சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய வேலை-வியாபாரம், குடும்ப பொறுப்பு இவைகளை பத்து நாட்களுக்கு சரிசெய்து விட்டு இயற்கை மருத்துவத்துக்கு வந்தால் உங்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
சர்க்கரை
நோயாளிகள் தங்களுடைய வேலை-வியாபாரம்,
குடும்ப
பொறுப்பு இவைகளை பத்து நாட்களுக்கு சரிசெய்து விட்டு இயற்கை மருத்துவத்துக்கு வந்தால்
உங்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கும். இது முழுமையான உண்மை. சர்க்கரை
நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இருபது நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில்
உங்கள் உடல்நிலை இருக்கும். அவர்கள் இருபது நாட்கள் தங்க முடியாதபடி குடும்ப சூழ்நிலையும்
இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் பத்து நாட்கள் தங்கி உடலை சுத்தப்படுத்தி பலகீனங்களை
போக்கி உடலை புதுப்பித்துக் கொள்ளலாம். இங்கே தங்கியிருந்த பத்து நாட்களில் நோய்களின்
பாதிப்புகள் பாதியோ அல்லது முக்கால் பாகமோ குணமாகியிருந்தால் மீதியை உங்கள் இல்லத்திற்கு
சென்று இயற்கை மருத்துவ இல்லத்தில் சாப்பிட்டபடி உணவுப்பழக்கத்தை சரியாக வைத்துக் கொண்டு
கொடுக்கும் மூலிகைகளை சில நாட்களுக்கு நேரப்படி சாப்பிட்டு முழு ஆரோக்கியம் பெற்று
விடலாம். அதிகம் பாதிக்கப்படாத சர்க்கரை நோயாளிகள் பத்து நாட்கள் தங்கும் சூழ்நிலை
இருந்தால் தங்கலாம். பத்து நாட்கள் தங்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் இயற்கை மருத்துவ
இல்லத்தில் தங்கி சர்க்கரையின் அளவை கூட்டாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல உணவுகளையும்
ஆரோக்கிய வாழ்வு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்: உங்கள் இல்லத்திற்கு சென்று சரியான
உணவும் நேரப்படி மூலிகையும் சாப்பிட்டு சில நாட்களில் முழு ஆரோக்கியம் பெறலாம். நண்பர்களே
இயற்கை மருத்துவம் உங்கள் மனம்போல் வளைந்த கொடுத்து செயல்படாது. பணம் பறிக்கும் கூட்டம்தான்
உங்கள் மனம்போல் வளைந்து கொடுத்து செயல்படும். இயற்கை மருத்துவத்தில் செலவழிக்கும்
பணத்திற்கு முழுபயன் உண்டு.
இன்று
உலகிலுள்ள மற்ற மருத்துவர்கள் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் ஆயுள்வரை மருந்து, ஊசி, மாத்திரைகள் பயன்டுத்தித்தான் வாழ
வேண்டும் என்கின்றனர். ஆனால் இயற்கை மருத்துவம் மட்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின்
ஆயுள் உள்ள வரை மருந்தில்லாமலும் எந்த மருத்துவ உதவியையும் நாடாமலும் வாழலாம் என்று
சொல்கிறது. இயற்கை மருத்துவம் வருடக்கணக்கிலோ அல்லது பல மாதங்களோ பார்க்க வேண்டியதில்லை.
இதற்கு முழு உண்மையான விளக்கம் சொல்கிறேன். உடல்நிலை அதிகம் பாதிக்கப்படாத ஒரு சர்க்கரை
நோயாளி பத்து நாட்கள் தங்குகிறார். இவருக்கு ஏழு நாட்கள் மட்டும்தான் பல வகையான மூலிகைகளை
சரியான நேரப்படி கொடுப்பார்கள். எட்டாவதுநாள் காலை உணவை சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம்
சென்றபின் அவரை ரத்தப் பரிசோதனை நிலையம் சென்று ரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரையின்
அளவை பரிசோதித்து பார்க்கச் சொல்வார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 120க்குள் இருக்கும். சிறுநீரில் சர்க்கரை
இருக்காது. அதன்பின்
ஒவ்வொரு உணவுக்கு பின்பும் ஒன்றரை மணி நேரம் சென்ற பின்பு சிறுநீர் பரிசோதனையை நாம்
பார்த்துக்கொள்ளலாம். சிறுநீரில் சர்க்கரை இருக்காது. இனி மூலிகை மருந்தின் உதவி தேவையில்லை.
