டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) – ஒரு பார்வை

சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல், வீடியோ மார்க்கெட்டிங், மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல்

[ வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் ]

Digital Marketing – An Overview - Social Media Marketing, Video Marketing, Email Marketing in Tamil

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) – ஒரு பார்வை | Digital Marketing – An Overview

மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்புக்கள் மற்றும் அதன் சேவையை சந்தைப்படுத்துதல் என்பது Digital Marketing ஆகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) ஒரு பார்வை


மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்புக்கள் மற்றும் அதன் சேவையை சந்தைப்படுத்துதல் என்பது Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strategy) மூலம் பொருட்கள் / சேவையை சந்தைப்படுத்தலாம். ஆன்லைன் வழியாக பல டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வித செலவும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.

தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் அதன் சேவையை சந்தைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.

 

சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல் (Social Media Marketing)

இன்றைய நிலையில் மக்கள் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது என்பது மிகவும் அவசியமாகும்.

Face book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (services) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள். மேலும் மக்களில் பலர் பொருள்களை வாங்க ஷாப்பிங் என்ற பழக்கங்கள் மேலோங்கி விட்டது. சுமாராக ஐந்து கடைகள் பார்த்துவிட்டு ஆறாவது கடைக்கு போக தயாராக உள்ளார்கள். அந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் மற்ற ஐந்து கடைகளில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று அதுவும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விதமாக உங்களிடம் உள்ள தயாரிப்புகள் / சேவைகளில் வித்தியாசம் இருக்க வேண்டும். இது போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.

எப்பொழுதும் வியாபாரத்தில் மற்றவர்களின் பாதையை பின்பற்றுவதை காட்டிலும் உங்களுக்கான பாதைகள் தனித்து இருக்க வேண்டும். அதற்காக வியாபாரத்துக்கு என்றே சில நெறிமுறைகள் இருக்கும். அதை அவசியம் அனைவருமே பின்பற்றுதல் வேண்டும். இங்கே இந்த வேகமான உலகத்தில் புதுசு புதுசா வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் மற்றும் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பவர்களும், (problem solvers) அந்த தீர்வை மக்களுக்கு கொண்டு சென்று விடையை பெறுபவர்கள் (Result Producers) தான் வியாபாரக் களத்தில் வெற்றி காண்கிறார்கள். வியாபாரத் தளம் மற்றும் மற்ற அனைத்து துறைகள் சார்ந்த களங்களிலும் முதலில் உள்ள மூன்று அதாவது Top 3 மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார்கள். அதற்காக புதியவர்கள் வர முடியாது என்று அர்த்தம் கிடையாது. அப்படி வர எவ்வளவு முயற்சிகள், புதிய ஒன்றை கொண்டு வருதல், புதிய உத்திகள் வேண்டும் என்பது தெரிந்து வைத்தல் வேண்டும். அதற்கான எளிய வழிகள் உருவாக்கி தருவது தான் இந்த டிஜிட்டல் மார்கெட்டிங் (digital marketing) ஆகும்.

தொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (videos), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை எளிய வழிகளில் வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும்.

Face book groups, google plus collection போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான followers களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.

 

வீடியோ மார்க்கெட்டிங் (Video Marketing)

இன்றைய காலங்களில் வீடியோக்கள் பார்ப்பது படிப்பதை காட்டிலும் அதிகம் விரும்பப்படுகிறது. காரணம் நேரம் மிச்சம் மற்றும் விரைவாகவும், விரிவாகவும் தெரிய, அறிய முடிகிறது. வலைத்தளங்களை விட You tube சானல்கள் முன்னாடி இடத்தை பிடித்து வருவதை சொல்லலாம். ஆனால் இன்றும் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் அதை தான் பின்பற்றுகிறார்கள். அதன் மூலம் சற்று நேபகம் மற்றும் நினைவூட்டும் திறன்கள் வளர வாய்ப்பு உள்ளது. நாம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அனைத்து துறைகளிலுமே இடம் பெற வேண்டும். அதற்கான வீடியோக்கள் உருவாக்க வேண்டும். தொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற பல தரப்பட்ட வீடியோ மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம்.

வீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.

