எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா?

குறிப்புகள்

[ சுவாரஸ்யம்: தகவல்கள் ]

Do you know the glories about the number seven? - Tips in Tamil

எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா? | Do you know the glories about the number seven?

ஏழு முனிவர்கள் `சப்த ரிஷிகள்' என ஒரு தொகுப்பாகக் கூறப்படுகின்றனர். குதிரைகள் ஏழு வகைப்பட்டவை. சப்த கன்னியர் எனப் புனித கன்னியர் எழுவர்.

எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா?

ஏழு முனிவர்கள் `சப்த ரிஷிகள்' என ஒரு தொகுப்பாகக் கூறப்படுகின்றனர்.

குதிரைகள் ஏழு வகைப்பட்டவை.

சப்த கன்னியர் எனப்

புனித கன்னியர் எழுவர்.

இப்படி வகைப்படுத்தப்படும் அத்தனையும் நடுநடுங்கிய சந்தர்ப்பம் ஒன்று உண்டு என்கிறார்

கம்பர் தம் ராமாயணத்தில்.

ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் அம்பால் ராமன் வீழ்த்தக் கூடுமோ என வினவுகிறான் சுக்கிரீவன்.

அப்படி வீழ்த்த முடியுமானால் ராமனால் வாலியை வெல்ல இயலும் என்பது சுக்கிரீவன் கருத்து.

ஆனால் அங்கிருந்த ஏழு மராமரங்களில் ஒன்றையல்ல,

ஏழையுமே தன் அம்பால்

துளைக்கிறான் ராமன்.

ராமபிரானின் அத்தகைய

மாவீரத்தை ஒரு பாடலில் இலக்கிய நயத்தோடு பேசுகிறார் கம்பர்.

ராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தபோது ராமனின் கணைக்கான இலக்கு

ஏழு என்பதாக இருக்குமானால்

ஏழாக இருக்கும் அனைத்தும் வதைக்கப்படுமே என ஏழின் தொகுப்பாய் அமைந்த அனைத்துப் பொருட்களும் மனிதர்களும் நடுங்கினார்களாம்.

ஏழு கடல்கள், ஏழு உலகங்கள், ஏழு மலைகள் நடுங்கின.

சப்த ரிஷிகள் எனப்படும்

ஏழு முனிவர்கள்,

ஏழு வகைப்பட்ட புரவிகள்,

சப்த கன்னிகைகளான

ஏழு மங்கையர் என நடுங்காத

ஏழின் தொகுப்பே இல்லையாம்....

`ஏழு வேலையும் உலகம்மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி

ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கின என்ப,

ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம்? என்றெண்ணி...’

இந்தப் பாடலில் நடுங்கியதாகச் சொல்லப்படும் சப்தரிஷிகள் யார்யார் தெரியுமா?

`விஸ்வாமித்திரர், காசியபர், பரத்வாஜர், கெளதமர், அகஸ்தியர், அத்ரி, பிருகு' ஆகியோரே அவர்கள்.

(சில பட்டியல்களில் இந்த வரிசையில் உள்ள ஓரிருவருக்கு பதிலாக வேறு சிலர் இடம்பெறுவதுண்டு.)

நம் இந்து திருமணத்தில் சப்தபதி என்றொரு கார்யக்ரமம்உண்டு.

திருமாங்கல்யதாரணம் முடிந்தாலும்

சப்தபதி சடங்கும் நிறைவேறினால்தான் கல்யாண வைபவம்

பூர்த்தியானதாகக் கருதப்படும்....

மணமகன் மணப்பெண்ணின்

வலது காலைத் தன் கைகளால் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்யவேண்டும்.

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு மந்திரம் சொல்லப்படும்.

`உணவு குறையின்றிக் கிடைக்கவும்,

உடல்வலிமை அதிகரிக்கவும்,

விரதங்களை அனுஷ்டிக்கவும்,

மனச்சாந்தி கிட்டவும், பசுக்கள் முதலிய பிராணிகளிடம் அன்பு பாராட்டவும்,

எல்லா மங்கலங்களும் கிட்டவும்

சுபகாரியங்கள் ஹோமங்கள் போன்றவை நடைபெறவும்

பகவான் உன்னைப்

பின்தொடரட்டும் என்பதே

சப்தபதி எனும் சடங்கில்

உச்சரிக்கப்படும்

மந்திரங்களின் சாராம்சம்....

`ஏழுமலை வாசா வெங்கடேசா' எனத் திருப்பதிப் பெருமாளைப்

போற்றிப் புகழ்கிறோம்....

அவர் ஏழுமலையில் வாஸம் செய்கிறார்.

அதற்கும் ஒரு புராணக் காரணம் சொல்லப்படுகிறது.

கண்ணன் துவாபரயுகத்தில்

ஏழு நாட்கள் கோவர்த்தனகிரியைத் தாங்கி நின்றான்.