இப்போது உங்கள் உடலும் புதிய சக்தி பெற்று பலகீனங்கள் போய்விடும். பலகீனங்கள் போன உடனே
நீங்களே இனி மூலிகை இல்லாமல் வாழலாம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். அதன்பின் நலம் தரும்
உணவே மருந்து என்ற உண்மையை உணர்ந்து என்றும் நல்ல உணவுகளையே சாப்பிட்டு நலமாக வாழ்வீர்கள்.
மூலிகைகள் சாப்பிடுவதால் தீமைகள் சிறிதும் இல்லை. நன்மைகள் தான் அதிகம் மூலிகைகள் அனைத்தும்
கீரைகள்தான். அதனால் மனக்குழப்பம் வேண்டாம். இயற்கை மருத்துவத்திற்கு வருவதற்கு முன்
நீங்கள் பலவிதமான மருந்து மாத்திரைகள் பயன்படுத்தியிருக்கலாம். இயற்கை மருத்துவ இல்லத்திற்குள்
நீங்கள் நுழைந்த உடனே மருந்து மாத்திரைகள் தேவையில்லை. முன்பு நீங்கள் சமைத்த உணவுகளையும்
தீய உணவுகளையும் சாப்பிட்டிருப்பீர்கள். அதனால் மாத்திரைகளின் உதவியுடன் வாழ்ந்திருப்பீர்கள்.
அங்கே போன உடன் நல்ல உணவுகளை சாப்பிடுவீர்கள். நல்ல உணவுகள் வயிற்றுக்குள் சென்றவுடன்
நன்மைகள் செய்யும் மூலிகைகளும் உடலை சுத்தப்படுத்தும். இதனால் மருந்து மாத்திரைகளுக்கு
வேலை இல்லை. மருந்து
மாத்திரைகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுதலை கொடுக்கத்தான் இயற்கை மருத்துவ இல்லத்திற்கு
உங்களை போகச் சொல்கிறோம். அங்கே வந்த பின்பும் உங்களை ஆங்கில மாத்திரைகளையும் சாப்பிடச்
சொல்லி மருத்துவம்
பார்த்தால் இயற்கை மருத்துவத்தின் மேல் நம்பிக்கை வராது நோய்களை குணமாக்கப் போவது மருந்து
மாத்திரைகளா? அல்லது
இயற்கை மருத்துவமா? என்று
உங்கள் மனதிலே முடிவில்லாத குழப்பம் வரும். இயற்கை மருத்துவத்திற்கு வருபவர்கள் உணவு
முறையிலும் வாழ்க்கை முறையிலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். செலவழிக்கும் பணமோ
அல்லது வாழ்க்கையோ வீணாகிவிடுமோ என்று கவலை கொள்ளக் கூடாது. பணமும் வீணாகாது. வாழ்க்கையும்
மகிழ்ச்சியாக இருக்கும்.
சில
மாதங்களோ அல்லது மருத்துவம் பார்க்கும்போது பொறுமை வேண்டும். நோய்களை உங்கள் உடலில்
ஒரு நாளில் உருவாக்க வில்லை. வருடங்களோ உருவாகியிருக்கலாம். இன்னொரு உண்மையையும் நீங்கள்
தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் பிறந்தது முதல் இன்று வரை வளர்த்திருப்பீர்கள். உயிர்ச்சத்துக்களை
இழந்த சமைத்த உணவுகளையும் தீய உணவுகளையும் நாகரீக உணவுகளையும் தான் சாப்பிட்டு உங்கள்
உடலை அதனால் உங்கள் உடலே சத்துக்கெட்ட உணவுகளால் வளர்க்கப்பட்ட பலகீனமான உடல். அதனால்
தான் பல நோய்களும் பலகீனமும் உங்கள் உடலில் குடியேறிவிட்டது. தீய உணவுகளால் வளர்க்கப்பட்ட
உடலை ஒரிரு நாட்களில் குணப்படுத்த முடியாது. அதனால்தான் பொறுமை வேண்டும். நாம் மாடிக்கு
செல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு படியாகத்தான் ஏறிச்செல்ல வேண்டும் முதல் படியிலிருந்து
பதினைந்தாவது படியில் கால் வைக்க முடியாது. வருடங்களாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும்
பல வீட்டை சில நிமிடங்களில் சுத்தம் செய்ய முடியாது. சில மணி நேரங்களாவது செலழித்தால்தான்
வீடு சுத்தமாகும். அதுபோல்தான் நோயாளிகளின் உடலும். நோயாளிகளின் உடலில் பல கழிவுகள்
தேங்கிக் கிடக்கிறது. கழிவுகளை வெளியேற்றினால் தான் உடல் சுத்தமடையும். இயற்கை மருத்துவம்
பார்க்கும்போது நலம் தரும் உணவுகளும் மூலிகைகளும் வயிற்றுக்குள் சென்று நல்ல ரத்தத்தை
உற்பத்தி செய்து நோயாளிகளின் உடலுக்குள் பல வருடங்களாக தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற
முயற்சி செய்யும். அப்போது உடலுக்குள் உற்பத்தியாகும் நல்ல ரத்தமானது கெட்ட ரத்தத்தை
சுத்தம் செய்யும். ரத்தம் சுத்தமாகும் நேரத்தில் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
வகைகளில் உடலில் வேதனைகள் உருவாகும். இயற்கை மருத்துவம் ஆரம்பித்த இரண்டாவது அல்லது
மூன்றாவது நாளில் நோயாளிகளில் சிலருக்கு காய்ச்சல் வரும். சிலருக்கு உடல் முழுவதும்
