நீரிழிவு நோயும் நரம்புத் தளர்ச்சியும்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Diabetes and nervous breakdown - Medicine Tips in Tamil

நீரிழிவு நோயும் நரம்புத் தளர்ச்சியும் | Diabetes and nervous breakdown

நீரிழிவு நோய் பற்றி நம்மில் பலர் பொதுவாக அறிந்திருப்பார்கள். நீரிழிவு நோய் ஒரு கொடிய நோய் என்று கூறுவதற்கில்லை.

நீரிழிவு நோயும் நரம்புத் தளர்ச்சியும்

நீரிழிவு நோய் பற்றி நம்மில் பலர் பொதுவாக அறிந்திருப்பார்கள். நீரிழிவு நோய் ஒரு கொடிய நோய் என்று கூறுவதற்கில்லை. இந்த நோயைக் கண்டுபிடிப்பதும், கட்டுப்படுத்துவதும் தற்காலத் தில் மிகவும் எளிய ஒன்றாகவே உள்ளது. நீரிழிவு நோயினால் வேறு சில விளைவுகள் ஏற்படக்கூடும். அந்த விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும். நீரிழிவு நோய் காரணமாக கிருமி தொற்றி, இருதய, இரத்தநாள நோய்கள் போன்ற பாதிப்புகள் இருக்கும் என்றாலும் மிகவும் கடுமையான பாதிப்பு மூளை நரம்பு மண்டலப் பிணிகள், கண்கள் பாதிப்பு என்பவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மூளையிலிருந்து வரும் பன்னிரெண்டு முக்கியமான நரம்புகள், மற்றும் முதுகில் உள்ள தண்டு வடம், தண்டு வடத்திலிருந்து கிளர்ந்தெழும் நரம்புகள் ஆகிய அனைத்துமே நீரிழிவு நோயினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக தசைகளை இயக்கும் நரம்புகள் உணர்ச்சிகளுக்கு ஆதாரமாக இருக்கும் நரம்புகள் மிக, மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக நரம்பு மண்டலம் முழுவதுமே நீரிழிவு நோய் காரணமாகப் பெருங் குழப்பத்துக்கு உள்ளாகி விடுகிறது.

நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதற்கு இது தான் முக்கிய காரணமாகும். நீண்ட கால நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு கை கால்கள் உணர்ச்சியற்றுப் போய் விடுவது இதனால்தான். இதே போல் கண் பார்வைக்கு பார்வைக்கு ஆதாரமான நரம்புகளும் நீரிழிவு நோயினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் நரம்பு தொடர்புடைய பிணிகளை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தினால்தான் முற்றிலுமாகக் குணமாக்க முடியும். இதை விடுத்து நரம்புக்கோளாறுகளுக்கென தனி மருந்துகளை உட்கொண்டிருப்பதனால் ஒரு பயனும் கிடையாது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு ஐந்து வகையில் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட அனைவருமே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. பரம்பரை வழி இந்த நோய்க்கு இலக்கானவர்களும், மிகவும் இளம் பருவத்தில் நோய்க்கு இலக்கானவர்களும் மட்டுமே இந்த இன்சுலின் ஊசி சிகிச்சையினை மேற்கொள்ளலாம். சிலருக்கு நீரிழிவு நோய் காரணமாக சிலர் அடிக்கடி மயக்க நிலையில் இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு இன்சுலின் ஊசி சிகிச்சை தேவைப்படும்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் சிபாரிசு செய்யும் மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். சில வகை மாத்திரைகள் கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்க வழி செய்கின்றன. நீரிழிவு நோய் முற்றிய நிலையில் இருந்தால் கூட உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் அந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.  உடல் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய்க்கான காரணங்களில் முக்கியமான ஒன்று ஆகும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையைத் திட்டமான அளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்காக உணவுக் கட்டுப்பாட்டு முறையினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதைச் சிலர் வேறு வகையாக பொருள் கொண்டு விடுவார்கள்.

அதிகமாக உணவை உட்கொள்ளாமல் பட்டினி கிடப்பதுதான் உணவுக் கட்டுப்பாடு என அறியாமை காரணமாகச் சிலர் அர்த்தம் கொள்வர். இது சரியல்ல. உடல் வளர்ச்சிக்கும், நாம் செயற்படுவதற்கேற்ற சக்தியையும் தரக்கூடிய சரியான உணவை முறையோடு உட்கொள்வதுதான் கட்டுப்பாடான உணவு ஆகும்.

மனிதனுக்கு ஊட்டமும் வலிமையும் அளிக்கக் கூடிய உணவை அதன் சக்தியை வைத்து மதிப்பிடுகிறார்கள் இந்தச் சத்து கலோரி என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு கன சென்டி மீட்டர் தண்ணீரை சென்டி கிரேட் அளவு ஒரு கொதிக்க வைக்கத் தேவைப்படும் சக்தியே ஒரு கலோரி ஆகும். மனிதர்களின் உழைப்புக்கு ஏற்ப இரத்த கலோரிகளின் அளவு மாறும். கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஏறத்தாழ 400 கலோரி சக்தியளிக்கக் கூடிய உணவு தேவைப்படும்.

கடுமையான உடல் உழைப்பு இல்லாத ஆண்களுக்கு 2400 கலோரி தரக் கூடிய உணவு தேவைப்படும். பெண்களுக்கு 2500 கலோரி உணவு தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு 2200 கலோரி உணவு வேண்டியிருக்கிறது. இந்த கலோரி அளவுகளைப் பற்றி அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. நாம் முன்னர் சத்தான உணவு பற்றி குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால் போதும்.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து உணவு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டு, கொத்தவரங்காய், பீன்ஸ், வெள்ளரிக்காய், கீரை போன்றவற்றில் நார்ச் சத்து அதிக அளவில் உள்ளன. மேற் சொன்ன நடைமுறைகளைப் பின்பற்றி கட்டுப்பாட்டு முறையில் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைச் சமனப்படுத்தலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

மருத்துவ குறிப்புகள் : நீரிழிவு நோயும் நரம்புத் தளர்ச்சியும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Diabetes and nervous breakdown - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்