நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில்.
தெய்வீகப் போட்டி!
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அமைந்துள்ளது பிரசித்தி
பெற்ற ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில். இங்குள்ள அம்மன் ஸ்ரீ வேதநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதி அம்மனுக்கும் இடையே போட்டி
ஏற்பட்டது. வேதநாயகியின் குரல் வளம் இனிமையானதா? சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் நாதம் இனிமையானதா? என்பதுதான் அந்தப் போட்டி!
போட்டியில் வீணையின் ஒலியை விட வேதநாயகியின்
குரல் சிறப்பாக இருந்ததால், சரஸ்வதி
தேவி இந்தத் திருத்தலத்தில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
தமிழில் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில்
உள்ள வேதநாயகி அம்மன், வடமொழியில்
'வீணா வாத வதுஷணி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த வேத நாயகியை 'வேத
சந்தோஷிணி என்றும் சொல்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : தெய்வீகப் போட்டி! - ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில், ஸ்ரீ வேதநாயகி [ அம்மன் ] | Amman: History : Divine competition! - Sri Vedaranyeswarar Temple, Sri Vedanayake in Tamil [ Amman ]