தாங்கமுடியாத வலி வரும். சிலருக்கு கொடிய கசப்பு, புளிப்பு கலந்த வாந்தியாக வெளியேறும். சிலருக்கு பெருங்குடலில்
மலம் தேங்கிக் கிடக்கும். வருடக்கணக்கில் மலம் சரியாக வெளியேறா விட்டால் குடலில் மலம்
ஒட்டியிருக்கும். இவைகள் சுத்தமாக வெளியேறும் போது நான்கு அல்லது ஐந்து முறை மலம் கெட்ட
நாற்றத்துடன் கரும் பச்சை நிறமாக வெளியேறும். நோயாளிகள் உடல் பலகீனமாக இருப்பதால் உடல்
சோர்வாக சற்து தளர்ச்சியாக இருக்கும். உடல் சோர்வாக தளர்ச்சியாக இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு சில சொட்டுகளும்
கருப்பட்டியும் கலந்து கொடுத்தால் கால் மணி நேரத்திற்குள் உடல் புதிய சக்தி பெற்று
விடும். ஒருசிலருக்கு
உடல் சுத்தமடையும்போது எந்த வேதனைகளும் வராது. சுத்தமடையும் போது வரும் மாற்றங்கள்
அரை நாள் அல்லது ஒரு நாள் தான் இருக்கும். மறுநாள் அவைகள் இல்லாமல் போய்விடும். அதன்பின்
ஆரோக்கியம் உடலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும். மருத்துவத்திற்கு வரும்போது முகமும்
உடலும் சோர்வடைந்த நிலையில் இருக்கும். இதற்கு காரணம் அப்போது உங்கள் உடலில் உயிச்சத்துகள்
குறைந்த ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும். மருத்துவம் பார்த்து உங்கள் இல்லத்திற்கு செல்லும்
போது முகமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது உங்கள் உடலில் உயிர்ச்சத்துள்ள
தூய்மையான ரத்தம் ஓடிக்கொண்டிருக்கும். நிறைய விபரங்கள் சொல்லி விட்டேன். சுருக்கமாக முடிக்கிறேன்.
சர்க்கரை நோயாளிகள் இயற்கை மருத்துவ இல்லத்திற்குள் நுழைந்து விட்டால் அதன்பின் அவர்கள்
சர்க்கரை நோயாளி அல்ல. இயற்கை மருத்துவ இல்லத்தில் சாப்பிட்ட உணவுகளைப் போல் நீங்கள்
தினமும் சாப்பிட்டு வாழ்ந்தால் நூறு வயதிலும் இளமையுடன் வாழலாம். இன்றைய வாழ்வில் 30 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் பலர் சர்க்கரை
நோயாளிகளாக இருக்கிறார்கள். இந்த வயது தம்பதிகளுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள்
இருக்கிறது. நடுத்தர வயது சர்க்கரை நோயாளிகளே நீங்கள் தவறான உணவுப் பழக்கத்தால் உங்கள்
கணயத்தை பழுதடையச் செய்து சர்க்கரை நோயாளியானீர்கள். இப்போது நீங்கள் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் தீய உணவுகளையே உங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து வளர்க்கிறீர்கள். அதனால்
உங்கள் குழந்தைகளும் அவர்களின் இளம் வயதிலேயே சர்க்கரைநோய் அல்லது வேறு நோய்கள் வரும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவுகளை கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்கவும், கசப்பு மூலிகைகள் துவர்ப்பு மூலிகைகள்
- நாம்புகளை வலுகெட்டும் மூலிகைகள் வழங்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்களே அவைகளின்
பெயர்களை சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். மூலிகைகளின் பெயர்களை நான் சொன்னாலும்
உங்களால் முழுப் பயனையும் அடையமுடியாது. மூலிகைகளும் நலம் தரும் உணவுகளும் சரியான முறைப்படி
ஒன்று சேர்ந்தால் தான் முழுப்பயன் கிடைக்கும். இதுவரை பல மருத்துவர்களும் பல நோயாளிகளும்
மூலிகைகளையும் மருந்து மாத்திரைகளையும் விதவிதமான உணவுப் பழக்கங்களையும் பயன்படுத்தி
முழு வெற்றி பெற்றவர்கள் இதுவரை எவருமில்லை. பாகற்காய் சாறு, வேப்பிலை சாறு, அருகம்புல் சாறு. சிறிய நங்கை, சிறுகுறிஞ்சான், நெல்லி, நாவல், ஆவாரம்பூ இன்னும் பலவகையான மூலிகைகளை
பயன்படுத்தி பல முயற்சிகள் செய்தும் ஆரோக்கியத்தை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கசப்பு மூலிகைகளால் மட்டும் சர்க்கரை நோயை குணப்படுத்திவிடலாம் என்று நீங்கள் முயற்சி செய்தால்
தோல்விதான் அடைவீர்கள். உணவுகளால் தான் சர்க்கரையின் அளவை அதிகரிக்காதபடி செய்யமுடியும்.
