சாப்பிடு"
என்றான் கடைக்காரன்...
"சரி"
என்று அமர்ந்தான் வீரன்.
டீ
ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.
இதற்கு
முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்
இப்போது
என்ன ஒரு வேகம்.....!!!
ஒரு
சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால் .....
போட்டிக்கு
எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்
போட்டியே
வேண்டாம் என சென்று விடுகிறான்...
ஜென்
கதை -3
சிறுவன்
ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு
பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்
ஜென்
குருவிடம் அவன்
"குருவே,
என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது
இறந்து விட்டதா...???" என்று கேட்டான்
குரு
"இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை
சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது. அப்படி இல்லாமல் குரு "உயிருடன்
உள்ளது" என்று கூறினால்...
தன்னுடைய
கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள்
முடிவெடுத்தான்.
ஜென்
ஆசிரியர் "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று
சொல்லி விட்டுச் சென்று விட்டார்
கதை
- 1 உணர்த்தியது
நமக்கு
தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய்
நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி.
கதை
- 2 உணர்த்தியது
அநேகமாய்
இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை
எனினும்
சில வரிகள்
நாம் செய்யும் செயலையே
ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு
உன்னத நிலையை எட்டுகிறோம்.
ஜென்
கதைகளில் டீ சாப்பிடுவது அடிக்கடி நிகழும் ஜப்பானில் இன்றைக்கும் டீ சாப்பிடும்
திரு விழா என்றே ஒரு விழா உண்டு.
இதில்
ஒவ்வொரு மிடக்கும் நிதானமாய், மகிழ்ச்சியாய்
அனைவரும் டீ அருந்தி கொண்டாடுவர்
வாழ்க்கையை
இவ்வாறு துளி துளி ஆக enjoy - செய்ய வேண்டும் என்கிறது ஜென்
கதை - 3 உணர்த்தியது
அந்த
குருவி நம் வாழ்க்கையையும் அந்த சிறுவன் நம்மையும் எனக்கு உணர்த்துகிறது
நம்
வாழ்க்கையை அழிப்பதும், சிறக்க வைப்பதும் நம் கையில் தானே
உள்ளது
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : அன்புள்ள ஆண்களே, - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : Dear Men, - Tips in Tamil [ Encouragement ]