ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா?

அரசமர பிள்ளையார், சந்தனமர பிள்ளையார், மாமர பிள்ளையார்

[ விநாயகர்: வரலாறு ]

Do you know the benefits of the seeds under every tree? - Arasamara Pillaiyar, Chandanama Pillaiyar, Mamara Pillaiyar in Tamil

ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா? | Do you know the benefits of the seeds under every tree?

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கேற்றாற்போல் பிள்ளையாரை குறிப்பிட்ட மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்தும் பலன் பெறலாம்

ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா?

 

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கேற்றாற்போல் பிள்ளையாரை குறிப்பிட்ட மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்தும் பலன் பெறலாம்

 

வன்னி மர பிள்ளையார் :

 

இவர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். அதிலும் வடக்கு திசை நோக்கி அருள் பாலித்தால் இன்னும் விசேஷம். அவிட்டம் நட்சத்திரம் அன்று இவரை நெல் பொரியால் அர்சித்து அபிஷேகம் செய்து வழிபடுவதோடு கன்னிப் பெண்களுக்கு தானம் கொடுத்தால் திருமணம் ஆகாதவரகளுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும்.

 

வில்வமர பிள்ளையார் :

 

இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு சித்திரை நட்சத்திரம் அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இந்த விநாயகரை வலம் வந்தால் பிரிந்த கணவன் மனைவியர் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் இதே விநாயகருக்கு வியாழன் புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

அரசமர பிள்ளையார் :

 

இவர் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்தால் பயிர் விளைச்சல் பெருகும் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும் பணக்கஷடம் தீரும்.

 

ஆலமர பிள்ளையார் :

 

இவர் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு மகம் நட்சத்திரம் அன்று இவருக்கு 5 வகை சித்திரான்கள் படைத்து தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

 

வேப்பமர பிள்ளையார் :

 

இவர் கிழக்கு நோக்கி இருப்பது விசேஷம் உத்திராட்டதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய்,விளக்கெண்ணெய், பசுநெய் ஆகிய 5 வித எண்ணெய் தீபமான "பஞ்சதீபம்" ஏற்றி வழிபட மனத்திற்க்கு பிடித்த வரன் அமையும், அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்புரியும் நிலை அகலும்.

 

நெல்லிமர பிள்ளையார் :

 

பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெயை கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும் பெண் குழந்தைக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். மன சாந்தியும் கிடைக்கும்.

 

மாமர பிள்ளையார் :

 

கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்ட 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும் விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.

 

நாவல்மர பிள்ளையார் :

 

இவர் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம் ரோகினி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டுவர பிரிந்த தம்பதியினர் குடுங்பங்கள் உறவுகள் ஒன்று சேருவர்.

 

புன்னைமர பிள்ளையார் :

 

ஆயில்யம் நட்சத்திரம் அன்று இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதோடு ஏழை நோயாளிக்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன் மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும் தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

 

இலுப்பை மர பிள்ளையார் :

 

ரேவதி நட்சத்திரம் அன்றும் செவ்வாய்கிழமைகளிலும் இவருக்கு பசு நெய்யை கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்கு உட்பட்ட சிறுமியரகளுக்கு அளித்துவர தனித்து வாழும் முதியவர்கள் பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும் மிக உயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் எந்தவித விபத்துக்கள் இன்றி நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

 

மகிழமர பிள்ளையார் :

 

அரிய விநாயகரான இவரை அனுஷம் நட்சத்திரம் அன்று மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்துவர ராணுவம் வெளிநாடுகளில் உள்ளோர் நலமாக இருப்பார்கள் ராணுவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான வாழ்வை பெறுவார்கள்.

 

சந்தனமர பிள்ளையார் :

 

மிக மிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட அரி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும் புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

விநாயகர்: வரலாறு : ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா? - அரசமர பிள்ளையார், சந்தனமர பிள்ளையார், மாமர பிள்ளையார் [ ] | Ganesha: History : Do you know the benefits of the seeds under every tree? - Arasamara Pillaiyar, Chandanama Pillaiyar, Mamara Pillaiyar in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்