பிரதோஷத்தின் மகிமை தெரியுமா?

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Do you know the glory of Pradosha? - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷத்தின் மகிமை தெரியுமா? | Do you know the glory of Pradosha?

ஒரு பெண்மணி தன் இளம் பாலகனுடன் ஆலயத்திற்கு வந்து காளேசுவரை வணங்கி விட்டு தன் இல்லம் திரும்பினாள்.

பிரதோஷத்தின் மகிமை தெரியுமா?

ஒரு பெண்மணி தன் இளம் பாலகனுடன் ஆலயத்திற்கு வந்து காளேசுவரை வணங்கி விட்டு தன் இல்லம் திரும்பினாள். அந்த பாலகன் சிவலிங்க நினைவாக ஒரு கல்லை எடுத்து வைத்து சிவ லிங்கமாக பாவித்து தன் இரு கண்களையும் மூடி தியானித்தான். அப்போது அவன் தாய் அவனை உணவு உண்ண அழைத்தாள். அதை சிறுவன் செவிமடுக்கவில்லை.

கோபம் கொண்ட தாய் கல்லைத் தூக்கி எறிந்தாள். தூக்கி எறியப்பட்ட கல் நவரத்தின சிவலிங்கமாய் ஜொலித்ததுடன், வீடு முழுக்க பொன்னும் பொருளும் நிரம்பியது. பிரதோஷத் திருநாள் என்பதால் கல்லெல்லாம் நவரத்னமானது. அந்நாட்டு மன்னனே பாலகன் இல்லம் வந்து சிவலிங்கத்தை வணங்கினான்.

இது பிரதோஷ விரத பூஜையின் மகிமையே!


பிரதோஷ மகிமை

பிரதோஷகாலத்திற்கும் மகாலட்சுமிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். திருப்பாற்கடலைத் தேவர்கள் கடைந்த நாட்களான ஏகாதசி, துவாதசி, திரயோதசி நாட்களில் தான் பாற்கடலிலிருந்து பல பொருட்கள் தோன்றியிருக்கின்றன. அப்படி தேவர்கள் பாற்கடலை கடையத் தொடங்கியபோது சிவனருள் பெறாமல் முதலில் திருப்பாற் கடலை கடைந்த அன்றைய தினம் தசமி திதி. அன்று ஒருவேளை உண்டு மறுநாள் ஏகாதசி அன்று மீண்டும் கடையத் தொடங்கியபோது தோன்றியது விஷம். இதனைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டு நீலகண்டரானார்.

அவர் அந்த விஷத்தை ஏற்று உண்ட போது சில துளிகள் கீழே சிந்தின. அவைகளே தேள், நட்டுவாக்கிளி, பூரான் முதலிய விஷ ஐந்துக்களும் நச்சுவேகம் பாதித்த பிரமனின் படைப்பில் தான் கொலை, களவு, முதலியவற்றைச் செய்யும் கொடிய மனிதர்கள் தோன்றினார்கள்.

சிவனருள் பெற்று இரண்டாம் முறையாக பாற் கடலைக் கடைந்தபோது முதலில் காமதேனு என்ற பசு தோன்றியது. இந்த பசு பார்வதிக்கு வாகனமாக அமையும். மேலும் பாற்கடலைக் கடைந்தபோது உச்சை சிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இதைத் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அடுத்ததாக ஐராவதம் தோன்றியது. அந்த யானை இந்திரனின் வாகனமாயிற்று. தொடர்ந்து கடைந்தபோது ஹரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்கள் கிடைத்தன. இந்த ஐந்து மரங்களே பஞ்சதருக்கள் எனப்படும். இவற்றில் கற்பக மரம் தன் நிழலில் இருந்து வேண்டுபவருக்கு வேண்டுவன எல்லாம் தருவது. மற்ற நான்கு மரங்களும் பூஜைகளுக்கான புஷ்பங்களை அளித்தது. இவற்றையும் தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாக கவுஸ்தபம் எனும் ஒளிவீசும் மாலை தோன்றியது. இதனை திருமால் ஏற்றுக் கொண்டார். அடுத்ததாக மூதேவி தோன்றினாள். சற்று அழகில் குறைந்த இவளை யாரும் ஏற்கவில்லை. எனவே பூவுலகில் வந்து தங்கினாள். இவளை ஜேஷ்டாதேவி என்பர்.

