இந்த முத்திரைக்கு இதய முத்திரை என்றும் பெயர் உண்டு. பிராண வாயுவைப்போல முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அபான வாயு. இதயத்துக்கும் அபான வாயுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு.
அபான வாயு முத்திரை அல்லது இதய முத்திரை பற்றி தெரியுமா?
இந்த முத்திரைக்கு இதய
முத்திரை என்றும் பெயர் உண்டு. பிராண வாயுவைப்போல முக்கியத்துவம் வாய்ந்தது இந்த
அபான வாயு. இதயத்துக்கும் அபான வாயுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. இதயம் நல்ல
முறையில் இயங்க இந்த வாயு உடலில் தேவையான அளவில் இருக்க வேண்டும்.
குடிப்பழக்கம், தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், ஓய்வில்லாமல் உழைத்தல், மன அழுத்தம், உடல் பருமன், உடற்பயிற் இல்லாமை, கொழுப்பு, சர்க்கரை நோய் போன்ற
பலவித காரணங்களால், உடலில் அபான வாயுவின் அளவு குறைந்து, அதன் செயல்பாடுகளிலும் குறைகள்
ஏற்படுகின்றன.
இதனால், இதய வால்வுகள்
சுருங்குதல்,
ரத்த ஓட்டம் தடைபடுதல்
போன்ற குறைகள் ஏற்பட்டு இதய நோய் ஏற்படுகிறது. அபான வாயு முத்திரை செய்தால், இதய நோய்கள் வராமல்
தடுக்கலாம்.
செய்முறை
கட்டை விரலின்
அடிப்பகுதியை ஆள்காட்டி விரல் நுனியால் தொட வேண்டும். பிறகு, நடுவிரல் மற்றும் மோதிர
விரல் நுனிகளை கட்டை விரல் நுனியைத் தொடுமாறு வைக்க வேண்டும். சுண்டு விரல்
மட்டும் நீட்டப்பட்டு இருக்கும். இந்த முத்திரையை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும்
செய்யலாம். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும்.
நேர அளவு
இதை எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் செய்யலாம். இதய நோய் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் (பி.பி.)
உள்ளவர்களும்,
ஒவ்வொரு நாளும் இரண்டு
தடவை 15 நிமிடங்கள் வீதம் செய்து வர வேண்டும்.
இதில் சுண்டு விரல்
என்பது நீர் என்ற பஞ்சபூதமாகும். இது கட்டை விரலைத் தொடாமல் செய்வதற்குக் காரணம்
உள்ளது. நெருப்பை நீர் அணைத்துவிடுமல்லவா. மற்ற மூன்று விரல்கள் ஆள்காட்டி விரல்
(காற்று), நடு விரல் (ஆகாயம்), மோதிர விரல் (நிலம்)
ஆகியவை நெருப்பு என்ற பஞ்சபூதத்தை உறுதியாக செயல்படுத்த உதவுகின்றன.
இதயத்தை இயக்குவது
நெருப்பு. இந்த நெருப்பு பலவீனமானால் இதய நோய்கள் உண்டாகும். இதய வலி ஏற்பட்டால், இந்த முத்திரை யைச்
செய்யும் பட்சத்தில், ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பலன்கள்
1. இதயம் வலுவடையும்.
2. இதயத் துடிப்பு
சீராகும்.
3. கழிவுத் தொகுதி
ஒழுங்காகும்.
4. ரத்த அழுத்தம்
சீராகும்.
5. மன அமைதி உண்டாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : அபான வாயு முத்திரை அல்லது இதய முத்திரை பற்றி தெரியுமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know about Apana Vayu Mudra or Heart Mudra? - Recipe, time scale, benefits in Tamil [ ]