பிராண முத்திரை பவர் தெரியுமா?

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Do you know Prana Mudra Power? - Recipe, time scale, benefits in Tamil

பிராண முத்திரை பவர் தெரியுமா? | Do you know Prana Mudra Power?

ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய் விட்டது என்பார்கள்.

பிராண முத்திரை பவர் தெரியுமா?

ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய் விட்டது என்பார்கள். அதனால்தான் ஆக்ஸிஜனை, பிராண வாயு என்று சொல்கிறோம். ஒருவர் இறக்கும் தருவாயில் படும் அவஸ்தையை பிராண அவஸ்தை என்பார்கள். எனவே, பிராணன் என்பது வாயு அல்லது காற்று என்று கொள்ளலாம்.

நமது உடலில் ஐந்து விதமான வாயுக்கள் இருப்பதாக பாரம்பரிய வைத்திய முறைகள் சொல்கின்றன. அவை: பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்பதாகும். இந்த ஐந்து வாயுக்களும் நல்ல முறையில் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்கினால் மட்டுமே உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இந்த ஐந்தில் முக்கியமான வாயு 'பிராணன்' என்ற வாயு. இந்த வாயுவை வளர்த்துக்கொள்ளவும், சக்தி உள்ளதாகச் செய்யவும் உதவும் முத்திரையே பிராண முத்திரை.

செய்முறை

பெரு விரல் நுனியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளைத் தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்களான ஆள்காட்டி விரலும் நடு விரலும் நேராக இருக்க வேண்டும்.

பிராண முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும். முதுகை வளைக்காமல் நேராக அமர வேண்டும். இதனால், பிராணன் மேல் நோக்கி எழ முடியும். நேராக அமர முடியாதவர்கள் நேராகப் படுத்துக்கொண்டு செய்யலாம்.

நேர அளவு

கால நேரமின்றி எவ்வளவு நேரமும் செய்யலாம். இருப்பினும் தினமும் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். சிரமமாக இருந்தால், முதலில் 15 நிமிடங்கள் செய்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டு போகலாம். நேரம் இல்லாதவர்கள், 45 நிமிடங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து காலை, மதியம், இரவு நேரங்களில் செய்யலாம்.

பெரு விரல் -நெருப்பு, மோதிர விரல் நிலம்,சுண்டு விரல் -நீர். இந்த மூன்று பூதங்களின் சேர்க்கையால் உடலில் உள்ள அசுத்தங்கள் அகன்று, மனம் தூய்மையாகி, பிராணன் புதிதாக உருவாகும்.

பலன்கள்

1. உடல் வலுவாகும்.

2. ரத்தக் குழாய் அடைப்புகள் சரியாகும்.

3. உற்சாகம் உண்டாகும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5. கண் பார்வை குணமாகும். கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.

6. களைப்பு நீங்கும்.

7. நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

8. பக்கவாத நோய்கள் குணமாகும்.

9. நினைவாற்றல் அதிகரிக்கும்.

10. சுவாச உறுப்புகள் உறுதியாகும். சுவாசம் சீரடையும். ஆஸ்துமா நோய் குணமாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : பிராண முத்திரை பவர் தெரியுமா? - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know Prana Mudra Power? - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்