அடுத்ததாக ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்களான அறுபது கோடி தேவமாதர்கள் தோன்றினார்கள். அவர்களைத் தேவர்கள் தங்கள் மனைவியர்களாக ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக மேதுவாகிய சுராதேவி என்ற அழகுள்ள பெண் தனது எண்ணற்ற தோழியருடன் தோன்ற அவளையும், அவளுடைய தோழியரையும் அசுரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அவளையடுத்து எல்லோருக்கும் இளையவளாக ஸ்ரீ என்கிற மகாலட்சுமி மணமாலையைக் கையில் ஏந்தியவளாக தோன்றினாள். திருமாலிடம் சென்று அவருக்கு மாலையிட்டு அவருடைய தேவியானாள்.

அவளுக்குப் பின்னர் சந்திரன் வெளிப்பட்டான். அவனைத்தான் சிவன் தன் தலையில் சூடியிருக்கிறார். கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை தான் சோமவார விரதமாக கடைப்பிடிக்கிறார்கள். இந்தவிரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் இந்த சோம வார விரதத்தை கடைப்பிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பிடித்து விட்டான். இந்தளவுக்கு சோம வார விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோமவாரம் விரதம் இருப்பவர்கள் எனக்கு பிடித்தமானவர்கள் என்கிறார் சிவன். பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் தான் அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்கள். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

வசிஷ்டர் சோமவார விரதம் இருந்து கற்புக்கரசியான அருந்ததியை மணந்தார்.

சந்திரவர்மனுடைய மகள் சியமந்தினிக்கு ஜாதகத்தில் சிறுவயதில் கணவனை இழந்து விடுவாள் என்று இருந்தது. மன்னனும் பல முனிவர்களை கலந்தாலோசித்தான். யக்ஞ வல்லியர் என்ற முனிவர் அவளை சோம விரதம் இருக்கக் கூறினார். அதன்படி அவளும் விரதம் இருக்க, பின்னாளில் நளமகராஜாவின் பேரன் சந்திராங்கதனான இந்திரசேனனின் மகனுக்கும் விவாகம் நடந்தது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடியபோது நீர்ச்சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது. அவள் அனுசரித்த சோமவார விரதத்தின் பலனாய் நல்ல கன்னியர் காப்பாற்றினார். பின் தன் கணவனுடன் சோமவார விரதம் அனுஷ்டிக்கத் தொடங்கினாள். அப்படி சந்திரனுக்குப் பிறகு ஸ்யமந்தக மணி தோன்றியது. அது சூரியன். ஸத்ரா ஜித் என்பவர்களிடம் கைமாறி பிறகு கண்ணனை அடைந்தது. தன்வந்திரி, ராகு, கேது தோன்றினார்கள். அன்றைய தினமான ஏகாதசி இரவு முழுவதும் உறக்கமின்றி பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதசியன்று அதி காலையில் அமிர்தம் தோன்றியது. அதனைத் தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடிப்பாடிக் கழித்தனர்.

மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னிக்க வேண்டினார்கள். சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கொண்டு கயிலையில் அன்று மாலை பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகை காணத் திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதனைத் தரிசித்து வணங்கினார்கள். அன்று முதல் பிரதோஷ வேளையில் வழிபடுவது பாவத்தை போக்கும் நேரம் என்றாயிற்று.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷத்தின் மகிமை தெரியுமா? - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Do you know the glory of Pradosha? - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]