நோய்களும் கை வைத்தியங்களும்

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Diseases and remedies - Siddha medicine in Tamil

நோய்களும் கை வைத்தியங்களும் | Diseases and remedies

எந்த ஒரு பேதி மருந்தையாவது சாப்பிட்டு அளவு மீறி பேதியானால் அதை நிறுத்த எலுமிச்சம் பழத்தால் தான் முடியும்.

அளவு மீதிப் போரும் பேதியை நிறுத்த

எந்த ஒரு பேதி மருந்தையாவது சாப்பிட்டு அளவு மீறி பேதியானால் அதை நிறுத்த எலுமிச்சம் பழத்தால் தான் முடியும். இந்தசமயம் ஒரு பழத்தின் சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் பேதி உடலே நிற்கும், விளையாட்டு ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை காரணமாக ஏற்படும் களைப்பைப் போக்க ஒரு எலுமிச்சம் பழத்தை உடனே கடித்துச் சாற்றைச் சாப்பிட்டாலும் ஒரு பழத்தின் சாற்றை எடுத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டாலும் உடனே களைப்பை மாற்றும்.

 

இருமல் குணமாக

நெஞ்சில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த மருந்தைத் தயார் செய்து கொடுத்தால் குணமாகும். தேவையான அளவு இஞ்சியை எடுத்து அம்மியில் வைத்துத் தட்டி சாறு எடுத்து வடிகட்டி அந்தச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு அரை மணி நேரம் வைத்தால் சாறு தெளியும். கீழே கண்ணாம்பு வண்டல் தேங்கி நிற்கும். மேலேயுள்ள தெளிவு நீரை மட்டும் இறுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, கோழி முட்டையின் வெண்ணிகற ஓட்டை சுத்தம் செய்து அதை அம்மியில் லைத்து, எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல அரைத்து அதில் அத்திக்காயளவு எடுத்து, இஞ்சிச் சாற்றில் போட்டுக் கலக்கி, காலை, மாலை இரு வேளைவாகத் தொடர்ந்து ஏழு நாட்கள் வரை கொடுத்து வந்தால்,  இருமல் முழுதுவமாகக் குணமாகும்,

 

தேன் விஷத்தை இறக்க

தேன் கொட்டியவுடன் அந்த இடத்தில் ஒரு எனிமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பாதியைக் கொட்டிய இடத்தில் வைத்து நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். இந்த விதமாக இரண்டு துண்டுகளையும் தேய்த்து முடித்துவிட்டால் விசம் இறங்கி விடும். கடுப்பு நின்றுவிடும்.

 

தலைவவி நிற்க

சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். இப்படிப் பட்டவர்கள் தலைவலி வந்தவுடன், ஒரு டம்ளர் சூடான ஸ்ட்ராங் காப்பியில் ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதி அளவு சாற்றைப் பிழிந்து உடனே குடித்து விட்டால் தலைவலி நிற்கும்.

உஷ்ண வயிற்றுவலி குணமாக

உஷ்ணம் காரணமாக சிவருக்கு நாங்க முடியாத வயிற்றுவலி ஏற்படும். இந்த சமயம் அரைப்பகுதி எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழித்து கலக்கி விட்டு, ஆப்பச் சோடாமாவில் ஒரு சிட்டிகை எடுத்து அதில் போட்டால், சாறு பொங்கி எழும். இந்த சமயம் அதை உடனே குடிக்கக் கொடுத்து விட்டால், 15 நிமிடத்தில் வயிற்று வலி குணமாகும்.

 

நீர்ச் சுருக்கு குணமாக

இதையே 'நீர்க்கடுப்பு' என்று சொல்லுவார்கள். அதிக வெய்யிலில் நடந்த காரணத்தினாலும் இரவு முழுவதும் கண்விழித்த காரணத்தினாலும் நீர்ச் சுருக்கு ஏற்படும். அடிக்கடி சிறுநீர் இறங்கும். சிறுக சிறுக இறங்கும். நீர்த்துவாரம் சுடும். இதற்கு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து எந்த நேரத்திலும் சாப்பிடலாம். மூன்றே வேளை சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு குணமாகும்.

 

வெட்டை சூட்டுக்கு

ஈரப்பசையுள்ள கால்வாய். தோட்டங்களில் முளைத்திருக்கும் அம்மான் பச்சரிசி என்ற சிறு செடிகளிலிருந்து இலைகளை மட்டும் பறித்து வந்து சுத்தம் பார்த்து, மை போல அரைத்து, ஒரு டம்ளரில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் அரை டம்ளர் நீராகாரத்தையும் விட்டு அதில் அரைத்த இலையில் கொட்டைப் பாக்களவு போட்டுக் கலக்கி காலை மட்டும் குடித்து வந்தால் வெட்டைச் சூடு தணிந்து விடும். மூன்றே நாள் சாப்பிட்டால் போதும்.

