உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை தரும் ஸ்படிகம்..! *
ஸ்படிகம் தரும் பலன்கள் தெரியுமா?
*📿உடல் உஷ்ணத்தை குறைத்து.. மனஅமைதி தரும் ஸ்படிக கல்
லாக்கெட்..!!*
*உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை தரும்
ஸ்படிகம்..! *
ஸ்படிகத்தை பற்றி
தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். ஸ்படிகம் என்பது ஒருவிதமான பாறை
வகையை சார்ந்தது. இது பூமிக்கு அடியில் பல ஆயிரம் ஆண்டுகளாக புதைந்துள்ள நீரானது
இறுக்கம் அடைத்து பாறைகளாக உருமாற்றம் அடைந்தவைகளை குறிக்கும். இந்த ஸ்படிக பாறையை
சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களில் அதாவது மாலைகளாகவோ அல்லது லாக்கெட்டாகவோ
பயன்படுத்தி வருகின்றனர். உருண்டையான ஸ்படிகத்தில் துளையீட்டு மாலையாக்கி
கழுத்திலே யாரும் அணியலாம். அனால் குளிர்ச்சியான பகுதி மற்றும் குளிர்ச்சியான உடல்
வாகு கொண்டவர்கள் அணிவது தவிர்த்தல் நல்லது. ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் வனவாசத்தில்
ஸ்படிகப்பாறையில் அமர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ராமரும், சீதையுமே
ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்படிகம் இமயமலை
அடிவாரத்தில் ஆழமான பகுதிகளில் இருந்தும் எடுக்கப்படுகிற விலைவுயர்ந்த கல்லாகும்.
தூய்மையான கண்ணாடி போன்று தோற்றம் அளிக்கும். இதற்கு தனி நிறம் கிடையாது என்றும்
சொல்கிறார்கள். சிவப்பு செபருத்தி பூ வைத்தால் சிவப்பு நிறத்திலும், பச்சை துளசி
பக்கம் வைத்தால் பச்சை நிறத்திலும் அதன் பிம்பங்கள் தோன்றும் என்கிறார்கள். ஸ்படிக
லிங்கத்தை விபூதியால் பூஜை செய்தால் அபிசேகம் செய்தாலும் கர்ம வினைகள் நீங்க
வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள்.
ஆன்மிக ரீதியாகவும், அறிவியல்
ரீதியாகவும் ஸ்படிகம் சிறப்புமிக்க பயன்களை அள்ளி தருபவை. ஸ்படிகம் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும்
அணியலாம்.
மனிதன் மூச்சு விடுவது
ஒரு நாளைக்கு 216௦௦ தடவை ஆகும். ஆனால் இந்த ஸ்படிக மணியோ ஒரு மணி நேரத்தில் 216௦௦ அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்று
சொல்லப்படுகிறது. அப்படி என்றால் நாம் அணிகின்ற 1௦8 ஸ்படிக மணிகள் 24 மணி நேரத்தில் எவ்வளவு அதிர்வலைகளை உண்டு பண்ணும் என்று
நினைத்து பாருங்கள். கீழே குறிப்பிட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.
● தெய்வ அருள் கிடைக்கும்.
● மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க செய்யும்.
● மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
● தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
● உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை தரும்.
● தீய சக்திகளை நெருங்க விடாமல் காக்கும்.
● தெளிவான சிந்தனையை தரும்.
● ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் சிறப்பாக
பலன் கொடுக்கும்.
● ஸ்படிக மணிமாலையை வைத்துக் கொண்டும் தியானம் செய்யலாம்.
ஸ்படிகத்தை அணிந்து
கொள்வதற்கு முன் குறைந்தது 3 மணி நேரம் வரை தண்ணீரில் போட்டு விட வேண்டும். மேலும்
ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணியும் போதும் அந்த அளவு நேரங்கள் தண்ணீரில் வைத்து
மற்றவர் அணிய வேண்டும். அதன் பின்னர் எடுத்து பயன்படுத்தலாம். குளிக்கும்போது
போட்டு கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும்போது கட்டாயம் அவிழ்த்து தரையில்
வைக்க வேண்டும். நாள் முழுவதும் உங்களது உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்து
கொண்டிருக்கும். இரவில் நீங்கள் கழற்றி வைக்கும்போது மாலை உஷ்ணமாகி விடும் மீன்றும்
தரையில் வைப்பதால் மீன்றும் குளிர்ச்சி அடையும். காலையில் நீங்கள் அணியும்போது
மாலை குளிர்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் மன அழுத்தம் குறைவதை பார்க்கலாம். இதை
தங்கம் மற்றும் வெள்ளி சேர்த்தும் அணியலாம். இதே மாதிரி தான் ஸ்படிக விநாயகர்,
சிவலிங்கம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து வணங்கினால் சக்தி அபாரமாக கிடைக்கும்.
ஸ்படிகம் சிவபெருமானுக்கு உகந்த கல்லாகும். மேலும் சிவனின் தலையில் உள்ள சந்திரனில்
இருந்து விழுகிற ஒரு ஆபூர்வ துளி தான் இந்த ஸ்படிகம் என்றும் சொல்லப்படுகிறது. ஆயிரம்
லிங்கங்களில் வழிபடும் சக்திகள் ஸ்படிக லிங்கம் தரும் சக்திக்கு இணையானது ஆகும்
என்றும் சொல்கிறார்கள். ராமேஸ்வரம் போன்ற பல சிவாலயங்களில் ஸ்படிக லிங்க பூஜை
நடக்கத் தான் செய்கிறது. இது ஒரு விசேசமான பூஜை ஆகும். ஆன்மீகத்தை நேசிக்கின்றவர்கள்
ஸ்படிக மணி மாலை அணிந்தால் தெய்வீகம் நிறைந்துக் காணப்படுவார்கள். ஸ்படிக மாலையை
ருத்ராட்சம் இல்லாமல் அணியவும் கூடாது. மேலும் அசைவ உணவு சாப்பிடும் போதும்,
தீட்டு வீடுகளுக்கு செல்லும் போதும், தூங்கும் போதும் அணிதல் தவிர்க்க வேண்டியவை
ஆகும்.
பல தரங்களில் கிடைகிறது.
முதல் தரமான ஸ்படிக கற்களை பயன்படுத்தலே சிறப்பானது ஆகும். உயர்ந்த தரம் ஸ்படிக
கற்கள் நீரில் போட்டால் கண்ணுக்குத் தெரியாது. நீரோடு நீராக இணைந்து ஒன்றி
காணப்படும். பத்து தரங்கள் வரை கிடைக்கிறது. நிஜ ஸ்படிக கற்களை உரசினால் தீபொறி
பறக்கும் என்றும் சொல்கிறார்கள். வெளி வெப்பநிலையை விட எப்போதும் குளிர்ச்சியாகவே
இருக்கும் என்றும் சொல்கிறார்கள். சூர்ய ஒளிகளில் காண்பித்தால் வானவில் போன்ற பல
வண்ணங்களில் ஒளி தெரியும் என்றும் சொல்கிறார்கள். மேலும் ஸ்படிகம் பச்சை, மஞ்சள்,
நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
ஓம் நமசிவாய!
மற்றும் ஒரு ஆரோக்யமான
சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : ஸ்படிகம் தரும் பலன்கள் தெரியுமா? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Do you know the benefits of crystals? - Spiritual Notes in Tamil [ spirituality ]