மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய தெய்வீக ரகசியம்

குறிப்புகள்

[ விநாயகர்: வரலாறு ]

Divine Secret of Pulipada Ganesha (Vyagrapada Ganesan) at Madurai Meenakshi Amman Temple - Notes in Tamil

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய தெய்வீக ரகசியம் | Divine Secret of Pulipada Ganesha (Vyagrapada Ganesan) at Madurai Meenakshi Amman Temple

மதுரையில் ஏராளமாக தெய்வீக ரகசியங்கள் உண்டு. அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற நிறைய வழிகாட்டி கோயில்கள் நிறைந்த தலம் மதுரையாகும். எதிர்பாராத பணக் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறவும்,கொடுத்த வாக்கை நிறைவேற்றவும்,எத்தகைய கடுமையான சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறவும்,ஒரு முறை செய்த தவறை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கும் பலவித அற்புத ரகசியங்கள் நிறைந்த உத்தம தெய்வமாகிய புலிப்பாத கணேசர் வீற்றிருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இவர் மதுரை கோவிலில் எங்கு வீற்றிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா? மேலே தொடர்ந்து படியுங்கள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் சொக்கநாதர் சன்னதிக்கு முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு எதிராக வலப்புறமுள்ள துவாரபாலகரையடுத்து உள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு தூணில், விநாயகத்தாரணி எனப்படும் (பெண்) விநாயகியைக் காணலாம். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது. எனவே இவரை வியாக்ர பாத விநாயகி என்று கூறுவர். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள் இவர், யானை முகம் கொண்டு மார்பகங்களுடன் வளைந்து நெளிந்த கோலத்தில் இரண்டு கைகளுடன் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி மற்றொரு கையை தொங்கவிட்டுக் கொண்டு காட்சி தருகிறார். இவருக்குப் பாவாடை அணிவித்து வணங்குகிறார்கள.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய 

தெய்வீக ரகசியம்!

 

மதுரையில் ஏராளமாக தெய்வீக ரகசியங்கள் உண்டு.

 

அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற நிறைய வழிகாட்டி கோயில்கள் நிறைந்த தலம் மதுரையாகும்.

 

எதிர்பாராத பணக் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறவும்,கொடுத்த வாக்கை நிறைவேற்றவும்,எத்தகைய கடுமையான சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறவும்,ஒரு முறை செய்த தவறை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கும் பலவித அற்புத ரகசியங்கள் நிறைந்த உத்தம தெய்வமாகிய புலிப்பாத கணேசர் வீற்றிருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

 

இவர் மதுரை கோவிலில் எங்கு வீற்றிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா?

 

மேலே தொடர்ந்து படியுங்கள்!

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில்  சொக்கநாதர் சன்னதிக்கு முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு எதிராக வலப்புறமுள்ள துவாரபாலகரையடுத்து உள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு தூணில், விநாயகத்தாரணி எனப்படும் (பெண்) விநாயகியைக் காணலாம்.

 

இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது.

 

எனவே இவரை வியாக்ர பாத விநாயகி என்று கூறுவர். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள் இவர்,

 

யானை முகம் கொண்டு மார்பகங்களுடன் வளைந்து நெளிந்த கோலத்தில் இரண்டு கைகளுடன் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி மற்றொரு கையை தொங்கவிட்டுக் கொண்டு காட்சி தருகிறார்.

 

இவருக்குப் பாவாடை அணிவித்து வணங்குகிறார்கள.

 

இவரை வியாக்ரபாத கணேசன், புலிப்பாத கணேசர் என்றும் சித்தர்கள் அழைக்கிறார்கள்.

 

இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, வழிபட்டால் பெண்களுக்குத் திருமணத்தடை களத்திர தோஷம் மற்றும் பல பல தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

மதுரைக் கோவிலில் சொக்கநாதர் சன்னிக்கு முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு எதிராக உள்ள துவாரபாலகர் அருகே வியாக்ரபாத கணேசன் என்ற திருவுருவம் இரண்டு கைகளுடன் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி மற்றொரு கையை தொங்கவிட்டுக் கொண்டு உள்ளார்.

 

இவர் யானை முகம், இடைவரை பெண் உருவம், இடைக்கு கீழ் புலி உருவத்துடன் எழுந்தருளியுள்ளார்  இவரை வியாக்ரசக்தி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

 

அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும்போது இவரை தேடிக் கண்டுபிடியுங்கள்.

 

உங்களது கையால் அரைத்த சந்தனத்தால் இவருக்குப் பொட்டிட்டு கொழுக்கட்டை தானம் செய்து வந்தால் காரியசித்தி பெறலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர்: வரலாறு : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய தெய்வீக ரகசியம் - குறிப்புகள் [ ] | Ganesha: History : Divine Secret of Pulipada Ganesha (Vyagrapada Ganesan) at Madurai Meenakshi Amman Temple - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்