 

தேடுபொறி உகப்பாக்கம் (SEO) Search Engine Optimization (SEO)

நமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம் பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர்.

இதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக என்ற  Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது.  Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டு வரலாம்.

 

தேடுபொறி சந்தைப்படுத்தல் (SEM) Search Engine Marketing (SEM)

Search Engine Marketing (SEM) என்பது ஒரு வகையான இணைய மார்க்கெட்டிங் (internet marketing) ஆகும். PPC (Pay per click) ads, CPC (cost per click) ads, CPM (cost per impressions) ads – உதாரணத்திற்கு google Adwords, Search analytics, Web analytics, Display advertising, Ad blocking, Contextual advertising, Behavioral targeting, Affiliate marketing, Mobile advertising போன்றவைகள் இந்த வகை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இணைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவை கட்டணங்கள் வசூலிக்கின்றன.

 

உள்ளடக்க சந்தைப்படுத்தல் (Content Marketing)

தொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,

Content ஐ சமூக வலைத்தளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals, video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.

 

மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல் (Email Marketing)

வாடிக்கையாளர்களுக்கு  தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி தெரியப்படுத்த அவர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது Email Marketing ஆகும். பல ஈமெயில் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பலாம். Mailchimp, Aweber, Constant contact, freshmail, madmimi, icontact போன்ற பல நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி வரை இலவச சேவையை வழங்குகிறது.

 

கதை பகிர்வு (Story Sharing)

பல இணையத்தள ஊடகங்கள் ஸ்டார்ட் அப், தொழில் கதைகளை (stories) பதிவிடுகிறது. நிறுவனத்தைப் பற்றின கதைகள், தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத அந்த இணைய ஊடகத்தை அணுகலாம். உதாரணத்திற்கு TamilEntrepreneur.com, Yourstory.com, iamwire.com, inc42.com, nextbigwhat.com, startupsimba.com, techinasia.com, startups.in, knowstartup.com, misfits.io, Indianweb2.com போன்றவைகள். medium.com, quora.com, linkedin போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம்.

 

செல்வாக்கு செலுத்துபவர் சந்தைப்படுத்துதல் (Influencer Marketing)

மிகவும் பிரபலமான, ஆளுமை மிக்க மனிதர்களிடம் அணுகி தொழிலை பற்றி அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள், blog, நெட்வொர்க்கிங் (networking), தொடர்புகள், புத்தகங்கள் ஆகியவற்றில் பகிர சொல்லலாம்.

 

உள்ளூர் பட்டியல்கள் (Local Listings)

Local business directory, google map, bing map, local citations ஆகியவற்றில் குறிப்பிடலாம். Justdial.com, sulekha.com, quikr.com, olx.com, clickindia, locanto, click.in ஆகியவற்றின் மூலமும் விளம்பரப்படுத்தலாம்.

 

மொபைல் மார்க்கெட்டிங் (Mobile Marketing)

பெரும்பான்மையானவர்கள் இணையத்தை மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். எனவே Mobile Marketing செய்வது தொழிலுக்கு மிகவும் அவசியமாகிறது. Push notifications இது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை அனுப்பலாம். pushengage.com, foxpush.com, pushcrew.com, izootoo.com போன்ற சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட மொபைலுக்கு அறிவிப்பை அனுப்ப இலவச சேவையை அளிக்கின்றன.

தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த செய்ய App based marketing (android & iOs App), Mobile search ads, Mobile image ads, Location-based marketing, SMS, QR codes, In-game mobile marketing போன்ற பல மொபைல் மார்க்கெட்டிங்களை பயன்படுத்தலாம்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் :

1. நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்துதல். (மக்களிடம் கொண்டு சேர்த்தல்), உள்ளூர் மட்டுமில்லாது பிற மாநிலம் மற்றும் நாட்டிற்கு கொண்டு செல்லுதல்.

2. பிராண்ட் (உங்களது நிறுவனத்தை பிரபல படுத்துதல் மற்றும் தகவல் கொடுத்தல்)!

3. உங்களது வாடிக்கையாளர்களை உருவாக்க, எளிதாக அணுக மற்றும் தொடர்பில் இருக்க!

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது மிக அவசியம் ! மிக அவசியம்! மிக மிக அத்யாவசியம்!

