நினைத்த காரியம் வெற்றி அடைய வைக்கும் குபேர முத்திரை பற்றி தெரியுமா?

செய்முறை, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Do you know about the Kuberan seal that makes your dreams come true? - Recipe, Benefits in Tamil

நினைத்த காரியம் வெற்றி அடைய வைக்கும் குபேர முத்திரை பற்றி தெரியுமா? | Do you know about the Kuberan seal that makes your dreams come true?

குபேரன், இந்திரனுக்கு பொக்கிஷதாரி. செல்வத்துக்கு அதிபதி. நவநிதிகளின் தலைவர். சிவபெருமானின் தோழர்.

நினைத்த காரியம் வெற்றி அடைய வைக்கும் குபேர முத்திரை பற்றி தெரியுமா?

குபேரன், இந்திரனுக்கு பொக்கிஷதாரி. செல்வத்துக்கு அதிபதி. நவநிதிகளின் தலைவர். சிவபெருமானின் தோழர்.

குபேர முத்திரை, குபேரனின் அருள் பெறச் செய்யப்படுவதாகும். இந்த முத்திரையில், கட்டை விரல், நடு விரல், ஆள்காட்டி விரல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூன்று விரல்களால் முறையே நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன. இதன்மூலம், செவ்வாய், சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலுக்குள் கிரகிக்கப்படுகின்றன.

நாம் விரும்பியவற்றைப் பெற குபேர முத்திரை உதவுகிறது.

செய்முறை

கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளையும் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளவாறு வைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களையும் மடித்து, உள்ளங்கையை தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.

பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம். ஒருமுகச் சிந்தனையுடன் செய்ய வேண்டும். தினமும் இந்த முத்திரையை 15 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை செய்ய வேண்டும். இவ்வாறு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ செய்ய வேண்டும்.

இந்த குபேர முத்திரையைச் செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அமைதி. மன உறுதி ஆகியவை உண்டாகும். இந்த முத்திரை செய்யும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், சுவாச உறுப்புகள் சுத்தமாகிவிடும். மேலும், இந்த முத்திரை நாம் எதிர்காலத் திட்டமாக எதை நினைக்கிறோமோ அதை அடைவதற்கான சக்தியை அளிக்கும்.

பலன்கள்

1. காரியத்தில் வெற்றி கிட்டும்.

2. வளமான வாழ்க்கை அமையும்.

3. குடி முதலான கெட்ட பழக்கங்கள் அகலும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : நினைத்த காரியம் வெற்றி அடைய வைக்கும் குபேர முத்திரை பற்றி தெரியுமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know about the Kuberan seal that makes your dreams come true? - Recipe, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்