வித்தியாச துர்க்கை!

அம்மன்

[ அம்மன்: வரலாறு ]

Difference Turki! - Amman in Tamil

வித்தியாச துர்க்கை! | Difference Turki!

வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சன்னிதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள்.

வித்தியாச துர்க்கை!

 

வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சன்னிதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள். ஆனால், சிவகங்கையில் உள்ள சசிவர்ணேஸ்வரர் கோவிலில் தென்திசை நோக்கி, தனிச் சன்னிதியில் இருக்கிறாள். இரண்டு கைகளுடன், இடது காலை மடித்து, காலுக்குக் கீழே அசுரனைக் கிடத்திய கோலத்தில் இவள் அமர்ந்திருக்கிறாள்.

 

திருமணத் தடை உள்ள பெண்கள் இவளுக்கு செவ்வரளிப் பூமாலை அணிவித்து, எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றி வழிபடு கிறார்கள்!

 

மேலும், மாதவிடாய் போன்ற பிரச்சனை உள்ள பெண்களும், வயது அதிகமாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களும், வயது அதிகமாயும் ருதுவாகாத பெண்களும் இவளுக்கு தீபமேற்றி, 27 முறை சன்னிதியை வலம் வந்து வணங்குகின்றனர். இந்த வழி பாட்டில் தங்கள் பிரச்சனைகள் தீரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : வித்தியாச துர்க்கை! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Difference Turki! - Amman in Tamil [ Amman ]