 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் இல் முக்கிய பங்காற்றுபவை சமூக வலைதளங்கள் (Facebook, twitter, quora, LinkedIn, Pinterest, YouTube, medium etc..) digital marketing ஈடுபடாத தொழில்கள் சரிவைக் காணலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இனி ஒரு சின்ன கடையோ அல்லது பெரிய நிறுவனமோ அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தனி வலைத்தளம் (Website), play store App, Promotion activity இன்னும் பல online வழிகளில் மார்க்கெட்டிங் தெரிந்து வைத்து இருத்தல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். இல்லையெனில் அதற்குரிய digital marketing செய்யும் நிறுவனம் அதிகம் வந்து கொண்டு இருக்கிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்து உங்கள் வியாபாரம் வளர அவர்களை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆனால் மக்கள் மனதில் இன்னும் விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே சொல்லலாம். எதுவும் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்தல் என்பது தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான். வாய்ப்புகள் என்பதும் சூர்ய உதயம் போல... ரொம்ப நேரம் கழித்து பார்க்கலாம் என்றால் பார்க்க முடியாமல் போவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டம் ஒரு முறை வரலாம். அது இஷ்டத்துக்கு தான் வரும். அனால் வாய்ப்புகள் ஒன்று அல்லது இரண்டு முறைகள் வரலாம். வராமலே போகலாம். வாய்ப்புகளை தேடி போகி கிடைக்காது போனவர்களும் உண்டு. அந்த அவமானத்தில் வெறி கொண்டு அதையே வெகுமானமாக்கி முதலீடாக செய்து லாபம் பெற்றவர்களும் உண்டு. வாய்ப்புக்களை உருவாக்கியும், தன்னை திறன் படுத்தி, மேம்படுத்தி வாய்ப்புகளை தேட வைப்பவர்களும் வையகத்தில் உண்டு. இதில் நாம் யார் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அதோடு நம் உழைப்பும் நம்மிடம் தானே இருக்கிறது. வெற்றி கனியை சுவைக்காமலா போய் விடுவோம். சரி வாருங்கள்! Digital Marketing பற்றி அறிவோம்.

 

Digital Marketing என்றால் என்ன? அதன் மூலம் எவ்வாறு சம்பாதிப்பது?

நாம் அனைவருக்குமே நம்முடைய வேலையைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. நீண்ட நாள் ஒரு வேலையில் நாம் நீடித்து இருக்க, அந்த வேலை நமக்கு பிடித்த வண்ணமாக இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்த வேலையில் ஒரு நிலைத்தன்மையை நாம் கொண்டிருக்க முடியும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைதான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் துறையாகும். தற்போதுள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆளைக் காண்பது அரிதானது. கையில் போனை எடுத்தாலே Instagram, whatsapp, facebook, youtube என்று அதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அது சார்ந்த துறையில் நாம் பணியில் சேர்வது நம் எதிர்காலத்திற்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

 

நோக்கியா நிறுவனம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நிறுவனம் முற்றிலும் அழிந்து போனதற்கு காரணம், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாததே”

 

நான் எப்படி இந்த துறையில் என் வேலையை தொடங்குவது. எப்படி தெரிந்து கொள்வது என்று தோணலாம். நம்மில் கையிலே இருக்கும் மொபைல் போனில் அறியலாம்.

பணம் படைத்தவர்கள் தாராளமாக அதில் இணைந்தும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். பணம் தொடக்கத்தில் முதலீடு செய்ய முடியாது என எண்ணுபவர்கள், யூடியூபில் இது சார்ந்த காணொளிகள் பல ஆயிரம் கணக்கில் இருக்கிறது. தேவையில்லாமல் Shorts காணொளிகளில் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை சார்ந்து யூடிபில் நீங்கள் கற்றுக் கொள்வது, உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் யாவை?

சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்தி உங்கள் வணிகம், உங்கள் தயாரிப்புகள் / சேவைகள் மற்றும் உங்கள் சந்தையைப் பொறுத்தது. ஆஃப்லைன் விற்பனை சுழற்சிகளைக் கொண்ட நிறுவனங்களைக் காட்டிலும் ஈகாம்களுக்கு வேறுபட்ட உத்திகள் இருக்கும். முக்கியமானது உங்கள் நிறுவனத்திற்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எது சிறந்தது என்பதைக் கண்டறிந்து அதை உருவாக்குவது.

