பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா?

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you know any miracle temple that cures the sin of old birth? - Tirupugalur Agneepureeswarar Temple in Tamil

பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா? | Do you know any miracle temple that cures the sin of old birth?

போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..

பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா?

 

போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..

 

உண்மைதான்... முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க... என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர். இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பதுபோல நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..

 

அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது. முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.

 

முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

 

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.

 

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதி வைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்.. அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.

 

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

 

முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

 

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்றம் ஓஹோனு வாழ்வீங்க...

 

முக்கிய சிறப்புக்கள்

 

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்.

 

அப்பர், சம்பந்தர், திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

 

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

 

தல நம்பிக்கைகள்

 

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

 

வேண்டுதல்கள்

 

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

 

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

 

பிறவிப் பலன்

 

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

 

போகரின் சமாதி

 

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

 

சந்நிதிகள்

 

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

 

எப்படி செல்லலாம்?

 

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.✍🏼🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா? - திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் [ ] | Spiritual Notes : Do you know any miracle temple that cures the sin of old birth? - Tirupugalur Agneepureeswarar Temple in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்