மூலிகைகள் பக்க பலமாகத்தான் இருந்து செயல்படும் சர்க்கரை நோயாளிகளை காக்கும் கடவுள்
நலம்தரும் நல்ல உணவுகள் தான்! உணவுக்கடவுளின் துணை இல்லாமல் எந்த நோயையும் குணப்படுத்த
முடியாது நான்
கேட்கிறேன் பல மூலிகைகள் சாப்பிட்டா நீங்கள் நோயாளியானீர்கள்? மீண்டும் தீய உணவுகளையே சாப்பிட்டுக்
கொண்டு மூலிகைகளையும் பயன்படுத்தினால் தீய உணவுகள் தான் ஜெயிக்கும். மூலிகைகள் தோல்வி
அடையும். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் ஒரு சர்க்கரை நோயாளி அரிசிச்
சோறு, குழம்பு உருளைக்கிழங்கு கூட்டு இவைகளை
வயிறு நிறைய சாப்பிடுங்கள். சிறுகுறிஞ்சான் மூலிகையின் மறு பெயர் சர்க்கரை கொல்லி.
இதை ஒரு வேளைக்கு 5
கிராம் சாப்பிட வேண்டும். 5
கிராம் சாப்பிட வேண்டிய சர்க்கரை கொல்லி பொடியை 10 கிராம் பொடியாக எடுத்து தண்ணீரில் கலக்கி உணவை சாப்பிட்ட
மறு நிமிடமே குடித்து விடுங்கள். சர்க்கரை கொல்லி பொடி சாப்பிட்ட உணவுடன் கலந்து சீரணமாகட்டும்.
ஒன்றரை மணி நேரம் சென்றபின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரை அளவுக்கு அதிகமாக
இருக்கும். அப்படியானால் உணவு ஜெயிக்கிறது. மூலிகைப்பொடி தோற்றுப்போகிறது. இப்படி இருக்கும்போது
நீங்கள் எப்படி சர்க்கரை நோயை மூலிகைகளால் வெல்ல முடியும்? வீண்முயற்சி செய்யாதீர்கள்? எத்தனை முறை முயற்சி செய்தாலும்
முடிவு தோல்வியாகத்தான் இருக்கும். தோல்வியை பலமுறை சந்திப்பதை விட வெற்றியை ஒரு முறை
சந்தித்தால் தான் வீர நடை போடமுடியும். ஆசாரி,
கொத்தனார், கூலித்தொழிலாளி, ஆராய்ச்சியாளர் அவர்களின் வேலைகளை
அவர்களால்தான் செய்ய முடியும். மற்றவர்களால் முடியாது. தகுந்த பயிற்சி பெற்றால் எல்லோராலும்
முடியும். இந்த உண்மையை உணர்ந்து உணவுப் பயிற்சி பெற வருகிறீர்களா? இதை அறிந்தால் நீங்கள் நோயாளி
அல்ல. புத்திசாலி தான். ஆரோக்கியம் உங்கள் கையில். இனி மாத்திரைகள் தேவை இல்லை உங்கள் பையில்.
மகிழ்ச்சி உங்கள் மனதில்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : சர்க்கரை நோயாளிகளின் எதிர்காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Do diabetics have a healthy, happy future? - Siddha medicine in Tamil [ Health ]