அட்சய திருதியை நாளுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு...... இந்த நாளை எதற்காக கொண்டாட வேண்டும்......
அட்சய திருதியை நாளின் சிறப்பை பற்றி தெரியுமா?
அட்சய திருதியை
நாளுக்கு மட்டும் அப்படி என்ன
சிறப்பு......
இந்த நாளை எதற்காக
கொண்டாட வேண்டும்......
அட்சய திரிதியை :
இந்துக்கள் மட்டுமின்றி
சமணர்களுக்கும் அட்சய திரிதியை தினம் மிக முக்கியமான புனித நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் புதிய செயல்களை துவங்குவது, சுப காரியங்களை செய்வது, மங்கள பொருட்களை வாங்குவது
ஆகியவற்றை மக்கள் செய்கிறார்கள். அட்சய திரிதியை நாளில் துவங்கப்படும் செயல்கள்
வெற்றியை மட்டுமே தரும் என்பதும், அது வளர்ந்து கொண்டே செல்லும் என்பதும் ஐதீகம். இந்த நாளில்
செல்வம் மட்டுமின்றி ஆன்மிக பலம் பெருகவும் தியானம், மந்திர ஜெபம் ஆகியவை செய்வது
சிறப்பானதாக இருக்கும்.
அட்சய திரிதியை சிறப்பு
:
தமிழ் மாதங்களில்
சித்திரை மாத வளர்பிறையில் வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை திதி ஆகும். இது
கிரிகோரியன் காலண்டரில், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வருகிறது. இந்த நாளில் சூரியன்
மற்றும் சந்திரன் இருவரும் முழு சக்தியுடன் காணப்படுவதால் இந்த நாளை அகா தீஜ்
என்று வட மாநிலங்களில் குறிப்பிடுகிறார்கள். அட்சய திரிதியை நாளில் செல்வத்திற்கு
அதிபதியான மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபடுவதால் வாழ்வில் பல விதமான நலன்கள் ஏற்படும்
என்பது ஐதீகம். பெருமாளுக்கு இந்த நாளில் சந்தனத்தால் அபிஷேகம் செய்வது மிகவும்
விசேஷமானதாகும்.
அனைத்து மாதங்களிலும்
திரிதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வருவதை மட்டும் அட்சய திரிதியையாக
சிறப்பித்து கொண்டாடுவதற்கு புராணங்களில் பல விதமான காரணங்களும் கதைகளும்
சொல்லப்படுகின்றன. பல்வேறு சிறப்பான விஷயங்கள் நடைபெற்ற நாள் என்பதால் இது
மிகவும் புனிதமான, மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதனால் தான் அட்சய திரிதியை
அன்று எந்த நல்ல காரியத்தை செய்வதற்கும் நல்ல நேரம், முகூர்த்தம் நேரம் போன்ற
எதுவும் பார்க்க தேவையில்லை என சொல்லப்படுகிறது.
அட்சய திரிதியை கொண்டாட
காரணம் :
* விநாயகப் பெருமான், வேத வியாசர் சொல்ல
சொல்ல தன்னுடைய ஒற்றை கொம்பை உடைத்து மகாபாரதம் எழுதியது அட்சய திரிதியை நாளில்
தான்.
* திருமால், தன்னுடைய ஆறாவது
அவதாரமான பரசுராம அவதாரத்தை எடுத்தது இந்த நாளில் தான்.
* உணவு, தானியங்களை வழங்கும்
தெய்வமான அன்னபூரணி தேவி அவதரித்த நாளாக இந்த நாள் சொல்லப்படுகிறது.
* கிருஷ்ணர் தனது நண்பர்
குசேலருக்கு அளவில்லாத செல்வங்களை அள்ளிக் கொடுத்ததும் அட்சய திரிதியை நாளில்
தான்.
குபேரர் அருள் பெற்ற
நாள் :
* கிருஷ்ணர், பாண்டவர்கள் வனவாசத்தில்
உணவிற்காக சிரமப்பட்ட போது அவர்களின் பசியை போக்க அட்சய பாத்திரத்தை வழங்கிய
நாள் இதுவாகும். குறைவில்லாத உணவை தொடர்ந்து வழங்கக் கூடிய தன்மை கொண்டது அட்சய
பாத்திரம் ஆகும்.
* கங்கை நதி, அட்சய திரிதியை நாளில்
தான் பூமிக்கு வந்ததாக சொல்லப்படுவதாலேயே இந்த நாளில் புதினி நீராடுவது மிகவும்
புண்ணியமானதாக சொல்லப்படுகிறது.
* குபேரர், மகாலட்சுமியை வழிபட்டு, பெரும் செல்வத்தை
நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
அட்சய திரிதியையில்
மகாலட்சுமியை வழிபட காரணம் :
இப்படி பல சிறப்புகளைக்
கொண்ட அட்சய திரிதியை நாளில் நாமும் மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட்டால்
அதிர்ஷ்டம்,
செல்வம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை அமையும்
என்பது நம்பிக்கை. அட்சய திரிதியை நாளில் நாம் என்ன செய்தாலும் அதன் பலன் பெருகிக்
கொண்டே போகும் என்பது நம்பிக்கை. அதனாலேயே தங்கம், வெள்ளி போன்ற செல்வத்திற்கு
அடையாளமான பொருட்கள், புதிய வீடு, புதிய வாகனம், நிலம் வாங்குவது, தான தர்மங்கள் வழங்குவது அவசியம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில்
நாம் தானமாக கொடுக்கும் பொருளும் சரி, வாங்கும் பொருளும் சரி பெருக்கத்திற்கு அடையாளமாக
அமையும் என்பது நம்பிக்கை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
சுவாரஸ்யம்: தகவல்கள் : அட்சய திருதியை நாளின் சிறப்பை பற்றி தெரியுமா? - முழுமையான மங்கள நாள் [ ] | Interesting: information : Do you know about the significance of Akshay Trithiya day? - Full auspicious day in Tamil [ ]