 

அவ்வாறு செய்வதற்கான எனது உதவிக் குறிப்புகள் இங்கே:

1. உங்கள் சந்தையை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆர்வங்கள் என்ன, அவர்கள் எங்கு தங்கள் தகவல்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் தொடங்குவதற்கு முன்பு எல்லாவற்றையும் கண்காணிக்க ஒரு கட்டமைப்பை செயல்படுத்தவும். எல்லாவற்றையும் அளவிடக்கூடியது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள், இதன் மூலம் என்ன வேலை என்று உங்களுக்குத் தெரியும்.

3. உங்கள் வலை இருப்பை மேம்படுத்தவும். உங்கள் பயனர் அனுபவம், பிராண்ட் மற்றும் எஸ்சிஓ (SEO) ஆகியவற்றைக் கையாளுங்கள், இதன் மூலம் பார்வையாளர்கள் உங்கள் தளத்திற்கு வருவதால் உங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி வைக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். பார்வையாளர் எண்கள் அதிகரிக்கும் போது மாற்று வீத தேர்வுமுறை செய்ய தயாராக இருங்கள்.

4. குறைந்த புனல் போக்குவரத்தை பிடிக்க கட்டண தேடல் பிரச்சாரங்களை அமைக்கவும்.

5. எஸ்சிஓ மற்றும் பிபிசி ஆகியவற்றிலிருந்து உங்கள் தேடல் போக்குவரத்தை கண்காணிக்கவும், வருமானத்தை குறைக்காமல் முடிந்தவரை போக்குவரத்தை இயக்க இருவரின் சிறந்த சமநிலையைக் கண்டறிய முயற்சிக்கவும்.

6. பார்வையாளர்களை உருவாக்க சமூக மற்றும் தொடர்புடைய தளங்கள் மற்றும் மன்றங்களில் ஈடுபடுங்கள்.

7. வலைப்பதிவைத் தொடங்குவதைக் கவனியுங்கள். வலைப்பதிவுகள் பல காரணங்களுக்காக மதிப்புமிக்கவை: அவை பகிர்வதற்கான உள்ளடக்கத்தை வழங்குகின்றன, இது பார்வையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கவும் ஈடுபடவும் ஒரு வழி, எஸ்சிஓவை மேம்படுத்துவதற்கான கூடுதல் பக்கங்கள், மற்றும் இது பல வழிகளில் தளத்திற்கு அதிக போக்குவரத்தை செலுத்துவதற்கான வாய்ப்பாகும்.

8. தொடர்புடைய மறுஆய்வு தளங்களில் சுயவிவரங்களை அமைப்பதன் மூலமும், உங்கள் வக்கீல்களாக மாறுவதற்கு குறிப்புகளை ஈடுபடுத்தி செயல்படுத்துவதன் மூலமும் நம்பகத்தன்மையை உருவாக்கி உருவாக்குங்கள்.

9. இப்போது வேடிக்கை தொடங்கும் இடத்திலேயே நாங்கள் அடித்தளம் அமைத்துள்ளோம்! பல சேனல் மூலோபாயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் அடுக்கும் சேனல்கள் உங்கள் வணிக வகை மற்றும் உங்கள் சந்தையைப் பொறுத்தது. உங்கள் வணிக வகையைப் பொருட்படுத்தாமல், பணம் செலுத்திய சமூக, மறு சந்தைப்படுத்துதல், மின்னஞ்சல் மற்றும் காட்சிக்கு மதிப்பு இருக்கலாம். சில வணிகங்கள் ஏபிஎம்மிலிருந்து, சில கூட்டாண்மைகளிலிருந்து, சில செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து, சில வீடியோவிலிருந்து, சில உள்ளடக்க சந்தைப்படுத்தல், சில ஷாப்பிங் ஊட்டங்களிலிருந்து மற்றும் பலவற்றிலிருந்து பயனடைகின்றன.

