ஒரு சிலர் இந்த படி கட்டு எதற்காக இருப்பது என்று புரிவதில்லை மிதித்து செல்வதையே என் கண்ணூடாக பார்த்திருக்கின்றேன்
கோயிலின் படிக்கட்டில் எப்படி செல்லவேண்டும் தெரியுமா?
ஒரு சிலர் இந்த படி கட்டு எதற்காக இருப்பது என்று
புரிவதில்லை மிதித்து செல்வதையே என் கண்ணூடாக பார்த்திருக்கின்றேன்
உங்களது குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்
கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின்
மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.
ஏன் தெரியுமா?
ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது
பாதத்தை கழுவ வேண்டும் ..
பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து
தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...
இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில்
கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...
பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின்
அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து
செல்ல வேண்டும் ..
அந்த படியை தாண்டும் போது, " நான்
கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே
செல்கின்றேன்..
இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே
எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்
...
அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை
கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...
ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும்
மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே
நிரம்பியிருக்கும் ...
எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை
பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.
நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே
இறைவா......!!!
இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
கலகலவென சிரித்தான் இறைவன்
"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன்
நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள்
கேட்கவில்லை;
தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன்
என்றேன் நீங்கள் நம்பவில்லை;
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன்
நீங்கள் செய்யவில்லை;
எனக்கான இடத்தை,
எனக்கான நேரத்தை,
எனக்கான விழாக்களை,
என்னை வணங்கும் முறையை
எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை
காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான்
இறைவன்.
🌺நேற்றிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்,
இன்றைக்காக வாழுங்கள்,
நாளை மீது நம்பிக்கை வையுங்கள்.
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள எப்போதும் தயங்காதீர்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கோயிலின் படிக்கட்டில் எப்படி செல்லவேண்டும் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Do you know how to go up the stairs of the temple? - Tips in Tamil [ ]