ப்ரத்யுபகாரமாக

அதே கோவர்த்தனகிரி

கலியுகத்தில்

ஏழுமலையாக நின்று கண்ணபிரானாகிய

வெங்கடேசனைத்

தாங்குகிறதாம்.....

அதோடு நில்லாது

நம் காலக்கணக்கில் கூட

ஏழு இடம்பிடிக்கிறது.

ஒரு வாரம் என்பது ஏழு நாட்களை உள்ளடக்கியது.

ஏழுபிறவிகள் உண்டு என்று இந்து மதக்கோட்பாடே. ...

ஓர் ஆன்மா ஏழு பிறவிகள் எடுத்த பின்தான் இறைவனிடம் நிரந்தரமாகச் சேர்ந்து மறுபிறவியே இல்லாத நிலையை அடைய முடியும் என்பது

நம் திடகாத்திரமான

நம்பிக்கை.

ஏழு பிறவிகள்

தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்கள்

என்பவையே அவை.

ஐந்து பிறவிகளைத் தாண்டி ஆறாம் பிறவியான மனிதப் பிறவியை

இப்போது நாம் அடைந்துள்ளோம்....

இதில் பாவச் செயல் புரியாது வாழ்ந்தால்

தேவ நிலையையும்

பின் இறைநிலையையும்

நாம் அடைய இயலும்இயலும். ..

பாவச் செயல் புரிந்தால்

மறுபடியும் ஏழு பிறவிச்சுழலில்

சிக்க வேண்டும்.

ஏழு பிறவிகளிலும் கண்ணனையே நினைத்திருப்பேன் என்று திருப்பாவையில்

திருவாய் மலர்ந்தருளுகிறாள் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்....

`சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து

உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ

குற்றேவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும்

ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று....

திருக்குறளின்

ஒவ்வொரு குறளுமே

ஏழு என்னும் எண்ணைப் போற்றி எழுதப்பட்டதுதான்.

எப்படி என்றால்

திருக்குறளின் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில்

ஒவ்வொரு குறட்பாவும்

ஏழு சீர்களைக் கொண்டுதானே திகழ்கின்றன?....

கம்பராமாயணத்தில்

ராமபிரானுக்குப்

பதினான்கு ஆண்டு வனவாசம் என்பதை ராமபிரானிடம்

அறிவிக்கிறாள் கைகேயி.

கம்பர் அந்த இடத்தில் கைகேயி கூறுவதாக,

அவள் பதினான்கு ஆண்டு வனவாசம் எனக் குறிப்பிடவில்லை.

`இரண்டு ஏழாண்டுகள்

வனவாசம்' என்கிறாள்....

`ஆழிசூழ்

உலக மெல்லாம்

பரதனே ஆள நீபோய்த்

தாழிருஞ்சடைகள் தாங்கித்

தாங்கரும்

தவம்மேற்கொண்டு

பூழிவெங்கானம் நண்ணிப்

புண்ணியத் துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டில் வாவென்று இயம்பினான்

அரசன் என்றாள்!’

இயற்கையும் ஏழைத்தான்

நம் கண்முன் நிறுத்துகிறது....

ஆகாயத்தில் தோன்றும் வானவில்லின் வண்ணஜாலங்கள் மொத்தம் ஏழு.

நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என

மழைக் காலத்தில்

ஏழு வண்ணங்களால் ஆகிய வில்லை ஆகாயத்தில்

கண்டு மகிழ்கிறோம் நாம்....

கண்ணுக்கு சுகம்தருவது

வானவில்லின் நிறங்கள் மட்டுமல்ல,

காதுக்கு சுகம்தரும்

சங்கீதத்தின் ஸ்வரங்களும்

ஸ ரி க ம ப த நி என ஏழுதான்.

இந்த ஏழுமே விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகளைச் சார்ந்து புனையப்பட்டவை.

மயில் (ஸ), மாடு (ரி)ஆடு (க), புறா (ம), குயில் (ப), குதிரை (த), யானை (நி) ஆகியவற்றின் இயற்கையான ஒலிகள்

இந்த ஸ்வரங்களோடு இணைந்து செல்லக் கூடிய தன்மை படைத்தவை.....

கர்நாடக இசையில் ஸரிகமபதநி என்று சொல்லப்படும்

இதே ஸ்வரங்களுக்குப்

பழைய தமிழில்

அழகிய பெயர்கள்

சூட்டப்பட்டுள்ளன.

`குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்பவையே அவை.

இன்னும் பலப்பல

காணலாம்...

காலம் போதாதே...

தீர்க்காயுஷ்மாந்பவ'...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சுவாரஸ்யம்: தகவல்கள் : எண் ஏழு பற்றிய மகிமைகள் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Interesting: information : Do you know the glories about the number seven? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்