 

பித்த சம்பந்தமான கோளாறுகள் குணமாக

பித்தம் காரணமாக வாய்க்கசப்பு ஏற்படும். கிறுகிறுப்பு உண்டாகும். வாந்தி ஏற்படும். அடிக்கடி தலை வலி உண்டாகும். மயக்கம் ஏற்படும். இந்த வகையான கோளாறுகளை நீக்க எலுமிச்சம்பழம் நன்கு பயன்படும்.

ஒரு சுத்தமான வாயகன்ற கண்ணாடிப்பாத்திரத்தில் ஒரு எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு, கொஞ்சம் சீரகத்தையும், மிளகையும், இந்துப்பையும் போட்டு ஊற வைத்து வெய்யிலில் காய வைத்து. இடித்து சல்லடையில் சலித்து, ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏழு நாள் வரை காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தக் கோளாறு யாவும் போகும்.

 

நோய்களும் கை வைத்தியங்களும்

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கலைத் தொடர விடக்கூடாது. அது பல வியாதிகளுக்கு அஸ்திவாரமாகும். எனவே தினசரி ஒரு வேளையாவது மலம் கழியா விட்டால் உடனே மலம் கழிய ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு சுலபமான வழி இருக்கிறது. ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, அந்தச் சாற்றில் அரைத் தேக்கரண்டிபளவு சோற்று உப்பைப் போட்டுக் கலக்கி, விடியற் காலையில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்றே நாள் சாப்பிட்டால் போதும் மலச்சிக்கல் நீங்கும்.

 

இரத்தக் கட்டுக் கரைய:

உடலில் அடிபட்டு அந்த இடத்தில் ரத்தக்காயம் ஏற்படாமல் ஊமைக் காயமாக இருந்து உள்ளேயே இரத்தம் கட்டியிருந்தால், அந்த இடம் கொஞ்சம் வீக்கமாகத் தோன்றும், வலியும் இருக்கும். இதற்கு, ஒரு இரும்புக் கரண்டியை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு, அதில் அரை நபா பெடை கரியபோளத்தைப்போட்டு, நெருப்பின் மேல் வைத்துக் காய்ச்சினால், மருந்து கரைந்து கலவைபோல வரும். இதை இளஞ்சூட்டுடன் எடுத்து. பாதிக்கப்பட்ட இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு விடவேண்டும். மறுநாள் அதைக் கழுவிவிட்டு, புதிய தாக மருந்து தயார் செய்து பழையபடியும் போட வேண்டும். இரத்தக்கட்டு கரையும் வரை போடலாம்.

 

உஷ்ண இருமல் குணமாக:

உஷ்ணம் காரணமாக தொண்டையில் வறட்சி ஏற்பட்டு இருமல் வரும். சளி வராது. இதனால் தொண்டையில் வலி, கரகரப்பு ஏற்படும். இதற்கு, எலுமிச்சம் சாறு தேக்கரண்டியளவும் அதே அளவு சுத்தமான தேனும் சேர்த்துக் கலந்து, காலைமாலை மூன்று நாள் சாப்பிட்டால் உஷ்ண இருமல் குணமாகும்.

 

பாவனச்சீரகச் சூரணம்

தேவையான அளவு எலுமிச்சம் பழச்சாற்றை எடுத்து விதைகளை நீக்கி ஒரு பாத்திரத்தில் விட்டு சுத்தமான சீரகத்தில் நான்கு ரூபாயெடை, இந்துப்பு இவைகளைப்போட்டு தினசரி வெயிலில் எடுத்துவைத்து பழச்சாறு சுண்டியபின் சீரகத்தை ஒரு தட்டில் போட்டு நன்றாக காய விட வேண்டும். வற்றலாகக் காய்ந்தபின் அதை இடித்துச் சலித்து, ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, புளியேப்பம், அஜீரணம், வயிற்று வலி, மயக்கம், வாய்க் கசப்பு, கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல் ஏற்படும்போது, அரைத் தேக் கரண்டியளவு வாயிலிட்டு, வெந்நீர் சாப்பிட குணமாகும். தொடர்ந்து காலையில் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறு யாவும் நீங்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : நோய்களும் கை வைத்தியங்களும் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Diseases and remedies - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்