10. நீங்கள் எந்த சேனல்களை அடுக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கும்போது, ​​வாங்குபவரின் பயணம் மற்றும் உங்கள் விற்பனை சுழற்சியைப் பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள் (அந்த விஷயங்கள் ஒன்றல்ல! அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்). புனல் கீழே வாய்ப்புகளை நகர்த்த உதவும் உள்ளடக்கம் அல்லது மைக்ரோ-மாற்றங்களுடன் ஒரு பாதையை உருவாக்கவும். இருப்பினும், நீங்கள் மக்களை புனலுக்கு கீழே தள்ளி, பின்னால் இழுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கவும். சேனல்களின் பாதையை சீர்குலைக்காமல் அவர்கள் மாற்ற முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழி, பார்வையாளர்களையோ அல்லது உள்நோக்கத்தின் பிற குறிகாட்டிகளையோ பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை ஒருங்கிணைப்பதாலும் ஆகும்.

11. உங்கள் பிரச்சாரங்களை முழுமையாய், சம்பந்தப்பட்ட அனைத்து சேனல்களிலும், சேனலிலும் அளவிடவும். இலக்குகளை முழுமையாய் மற்றும் சேனல் மட்டத்தில் அமைக்கவும். என்ன வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அதை மேம்படுத்தவும், அதை உருவாக்கவும்!

 

இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்

 

டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் என்பது என்ன? விளக்கம் தருக.

நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது, விற்பனை செய்வது, பொருளை விநியோகம் செய்வது இவையனைத்தும் சந்தைப்படுத்தல் ஆகும். இணையம் வருவதற்குமுன் பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் தங்கள் பொருளை சந்தைப்படுத்தினார்கள். தற்போது பெரும்பாலானோர் திறன்பேசி, கணினி மூலம் இணையத்தில் உலவுகிறார்கள். அவர்களிடம் நமது பொருளை சந்தைப்படுத்துவது தான் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் ஆகும்.

உதாரணத்திற்கு பேஸ்புக் சமூக வலைதளத்தில் இருப்பவர்களிடம் நமது பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால் Facebook Ads மூலம் விளம்பரப்படுத்தலாம். Facebook Ads போன்று Google Ads, Bing Ads, Pinterest Ads என்று பல விளம்பர நிறுவனங்கள் இருக்கிறது. இவைகளை பயன்படுத்தி உங்கள் பொருளை இணையத்தில் சந்தைப்படுத்தலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எங்கெல்லாம் படிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பு எப்படி உள்ளது? டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இளங்கலை உள்ளதா? என்பது குறித்து பார்க்கலாம்.

 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும், வேலைவாய்ப்புகளும்

பட்டயப் படிப்பு: Diploma in Digital Marketing Courses, Professional Diploma in Digital Marketing Courses

இளநிலை படிப்பு: BBA in Digital Marketing, UG Program in Digital Marketing Courses

முதுநிலைப் படிப்பு: MBA Digital Marketing, MA in Digital Marketing Courses and Creative Marketing

துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்: Market Research Analyst, Content Marketer/Manager, Digital Marketing Consultant, Conversion Rate Optimizer, SEO Manager/Professional, Email Marketer

இந்தத் துறையில் ரூ.25,000 முதல் 40 ஆயிரம் வரை கல்வித் தகுதிக்கேற்ப அடிப்படை சம்பளம் பெறலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை தேர்வு செய்வோர் என்னென்ன திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? அத்துறையில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஃபேஸ்புக், கூகுளில்கூட டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி கற்கலாம். சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீடியோக்களை எடிட் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. விளம்பரப்படுத்துதலின் நுணுக்கங்களை அறிந்திருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்வது அவசியம். வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டே டிஜிட்டல் மார்கெட்டிங் துறையிலும் சாதிக்கலாம். ஃபேஸ்புக், கூகுள் தளங்களும் டிஜிட்டல் மார்கெட்டிங் பாடப்பிரிவுகளை கற்றுத் தருகின்றன. டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் 90% சான்றிதழ் படிப்புகள் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம் 

வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் : டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) – ஒரு பார்வை - சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல், வீடியோ மார்க்கெட்டிங், மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல் [ வணிகம் ] | Business: Digital Marketing : Digital Marketing – An Overview - Social Media Marketing, Video Marketing, Email Marketing in Tamil [ Business ]