பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்!

குழந்தை பாக்கியம் பெற, திருமணத் தடை அகல

[ ஆன்மீக குறிப்புகள் ]

Devotions to Bhairav... Benefits! - To get a child, the marriage ban is wide in Tamil

பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்! | Devotions to Bhairav... Benefits!

பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கின்றன. அவை:

பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்!

 

பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கின்றன. அவை:

 

வறுமை நீங்க

வெள்ளிக்கிழமை மாலைநேரத்தில் பைரவருக்கு வில்வம். வாசனை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் வறுமை ஒழியும்.

 

சனி தோஷங்கள் நீங்க

சனிக்கிழமைகளில் உச்சிக் காலத்தில் பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்வது சனி தோஷங்களைப் போக்கும்!

 

திருமணத் தடை அகல

ஆண் பெண் திருமணத் தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெற ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம், சகஸ்கர நாம அர்ச்சனை செய்வது நல்லது.

 

குழந்தை பாக்கியம் பெற

குழந்தை பாக்கியம் தாமதமாகும். கணவர்- மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையைச் செய்து வந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

 

இழந்த பொருட்கள், சொத்துகளை திரும்பப் பெற

பைரவர் திருமேனியின் முன்பு மிளகை சிறு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

 

பகைவரை வெல்ல

பகைவரை வெற்றி கொள்ள பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, ஜவ்வாது, புணுகு சாத்தி, நெய்யால் செய்யப்பட்ட உணவு, தேன் ஆகியவற்றை அவருக்குப் படைத்து, சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்ய பகைவர்கள் தொல்லை ஒழியும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : பைரவருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகள்.... பயன்கள்! - குழந்தை பாக்கியம் பெற, திருமணத் தடை அகல [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Devotions to Bhairav... Benefits! - To get a child, the marriage ban is wide in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்