திண்டுக்கல்: வெள்ளை விநாயகர்!

விநாயகர்

[ விநாயகர் ]

Dindigul: White Ganesha! - Ganesha in Tamil

திண்டுக்கல்: வெள்ளை விநாயகர்! | Dindigul: White Ganesha!

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டில் அமைந்துள்ளது வெள்ளை விநாயகர் கோவில்.

திண்டுக்கல்: வெள்ளை விநாயகர்!

 

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டில் அமைந்துள்ளது வெள்ளை விநாயகர் கோவில். இக்கோவில் அமைந்துள்ள இடத்திற்குப் பின்புறம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய குளம் இருந்தது.

 


இந்தக் குளத்தின் அருகே உள்ள நந்தவனத்தில் நந்தியாவட்டை மலர்கள் பூத்துக் குலுங்கின இந்த மலர்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். நாள்தோறும் இவற்றினால் செய்த மலர் மாலைகளைக் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம்! இவ்வாறு நந்தியாவட்டை மலர்கள் அணிவிக்கப்பட்ட விநாயகர் வெண்மை நிறத்தில் காட்சியளித்தார். இதனைக் கண்டு வணங்கிய பக்தர்கள் நாளடைவில் 'வெள்ளை விநாயகர்' என்றே அழைக்கத் தொடங்கினர். அதுவே நாளடைவில் வெள்ளை விநாயகர் கோயில் ஆயிற்று.

 

இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 19 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டிலேயே இங்குதான் விநாயகருக்கு அதிக நாட்கள் விழா எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்புபவர்கள் இங்கு வந்து வெள்ளை விநாயகரைத் தரிசித்துச் செல்கின்றனர். விபத்துக்களால் உடல்நலம் குன்றியவர்கள் இங்கு வந்து, சிதறு தேங்காய் உடைத்து உடல்நலம் தேற வேண்டிச் செல்கிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : திண்டுக்கல்: வெள்ளை விநாயகர்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Dindigul: White Ganesha! - Ganesha in Tamil [ Ganesha ]