நம் உடலைச் சுத்திகரிக்கும் முத்திரையாக இது விளங்குகிறது. சுத்தி என்றால், சுத்தப்படுத்துதல் உடலின் உட்புறத்தில் இருக்கும் உறுப்பு களில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுப் பொருட்களை இந்த முத்திரை வெளியேற்றுகிறது. இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
சுத்தப்படுத்தும் முத்திரை தெரியுமா?
நம் உடலைச்
சுத்திகரிக்கும் முத்திரையாக இது விளங்குகிறது. சுத்தி என்றால், சுத்தப்படுத்துதல்
உடலின் உட்புறத்தில் இருக்கும் உறுப்பு களில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுப்
பொருட்களை இந்த முத்திரை வெளியேற்றுகிறது. இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய
வேண்டும்.
நாம் உண்ணும் உணவு உள்ளே
சென்று ஜீரணமாகிறது. அந்த நிலையில், சில நச்சுப் பொருள்களும், கழிவுப் பொருள்களும்
உண்டா கின்றன. கழிவுப் பொருள்கள் வெளியேறிவிட்டாலும், உடலில் சிறிதளவு
தங்கியிருக்கும். இதனால் உடலில் பலவித நோய்கள் உண்டாகின்றன. இந்த நச்சுப்
பொருள்களை அகற்றவும், தீய பழக்கங்கள் மாறவும், எதிர்மறையான குண இயல்புகளை மாற்றவும் இந்த முத்திரை
உதவுகிறது. மனத்தில் ஏற்படும் இனம்புரியாத பய உணர்வுகளும் அகலும்.
சாதாரணமாக நாம் உபவாசம்
இருப்பதுண்டு. உபவாசத்துடன் இந்த முத்திரையைச் செய்தால் அதிகப் பயன் உண்டு.
கட்டை விரலால் மோதிர
விரலின் மூன்றாவது அங்கு லாஸ்தியை (மூன்றாவது கீழ்பகுதியை) மெதுவாகத் தொட
வேண்டும். பிறகு, சிரிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். ஒரே நேரத்தில் இரண்டு
கைகளிலும் செய்யலாம்.
அமர்ந்த நிலையிலோ அல்லது
நின்ற நிலையிலோ செய்யலாம். மல்லாந்து படுத்துக்கொண்டும் செய்யலாம். தினமும் 15
நிமிடங்கள் செய்யலாம். உபவாசத்தின்போது, ஒரே நாளில் மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்யலாம்.
மோதிர விரல் என்ற நிலமும், கட்டை விரல் என்ற நெருப்பும் சேரும்போது, உடலில் உள்ள கழிவுப்
பொருள்கள் அழிகின்றன.
இந்த முத்திரையைச்
செய்யும் காலத்தில் போதுமான ஓய்வு அவசியம். இந்த நாள்களில் எளிய உணவுகளை, எளிதில் ஜீரணமாகக்கூடிய
உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, முட்டைக் கோஸ், சாதம், நீராவியில் வேகவைத்த பொருள்கள் உகந்தவை. போதுமான அளவு
தண்ணீர் குடிப்பது அவசியம். முட்டைக்கோஸ், கல்லீரலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் சக்தி
படைத்தது. இந்த முத்திரை, மூளையை சீராகச் செயல்பட வைத்து, மனத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது.
1. உடலில் உள்ள
எல்லாவிதமான நச்சுப் பொருள்களும் வெளியேற்றப்படும்.
2. ஒரு மனிதனை, உடல் ரீதியாக, மன ரீதியாக, ஆத்ம ரீதியாக
சுத்தமடையச் செய்கிறது.
3. நோய்கள் குணமாகும்.
4. உடல் புத்துணர்ச்சி
பெறும்.
5. வயிறு சுத்தமாவதால்
குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சுத்தப்படுத்தும் முத்திரை தெரியுமா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Do you know the cleaning brand? - Recipe, Benefits in Tamil [ ]