அதிசியமாக அமர்ந்த (உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பற்றி தெரியுமா!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Do you know about Arthanareeswarar who is seen in a wonderful sitting position? - Notes in Tamil

அதிசியமாக அமர்ந்த (உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பற்றி தெரியுமா! | Do you know about Arthanareeswarar who is seen in a wonderful sitting position?

கோடக நல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டம்! கோடக நல்லூர் என்னும் அழகிய கிராமம், திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி என்னும் நநிக்கரையில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடக நல்லூர் என்னும் இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும். இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் அமர்ந்தநிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் . பல இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் கோடகநல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்த(உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தருவது ஒரு விசேஷமாகும். இப்படி உட்கார்ந்த அர்த்தநாரீஸ்வரரின் நிலையானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோலமாக காட்சியளிக்கிறது.

அதிசியமாக அமர்ந்த (உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பற்றி தெரியுமா!

 

கோடக நல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர்  ஆலயம், திருநெல்வேலி மாவட்டம்!

 

கோடக நல்லூர் என்னும் அழகிய கிராமம், திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி என்னும் நநிக்கரையில் அமைந்துள்ளது.

 

நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடக நல்லூர் என்னும் இந்த ஊர்.

 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம்.

 

இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

 

இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது.

 

இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம்.

 

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும்.

 

இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் அமர்ந்தநிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் . பல இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள்.

 

ஆனால் கோடகநல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்த(உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தருவது ஒரு விசேஷமாகும்.

 

இப்படி உட்கார்ந்த அர்த்தநாரீஸ்வரரின் நிலையானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோலமாக  காட்சியளிக்கிறது.

 

ஆலய அமைப்பு:

 

ஆலயத்தினுள் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் சிவனும் சக்தியும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் தோஷங்களை போக்கி அமர்ந்திருக்கிறார்.

 

பிருங்கி மகரிஷி சிவபெருமானை மட்டுமே வணங்குபவர். சக்திதேவியை அவர் கண்டுகொள்ளவில்லை. இறைவனும், இறைவியும் ஒன்றாக அருகருகே அமர்ந்திருந்தாலும் வண்டு உருவம் எடுத்து இறைவனை மட்டுமே வலம் வந்து வணங்கினார்.

 

இதனால் கோபமுற்ற தேவி, சக்தியும் சிவமும் ஒன்றே என்பதை நிரூபிக்க, இறைவனை விட்டுப் பிரிந்து, கேதார கௌரி விரதம் இருந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனின் இடப்பாகத்தில் சங்கமித்து உருவெடுத்ததே அர்த்தநாரீஸ்வரர்

உருவாக்கம் ஆகும்.

 

எல்லா சிவாலயங்களிலும் பெரும்பாலும் நின்ற கோலத்தில்தான் அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.

 

இங்குள்ள மூலவர் அபிமுக்தீஸ்வரர் மேற்கு திசையை நோக்கி இருப்பது விசேஷம்.

 

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி சுமார் 1900-ல் இங்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்ஷண சிருங்கோ” என்று வர்ணித்தார்.

 

இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

 

ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார்.

 

இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு.

 

மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.

 

கோடக நல்லூரில் அவதரித்த ஸ்ரீ சுந்தரசுவாமிகள் இந்தக் அபிமுதீஸ்வரர் கோவிலில் 7 தினங்களுக்கு  சூத சம்ஹிதை” என்னும் சிவ

 

சரித்திரத்தைபலதடவைகள் பிரசங்கம் செய்ததாகவும் தெரியவருகிறது.

 

(சிவ பக்தி, சிவ பூஜை, ஆசனங்கள், அஷ்டமா ஸித்தி, அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத பவுராணிகர் அருளியதே சூத சம்ஹிதை!)

 

மேலும், கோவில் வெளிச்சுற்று ப்ரகாரத்தில் ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் மூலஸ்தானத்தின் வெளிப்புற சுவரில், வடக்குப் பாகத்தில், இரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

 

அதில் ஒன்று வாலி சிவனுக்கு பூஜை செய்வதாகவும், மற்றொன்று, கண்ணப்ப நாயனார். தனது இரண்டாவது கண்ணை அம்பினால் எடுப்பதாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாதிரியான சிற்பங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள வாலிகண்ட புரத்திலுள்ள சிவன் கோவிலிலும் காணப்படுகிறது.

 

ஏழாம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கண்டியூர், பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயத்திலும்

அமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் உள்ளது.

 

அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று திருக்கண்டியூர்.

 

இங்கேயும் வித்தியாசமான அமர்ந்த கோலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை காணலாம்.

 

சிவனும் சக்தியும் இணைந்த இந்த சிற்பம் அமர்ந்த கோலத் தில் காணப்படுகிறது.

 

திரு வையாறுக்கு அருகில் உள்ள இந்தத் தலத்தில் கிழக்குப் பிராகாரத்தில்தான் இவ்வாறு புதுமைத் தோற்றம் கொண்டிருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர்.

 

அருகே, நின்ற கோலத்தில் காட்சி தரும் ரிஷபமும் அமர்ந்த கோலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்தின் மீது கையை ஊன்றியபடி, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்

 

இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் வலதுபுறத்தில் சிவ அம்சங்களும், இடதுபுறத்தில்  சக்திக்குரிய அம்சங்களும் காணப்படுகின்றன.

 

ஒருகரம் ரிஷபத்தின் மீது ஊன்றியபடி, மேல்கரத்தில் மழுவைத் தாங்கியபடி, வலதுகாலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளார்.

 

இடப்புறத்தில் மென்மையான கரத்தில் நீலோற்பல மலரைத் தாங்கி, தூக்கிவைத்த காலின் மீது முழங்கையை ஊன்றியபடி காணப்படுகிறார்.

 

தலையில் ஜடாமுடி முதல் பாதம் வரை அனைத்தும் சிறப்பாகவும், நுட்பமான வேலைப்பாடுகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இடுப்பில் உள்ள சிம்மம் சோழர்களின் காலத்தை நினைவுபடுத்துகின்றது. மூன்றடி உயரம்தான் என்றாலும் அனைத்தும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

திருக்கண்டியூர், பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயத்தின் கருவறைக்கு நேர் பின்பக்கத்தில் உள்ள பிரகார மண்டபத்தில் , மேற்கு நோக்கியவாறு அமர்ந்திருக்கிறார் இந்த அமர்ந்த நிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர்.

 

திருவையாறின் சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : அதிசியமாக அமர்ந்த (உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பற்றி தெரியுமா! - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Do you know about Arthanareeswarar who is seen in a wonderful sitting position? - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்